பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்தும் செயலமர்வு மட்டக்களப்பில்

பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்தும் செயலமர்வு மட்டக்களப்பில்

பெண்களதும் இளைஞர்களதும் வகிபாகம் குறித்து பல்வேறுபட்ட தரப்பிலும் விழிப்பணர்வுகளும், பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் அடைவு பட்டம் என்பது பெரிதளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பது கேள்விக்குறியே.  

Search for Common Ground – SFCG  அமைப்பானது  UNDP  நிறுவனத்தின் நிதியுதவியுடன்  அரசியலில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்கிடையில் வலையமைப்பினை உருவாக்குதல் போன்ற விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில் செயற்றிட்டங்களை கிழக்கு மாகாணத்தில்  தொடர்ந்தும் நடாத்தி  வருகின்றது. 

இத்திட்டத்தின்  பகுதியாக நேற்று 23.04.2026  ஆண் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பங்குபற்றியவர்கள் தமது பார்வையில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அரசியலில் பங்கேற்க முயலும் போது  அரசியலிலும், சமூகத்திலும் காணப்படுகின்ற சவால்களையும் அவற்றினை எதிர்கொள்வதில் உள்ள சிரமமான அனுபவங்களினையும் அதனை நிவர்த்திக்க தேவைப்படுகின்ற எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர். 

மேலும் இந்நிகழ்வில்  பெண்களது பங்களிப்பினையும் பாதுகாப்பினையும் உறுதிசெய்யும்  எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.  பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறும் போது அவர்கள் அதனை வெளிக்கொணர்வதற்கான பாதுகாப்பான சூழலில் ஆண்களது வகிபாகம் போன்றவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் திட்ட வரைவும் முன்வைக்கப்பட்டது.