சிங்கர் மூலம் Apple MacBook Neo Series இலங்கையில் அறிமுகம்

Singer Sri Lanka PLC has launched the new Apple MacBook Neo Series in Sri Lanka, featuring the powerful A18 Pro chip, Liquid Retina display, and up to 16 hours of battery life.

சிங்கர் மூலம் Apple MacBook Neo Series இலங்கையில் அறிமுகம்

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, புதிய Apple MacBook Neo Series ஐ இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு வினைத்திறன் மிக்க, சிறந்த வடிவமைப்பு மற்றும் தினசரி பாவனைக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்ட Apple இன் புத்தம் புதிய லப்டொப் அனுபவத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.


புதிய MacBook Neo Series இல் Apple இன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தினசரி வினைத்திறன் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், A18 Pro chip
இனால் வலுவூட்டப்பட்டுள்ளது. எளிமையான செயற்பாடுகள் முதல் கடினமான பணிகளை
முன்னெடுக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சாதனம் வேகமான
வினைத்திறன், மிருதுவான பாவனை மற்றும் சிறந்த சிக்கனத்தன்மை ஆகியவற்றை வழங்கும்.


புதிய MacBook Neo Series இன் ஆரம்ப அறிமுக விலையாக ரூ. 289,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனூடாக முன்னரை விட தற்போது பெருமளவு பரந்த வாடிக்கையாளர்களுக்கு உயர் Apple கணனி ஒன்றை இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அறிமுகம் தொடர்பில் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியின் குழும முகாமைத்துவ பணிப்பாளர் மஹேஷ் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

“தினசரி பாவனையின் போது லப்டொப்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் மற்றும் உணரப்பட வேண்டும் என்பதில் Apple தொடர்ச்சியாக மாற்றங்களை ஏற்படுத்தி வந்துள்ளது. MacBook Neo Series உடன் வினைத்திறன் மற்றும் வேறுபாடு ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் இடைவெளி மேலும் குறைந்து வருவதை நாம்
அவதானிக்கிறோம். சுலபமாகக் கிடைப்பது என்பதற்கு அப்பால், தொழில்னுட்பத்தை அதிகம் அணுகச் செய்வது என்பதில் சிங்கர் அதிகம் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களின் கொள்வனவு, சேவை மற்றும் இந்த சாதனங்களை நீண்ட காலம் பராமரிப்பது தொடர்பில் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் நாம் உறுதி செய்கிறோம்.” என்றார்.


இந்த சாதனத்தில் 13-அங்குல Liquid Retina display அடங்கியிருப்பதுடன், அதனூடாக sharp resolution, rich contrast போன்றவற்றுடன் பில்லியனுக்கும் அதிகமான வர்ணங்களுக்கு பொருந்தும் தன்மை வழங்கப்படுகின்றன. 500 nits brightness உடனான display இனால் பாவனையாளர்கள் பணியாற்றுவது, ஸ்ட்ரீமிங் செய்வது அல்லது பொருளடக்கத்தை தயாரிப்பது என எந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும் தெளிவான காட்சியம்சம் வழங்கப்படுகிறது.


இந்த சாதனம் 16 மணித்தியாலங்கள் வரையான பற்றரி காலப்பகுதியையும், வேகமான SSD
storage மற்றும் தினசரி பாவனைக்கு உகந்த அம்சங்களை வழங்குவதால், மாணவர்கள், நிபுணர்கள் மற்றும் புத்தாக்க வெளிப்பாடுகளில் ஈடுபடுவோருக்கு பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளது.


மேலும், Apple நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட்ட கட்டமைப்பினால் MacBook Neo பயன்பெறுகிறது. அதனூடாக Apple சாதனங்களிடையே சுலபமாக இணைத்துக் கொள்ளலாம்.

high-definition camera, immersive audio மற்றும் smooth macOS அனுபவம் போன்றன வழங்கப்படுகின்றன. MacBook Neo தெரிவுகள் நாடு முழுவதிலுமுள்ள சிங்கர் காட்சியறைகளில் கிடைப்பதுடன், அதன் ஒன்லைன் கட்டமைப்பிலும் பெற்றுக் கொள்ளலாம்.


வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு தொகையை ஒரே தடவையில் செலுத்தாமல், சௌகரியமாக தவணை முறை கொடுப்பனவுகளாக மேற்கொள்ளும் வசதியும் காணப்படுகிறது. 


இந்த அறிமுகத்துடன், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்னுட்பத்தை இலங்கையில் இலகுவாக அணுகல், சௌகரியம், சென்றடைவு மற்றும் வர்த்தக நாமம் அறியப்படும் உறுதிப்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதில் சிங்கர் ஸ்ரீ லங்கா தொடர்ந்தும்
கவனம் செலுத்துகிறது.