உலகம்

PEO TV BIZ என்றபெயரில் தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தீர்வு வழங்கவுள்ள PEO TV

இந்நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையின் வர்த்தக இடங்களில் தொலைக்காட்சி சேவையின் தேவையை வழங்குவதற்காக PEO TV BIZ என்றபெயரில் மிகக் கவர்ச்சிகரமான தீர்வொன்றை வழங்குவதற்கு PEO TV நடவடிக்கை எடுத்துள்ளது.


இதன்படி குறித்த வர்த்தகத் தேவைக்கு PEO TV செயல்முறை மூலம் 5 தொலைக்காட்சிகள் தொடக்கம் 15 வரை எண்ணிக்கையில் ஒரே ஃபைபர் இணைப்பு மூலம் PEO TV சேவையை பெற்றுக்கொள்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அது வரையும் FTTH செயல்முறை மூலம் ஒரே தடவையில் 3 தொலைக்காட்சி இயந்திரங்கள் வரை அர்ப்பணிக்கப்பட்ட (குறிப்பாக ஒதுக்கப்பட்ட) ஃபைபர் இணைப்பு ஊடாக ஒரே தடவையில் 15 தொலைக்காட்சி இயந்திரங்களுக்கு மேல் FTTH சேவை வழங்கப்பட்டது.

இதற்கு இடைப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து செயற்படுகின்ற PEO TV மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகள் மீது குறித்த இடங்களில் தொலைக்காட்சி இயந்திரங்கள் பலதிற்கும் ஒரே தடவையில் சேவையை வழங்குவதற்காக மிகப் பொருத்தமான தீர்வொன்று வழங்கப்படுகிறது.

இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மத்திய தரத்திலான ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா இல்லங்களுக்கான கேள்வி அதிகரித்து வருகின்ற காலத்தில் PEO TV போன்ற தொலைக்காட்சி சேவை ஒன்று அங்கு நிறுவப்பட்டிருப்பது கட்டாய தேவையாக மாறியுள்ளது.

இதன்போது ஒரு அறைக்கு ஒன்று என்ற வகையில் PEO TV தொலைக்காட்சி சேவையை பெற்றுக்கொள்வது நடைமுறைச் சிக்கல்கள் பலதையும் ஏற்படுத்துவதோடு இவ்வாறு ஒரு ஃபைபர் இணைப்பு அனைத்து தொலைக்காட்சிகளுக்குமான தேவையை பூர்த்தி செய்து கொள்வது இதற்கு சிறந்த தீர்வாக அமையும்.

பல்பொருள் அங்காடிகள் வேறு காட்சியகங்கள் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றுக்கு தொலைக்காட்சி சேவையை பெற்றுக் கொள்வதற்கு இந்த PEO TV BIZ பொருத்தமான தீர்வாகும்.

PEO TV என்பது நிலையான அலைவரிசை ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தொலைக்காட்சி சேவை வழங்கல் என்பதால் மழை போன்ற காலநிலை சூழலில் எந்த ஒரு ஒளிபரப்பு தடங்கலும் ஏற்படாத நம்பிக்கையான சேவையாகும்.

அதேபோன்று PEO TV சேவையை பெற்றுக்கொள்ளும்போது தமது வாடிக்கையாளர்களின் தேவைக்கு அமைய முக்கியமாக தயாரிக்கப்பட்ட பக்கேஜ்களை தேர்வு செய்யும் சந்தர்ப்பம் வர்த்தகர்களுக்கு கிடைக்கும். அடிப்படை முதலீடு இன்றி அல்லது மிகக் குறைந்த அடிப்படை முதலீடு ஒன்றின் மூலம் இந்த சேவையை பெற முடியுமாக இருப்பதும் சிறப்பம்சமாகும். PEO TV சேவையை இணைக்கும்போது டிஸ்க் அல்லது அன்டெனா ஆகியன பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் ஹோட்டல் அல்லது வர்த்தக இடங்களில் பார்வை மற்றும் அழகுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

இதுபோன்ற காரணங்கள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளும்போது PEO TV மூலம் வழங்கப்படுகின்ற PEO TV BIZ என்ற இந்த வழங்கல் கொண்ட தனி இணைப்பு இலங்கை வர்த்தகத் துறையில் இன்றைய காலத்தின் தொலைக்காட்சி சேவையின் தேவயை சிறப்பாக பூர்த்தி செய்கின்றது.

Hot Topics

Related Articles