சிங்கர் உயர் பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் தொழில்னுட்ப தீர்வுகளை வழங்குவதற்காக Hikvision உடன் கைகோர்ப்பு

Singer Sri Lanka partners with Hikvision to introduce advanced CCTV, AI-powered security and smart technology solutions to the Sri Lankan market.

சிங்கர் உயர் பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் தொழில்னுட்ப தீர்வுகளை வழங்குவதற்காக Hikvision உடன் கைகோர்ப்பு

நாட்டின் நுகர்வோர் மின் சாதனங்கள் மற்றும் தொழில்னுட்ப தீர்வுகள் பிரிவில்
நம்பிக்கையை வென்ற நாமமான சிங்கர் ஸ்ரீ லங்கா, நம்பகத்தன்மை, தரம் மற்றும்
புத்தாக்கம் போன்றவற்றுக்காக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற, உலகின் முதல் தர
CCTV வர்த்தக நாமமான Hikvision உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான தொழில்னுட்ப தீர்வுகளை சிங்கர் தொடர்ந்தும் விரிவாக்கும் நிலையில் இந்த கைகோர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது.


உள்நாட்டு சந்தையில் தனது உறுதியான விற்பனை, விநியோக மற்றும் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு வலையமைப்பு ஆகியவற்றைக் கொண்டு சிங்கர் ஸ்ரீ லங்கா இந்தப் பங்காண்மையினூடாக Hikvision இன் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற தெரிவுகளை அறிமுகம் செய்யும். சிங்கர் விற்பனைக்கு பிந்திய சேவை மற்றும் உதவிச் சேவைகளை வழங்கி, வாடிக்கையாளர்கள் ஒப்பற்ற மற்றும் தங்கியிருக்கக்கூடிய அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்யும்.


இந்த கைகோர்ப்பினூடாக, இலங்கையில் Hikvision இன் பரந்த தீர்வுகள் அறிமுகம் செய்யப்படும். அதில் CCTV கமராக்கள் மற்றும் ரெக்கோடர்கள், smart access control மற்றும் video intercom systems, interactive displays மற்றும் monitors மற்றும் போன்றன அடங்கியிருக்கும். வழங்கப்படும் தீர்வுகளில் மேம்படுத்தப்பட்ட பகுப்பாய்வு, மற்றும் உணரல் ஆற்றல்கள், அடுத்த தலைமுறை AI மற்றும் தரவு அடிப்படையில் வழிநடத்தப்படும் தொழில்னுட்பங்கள் போன்றவற்றுடன் மதிநுட்பமான போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பான நகர பிரயோகங்கள் போன்றனவும் அடங்கும்.


நெகிழ்வாக மற்றும் இலகுவாக பொருத்தக்கூடிய தீர்வுகளுக்கான கேள்வி அதிகரித்துச்
செல்லும் நிலையில், cable-free WiFi கமராக்கள் அடங்கலான தெரிவு செய்யப்பட்ட தயாரிப்பு பிரிவுகளும் அறிமுகம் செய்யப்படும்.


இந்த அறிவிப்பு தொடர்பில் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியின் குழும முகாமைத்துவ பணிப்பாளர் மஹேஷ் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “புத்தாக்கமான மற்றும்
நம்பிக்கையை வென்ற தொழில்னுட்ப தீர்வுகளுக்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்னோடியான Hikvision உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். நடைமுறைச் சாத்தியமான, எதிர்காலத்திற்கு பொருத்தமான தீர்வுகளை இல்லங்கள் மற்றும் வியாபாரங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்யக்கூடிய நிலைக்கு எம்மை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை இந்த நகர்வு பிரதிபலித்துள்ளது. சிங்கரின் பரந்த
வலையமைப்பு மற்றும் நம்பகமான சேவை போன்றவற்றினூடாக, இந்த உலகத் தரம்
வாய்ந்த தொழில்னுட்பங்களை இலங்கையில் பரந்தளவில் பெற்றுக் கொள்வதை உறுதி
செய்யக்கூடியதாக இருக்கும்.” என்றார்.


Hikvision ஸ்ரீ லங்காவின் பணிப்பாளர்/இலங்கைக்கான முகாமையாளர் யசந்த ஹென்னாயக்க குறிப்பிடுகையில், “புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள் போன்றவற்றில் எமது நோக்கத்தை பகிர்ந்து கொள்ளும் நிறுவனமாக சிங்கர் ஸ்ரீ லங்காவுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பங்காண்மையினூடாக இலங்கையில் எமது பிரசன்னத்தை விரிவாக்கம் செய்வதற்கு உறுதியான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், உயர் தரமான, மதிநுட்பமான தீர்வுகளை நன்கு கட்டியெழுப்பப்பட்ட மற்றும் நம்பிக்கையான விநியோக வலையமைப்பினூடாக பெற்றுக்
கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.” என்றார்.


புத்தாக்கமான மற்றும் நம்பகமான தொழில்நுட்ப தீர்வுகளின் முன்னோடியான வழங்குனர் எனும் இலங்கையின் நிலையை சிங்கர் ஸ்ரீ லங்கா இந்தப் பங்காண்மையினூடாக மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. அத்துடன், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தக நாமங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்னுட்பங்களை இலங்கையின் நுகர்வோர் மத்தியில் கொண்டு வரும் தமது அர்ப்பணிப்பையும் மீள உறுதி செய்துள்ளது.