DMASL டிஜிட்டல் மாநாடு 2025 : டிஜிட்டல் ஆசியாவின் எதிர்காலத்திற்கான புதிய அத்தியாயம்
The Digital Marketing Association of Sri Lanka (DMASL) proudly announces the return of its flagship digital conference for the third time, offering unmatched learning and networking opportunities—now with international participation.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த டிஜிட்டல் மாநாடு மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது என இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சங்கம் (DMASL) பெருமையுடன் அறிவித்துள்ளது.
இம்மாநாடு தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு வலுவான கற்றல் மற்றும் இணைப்பு வாய்ப்புகளை வழங்குவதோடு, முதன்முறையாக சர்வதேச பிரதிநிதர்களையும் வரவேற்கிறது என்பதில் அதுமிகு முக்கியத்துவம் உள்ளது.
“டிஜிட்டல் ஆசியாவின் எழுச்சி” என்ற கருப்பொருளில், DMASL டிஜிட்டல் மாநாடு 2025 தெற்காசியாவின் திறமைசாலி புத்திஜீவிகள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் டிஜிட்டல் புதுமையாளர்களை ஒரே மேடையில் சேர்க்கும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. இம்மாநாடு பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவித்து, டிஜிட்டல் வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 24, 25 ஆம் திகதிகளில் வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பேச்சாளர்கள், குழு கலந்துரையாடல்கள் மற்றும் நவீன டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போக்குகள் பற்றிய செயலமர்வுகள் இடம்பெறும். இது விளம்பர முகவர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள், மற்றும் வர்த்தகத் துறை தலைவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
“இலங்கை டிஜிட்டல் மாநாடு 2025 நிகழ்வானது இலட்சியம் குறித்த துணிச்சலான பிரகடனமாக அமையப்பெற்றுள்ளது. டிஜிட்டல் முதலிடம் வகிக்கும் உலகில் சந்தைப்படுத்தலின் மையமாக இலங்கை வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், மாற்றத்தைத் தூண்டி, தொடர்புகளை கட்டியெழுப்பி, வர்த்தகநாமம், உள்ளடக்கம், மற்றும் டிஜிட்டல் ஊடக புத்தாக்கம் ஆகியவற்றில் நாட்டில் வளர்ச்சி கண்டு வருகின்ற தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கு ஆசியாவின் முன்னணி சிந்தனையாளர்களை இந்த உச்சி மாநாடு ஒன்றுபடுத்துகிறது,” என்று இலங்கை டிஜிட்டல் மாநாடு 2025 நிகழ்வின் இணைத் தலைமையாளர்களான காயத்ரி செனவிரட்ண மற்றும் ஷலேந்திர மென்டிஸ் ஆகியோர் குறிப்பிட்டனர்.
இலங்கை இலங்கை சந்தைப்படுத்தல் சங்கத்தின் தலைவர் அர்ஜுன் ஜெகர் கருத்து தெரிவிக்கையில்,
“DMASL டிஜிட்டல் மாநாடு உண்மையில் பிராந்திய மேடையாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளதைக் காண்பது மிகவும் பெருமையளிக்கின்றது. தேசிய முயற்சியாக ஆரம்பித்து இது தற்போது, தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால், டிஜிட்டல் புத்தாக்கத்தின் கலங்கரைவிளக்காக வளர்ச்சி கண்டுள்ளது. முதல்முறையாக சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்கின்றமை DMASL க்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பெருமை சேர்ப்பிக்கும் ஒரு தருணமாகும். எண்ணங்கள் செயல் வடிவம் பெறும் இடமாக இம்மாநாடு அமைந்துள்ளதுடன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிராந்தியத்தின் டிஜிட்டல் எதிர்காலத்தைச் செதுக்குவோம் என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த யூனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஊடகம் மற்றும் விளம்பர செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரி சமிந்த சமரக்கோன்,
“DMASL டிஜிட்டல் மாநாடு 2025 நிகழ்வின் தலைமை அனுசரணையாளர்களாக கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். டிஜிட்டலின் ஆற்றல் என்பது வெறுமனே நுகர்வோரை எட்டுவது மாத்திரமன்றி, எங்கள் விரும்பத்தக்க வர்த்தகநாமங்களுக்கு தவிர்க்க முடியாத மேன்மையை முன்னெடுக்க கலாச்சாரம் மற்றும் சமூகங்களுடன் உண்மையிலேயே இணைந்திருப்பதாகும் என்பதில் யூனிலீவர் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. டிஜிட்டல்ரீதியாக வலுவூட்டப்பட்டுள்ள தெற்காசியாவைச் செதுக்குவதில் முக்கியமானதொரு படியாக இந்த மாநாடு அமைந்துள்ளதுடன், இப்பயணத்திற்கு பங்களிப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றார்.
DMASL டிஜிட்டல் மாநாடு 2025, தெற்காசியாவின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் நடைபெறும் மிக முக்கியமான விழாவாக அமைந்து, தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் சிந்தனை சிற்பிகள் தங்கள் அறிவை பகிர்ந்து கொள்ளும் மேடையாக திகழ்கிறது. இந்த மாநாடு, பிராந்தியத்தின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கிறது.
மேலும் விவரங்கள் மற்றும் பேச்சாளர்களின் பட்டியல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
editor