மனித விற்பனைக்கு எதிரான ஐந்தாண்டு தேசிய செயல் திட்டத்தை இலங்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பு
Sri Lanka has officially launched its National Strategic Action Plan (2026–2030) to combat human trafficking, reinforcing coordinated prevention, victim protection, prosecution, and partnerships under the leadership of the National Anti-Human Trafficking Task Force.
மனித விற்பனைக்கு எதிரான முயற்சிகளை வலுவூட்டுவதற்கான ஐந்தாண்டு செயல் திட்டத்தை உத்தியோகபூர்வமாக இலங்கை ஆரம்பித்து வைக்கின்றது.
மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி (NAHTTF) மனித விற்பனையை அவதானிப்பதற்கும் அதற்கெதிராக செயற்பாடுவதற்குமான தேசிய மூலோபாயத் திட்டத்தை (2026-2030) ஜனவரி மாதம் 28 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது.
இத்திட்டம் அனைத்து வகையான மனித விற்பனை முயற்சிகளையும் இல்லாதொழிப்பதற்கும் உரிய ஒருங்கிணைப்புடன் தேசிய ரீதியில் பதிலளிக்கப்படுவதை வலுவூட்டுவதற்கும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
இந்நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இடம் பெற்றதுடன், இந்நிகழ்வில் செயலணியின் தலைவரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய எயார் வைஸ் மாரஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான IOM பிரதானி கிறிஸ்டின் பார்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் இராஜதந்திரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் அத்துடன் செயலணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 23 பிரதான அரச நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
“இலங்கையில் மனித விற்பனையிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களைப் பராமரிப்பதற்கு உடனடி பாதுகாப்பு மற்றும் நீண்டகால மீட்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான, பாலின உணர்திறன் மிக்க, பிழைத்தவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை தேவைப்படுகின்றது. இதில் பாதுகாப்பான தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு மற்றும் அதிர்ச்சி-தகவலறிந்த உளவியல்
ஆதரவு (trauma-informed psychological support) ஆகியவற்றோடு கடுமையான மற்றும் பாலின வன்முறை வடிவங்களை அனுபவிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு குறிப்பாக கவனம் செலுத்துதல், சட்ட உதவி, பொருளாதார வலுவூட்டல், மீண்டும் மனிதவிற்பனைக்கு ஆளாவதை தடுப்பதற்கு திறன் விருத்தி ஆகியனவும் உள்ளடங்கும் ” எனத் தெரிவித்தார்.
மேற்படி ஐந்தாண்டுச் செயல் திட்டம் இலங்கையின் மனித விற்பனைக்கு எதிரான முன்னெடுப்புகளுக்கு மூலோபாய ரீதியிலான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைப் பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் தேசிய பல்பங்குதாரர் பொறிமுறையாகப் பணியாற்றும் செயலணிக்கு தலைமைத்துவம் வகிக்கும் பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் வெளியிடப்பட்டது.
செயலணியின் தலைவரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய எயார் வைஸ் மாரஷல் சம்பத் துய்யகொன்தா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணியின் தலைவரென்ற வகையில் நாம் அனைவரினதும் மனித மாண்பு. பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு பெரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றோம். இந்தத் தேசிய செயல் திட்டம் உரிய ஒருங்கிணைப்புடன் நிலைபேறான நடவடிக்கைக}டாக மனித விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கெதிராகப் போராடுவதற்கும் நாம் கொண்டுள்ள கூட்டுப் பொறுப்பினை பெரிதும் எடுத்தியம்புகின்றது. பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டுதல், அனைத்துத் தரப்புகளுக்குமிடையே ஒத்துழைப்பை
வலுப்படுத்துதல், வகைப் பொறுப்பினை உறுதிப்படுத்துதல் போன்றவையூடாக சுரண்டலுக்கு இடமளிக்கப்படாத, குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துகின்ற மற்றும் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய முழுiயான பாதுகாப்பு மற்றும் உதவிகள் கிடைக்கின்ற ஓர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அயராது பாடுபடுகின்றோம்” என்று தெரிவித்தார்.
புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட செயல் திட்டம் (2026-2030) மனித விற்பனையை தடுத்து நிறுத்துதல், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் மற்றும் உதவுதல்ரூபவ் சட்ட அமுலாக்கத்துடன் தொடர்புடைய பதிலளிப்புகளை வலுவூட்டுதல் போன்ற வகைப் பொறுப்பினை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கான ஒன்றிணைந்த தேசிய
சட்டகமொன்றை உருவாக்குகின்றது. இத்திட்டமானது செயலணிரூபவ் சிவில் சமூக அமைப்புகள்ரூபவ் முன்னிலையிலுள்ள பதிலளிப்பவர்கள் மற்றும் சர்வதேச பங்குதாரர்கள் ஆகியோருடனான விரிவான கலந்துரையாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டம் இவ்விடயத்துடன் தொடர்புடையதாக இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட செயல் திட்டங்களிலிருந்து
கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நியமங்களுக்கு இசைந்தொழுகும் வகையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன்ரூபவ் இணையவெளியை பயன்படுத்தி மனித விற்பனை, ஆட்சேர்ப்பு மற்றும் சுரண்டல் போன்றவற்றை மேற்கொள்ளும் பொருட்டு டிஜிடல் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை பிரயோகித்தல் போன்ற அதிகரித்து வரும் சவால்களை நிவர்த்தி செய்ய முயல்கின்றது.
“இலங்கை அரசாங்கத்துடன் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில் இப்பணியின் ஊடாக இச்செயல் திட்டத்தை மேம்படுத்துவதட்கும் தேசிய அமைப்பு முறைகளை வலுப்படுத்துவதற்கும் ஒத்தாசை வழங்குவதற்காக தமக்கு வாய்ப்புக் கிட்டியமை தொடர்பாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு பெருமிதமடைகின்றது. அதன் விளைவாக எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையுடன் கூடியரூபவ் நடைமுறைச் சாத்தியமான உலகளாவிய நியமங்களை அடிப்படையாகக் கொண்டதாயினும் இலங்கையின் யதார்த்தப் போக்குகள் மீது உறுதியாக வேரூயஅp;ன்றியுள்ள இத்திட்டம் உதயமாகியுள்ளது.” என இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான IOM பிரதானி கிறிஸ்டின் பார்கோ தெரிவித்தார்.
“நாங்கள் பொது நோக்குடன் ஒன்றிணைந்து மனித விற்பனையை இல்லாதொழிப்பதற்கான இலக்கினை அடைந்து கொள்ளும் பயணத்தில் ஒரு படி முன்னேறியிருக்கின்றோம். மேற்படி செயல் திட்டம் நான்கு பிரதான தூண்களை சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
• சமூக விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் அபாய நேர்வுக்கான வாய்ப்பினை குறைப்பதனூடாக மனித விற்பனையைத் தடுத்து நிறுத்துதல்.
• விரிவான உதவிச் சேவைகளுக்கான அணுகல் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்டவரை மையமாகக் கொண்ட பாதுகாப்பு மற்றும் உதவிகள்.
• நிறுவனங்களுக்கிடையிலான மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் எல்லைகளுக்கிடையிலான ஒத்துழைப்பினூடான வலுவூட்டப்பட்ட புலனாய்வு மற்றும் வழக்குத் தொடர்தல்.
• NAHTTF ஊடாக ஒருங்கிணைக்கப்பட்ட சிவில் சமூகம், தனியார் துறைரூபவ் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் பிரந்திய வலைப்பின்னல்களுடன் வலுவூட்டப்பட்ட பங்காண்மை ஊடாக மேம்படுத்தப்பட்ட கொள்கைகள்ரூபவ் தரவுகள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புப் பொறிமுறை.
மனித விற்பனையை கண்காணித்தல் மற்றும் அதற்கெதிராகப் போராடுதலுக்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்தினைப் (2026-2030) பயனுறுதி மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவி வழங்கும் பொருட்டு ஐஆழு அமைப்புரூபவ் இலங்கை அரசு மற்றும் Nயுர்வுவுகு நெருங்கிய பங்காண்மையுடன் செயற்படும். இந்த அமைப்பு மனித விற்பனைக்கு எதிரான முன்னெடுப்புக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் ஏதுவான அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளைரூபவ் இது தொடர்பான முன்னிலை பதிலளிப்பாளர்களுக்காக விரிவான ஒத்துழைப்புக்களை உறுதிப்படுத்துதல்ரூபவ் உள்ளக மற்றும் நாடுகளுக்கிடையிலான மனித விற்பனையிலிருந்து மீண்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல்ரூபவ் நாடு திரும்புதல்
மற்றும் மீள ஒருங்கிணைத்தல் போன்ற சேவைகளை வழங்குவதனூடாக தேசிய மற்றும் மாவட்ட மட்டத்திலான பொறிமுறைகளை வலுவூட்டும்.
editor