Uber சேவை தற்போது யாழ்ப்பாணத்தில் : சவாரியும், உணவு விநியோகமும் கிடைக்கின்றது
Uber, Sri Lanka’s leading ride-hailing and delivery platform, announces the launch of its services in Jaffna, marking a new milestone in its nationwide expansion strategy.
இலங்கையின் முன்னணி சவாரி மற்றும் விநியோகத் தளமான Uber, யாழ்ப்பாணத்திலும் தனது சேவைகளை ஆரம்பிப்பது குறித்து அறிவித்துள்ளதுடன், தனது நாடளாவியரீதியிலான விஸ்தரிப்பில் மற்றுமொரு சாதனை இலக்கினை நிலைநாட்டியுள்ளது.
வட மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள இச்சேவையுடன், பிரதேசவாசிகளும், வருகை தருகின்றவர்களும் தற்போது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பாதுகாப்பான, சிக்கனமான கட்டணங்களுடனான சவாரிகள் மற்றும் தேவையான உணவு மற்றும் பலசரக்கு விநியோகம் ஆகியவற்றை மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். உள்ளூர் சாரதிகள், விநியோக கூட்டாளர்கள், மற்றும் வணிகர்கள் ஆகியோருக்கு சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவித்து, உள்ளூர் பொருளாதாரத்திற்கும் இது பங்களிக்கும்.
இந்த விஸ்தரிப்பின் ஒரு அங்கமாக, நாடெங்கிலும் தமிழ் மொழி ஆதரவு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மில்லியன் கணக்கான தமிழ் பேசும் இலங்கை மக்கள் தற்போது மிகச் சிறந்த அனுபவத்தை இத்தளத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் சவாரியானாலும் சரி, வார இறுதியில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு செல்வதானாலும் சரி, அல்லது நகரத்தில் அபிமானம் பெற்ற நூலகத்திற்கு செல்வதானாலும் சரி, யாழ்ப்பாணத்தில் விரைவாகவும், சிக்கனமான கட்டணங்களுடனும் பிரயாணங்களை மேற்கொள்வதை Uber Rides இலகுபடுத்துகிறது.
லவின்ஸ் குடும்ப சைவ உணவகம், சேலம் ஆர்ஆர் பிரியாணி, அக்ஷதை உணவகம், மற்றும் மாங்கோஸ் இந்திய சைவ உணவகம் போன்ற அருகாமையிலுள்ள அபிமானத்திற்குரிய உணவகங்களிலிருந்து நண்டுக்கறி, கூழ், மற்றும் தோசை போன்ற யாழ்ப்பாணத்தில் மிகவும் நேசிக்கப்படும் உணவு வகைகளை மிக இலகுவாக தாம் இருக்கும் இடங்களுக்கே வரவழைத்து, உள்ளூர் வாசிகளும், வருகை தருகின்றவர்களுக்கும் இந்நகரத்தில் அனுபவிக்கும் வாய்ப்பினை Uber Eats தற்போது அவர்களுக்கு வழங்குகின்றது.
யாழ்ப்பாணத்தில் எந்தவொரு விநியோகத் தளமும் கண்டிராத அளவில் மிகப் பரந்த உணவக மற்றும் பலசரக்கு வணிகர்களின் தெரிவை வழங்கும் வகையில் Uber Eats சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரபலமான உள்ளூர் உணவகங்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய பலசரக்கு கூட்டாளர்கள் இச்செயலியில் இடம்பெற்றுள்ளமையும், நகரத்தின் மத்தியில் மிகவும் வலுவான விநியோக கூட்டாளர்களின் வலையமைப்பும், வாடிக்கையாளர்கள் இது வரை பெற்றிராத வகையில் மிகவும் விரைவான, மிகவும் நம்பகமான சேவை அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் Uber Eats தனது சேவைகளை அவர்களுக்கு வழங்கும்.
Uber Sri Lanka, Delievery இலங்கைக்கான முகாமையாளரான வருண் விஜேவர்த்தன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பது என்பது விசேடமானது - ஏனெனில் இது பெருமைமிக்க உணவுப் பாரம்பரியம் மற்றும் வலுவான சமூக உணர்வைக் கொண்டதொரு நகரம். உள்ளூர் சுவைகளை உண்மையாகப் பிரதிபலிக்கும் தெரிவுகளை உள்வாங்கிக் கொள்வதற்காக உணவக உரிமையாளர்கள் மற்றும் பலசரக்கு விற்பனைக் கூட்டாளர்களுடன் மிக நெருக்கமாக இணைந்து நாம் உழைத்துள்ளோம். எம்மைப் பொறுத்தவரை இது வெறுமனே விநியோகம் சார்ந்த ஒன்றல்ல - உள்ளூர் வணிகங்கள் செழிப்பதற்கு உதவும் அதேசமயம், இங்குள்ள மக்கள் நாம் நேசிக்கின்றவற்றை பெற்றுக்கொள்வதற்கான புதிய வழிமுறைகளைத் தோற்றுவிக்கும் ஒரு பணியாகும்,” என்று குறிப்பிட்டார்.
இரண்டு சக்கர, மூன்று சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலமாக வீட்டு வாசலுக்கே வந்து ஏற்றிச் செல்லும் சேவையை வழங்கும் Uber Rides, நகரத்தினுள் மக்கள் எவ்வாறு பயணிக்கின்றனர் என்பதில் நெகிழ்திறனையும், சுயாதீனத்தையும் அவர்களுக்கு வழங்குகின்றது. தங்குதடையற்ற, செயலி அடிப்படையிலான அனுபவத்தினூடாக சவாரி செல்கின்றவர்கள் தமது தேவைகளுக்கும், கையிலுள்ள பணத்திற்கும் ஏற்ப வாகனத்தைத் தெரிவு செய்ய முடியும்.
நிகழ்நேர GPS கண்காணிப்பு, சவாரியின் விபரங்களை அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், சாரதியின் அடையாளத்தை உறுதிப்படுத்தல், செயலியின் மூலம் அவசர உதவிகள், இரவுபகல் உதவி சேவை போன்ற தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பாதுகாப்பு அம்சங்களின் உதவி ஒவ்வொரு சவாரியின் போதும் கிடைக்கப்பெறுவதுடன், சவாரி செல்கின்றவர்கள் மற்றும் சாரதிகள் என இரு தரப்பினருக்கும் மிகுந்த நிம்மதியை உறுதி செய்கின்றது.
Uber Sri Lanka, Mobility இலங்கைக்கான முகாமையாளரான கௌஷல்யா குணரத்ன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “யாழ்ப்பாணத்தில் Uber Rides சேவைகளை ஆரம்பிப்பதன் மூலமாக, ‘பொத்தானை அழுத்துங்கள், சவாரியை மேற்கொள்ளுங்கள் ‘என்ற எமது வாக்குறுதியை வட மாகாணத்திற்கும் நாம் கொண்டு வந்துள்ளதுடன், தினசரி போக்குவரத்து தேவைகளை இலகுவில் மேற்கொள்ளக்கூடியதாகவும், நெகிழ்திறன் கொண்டதாகவும், மற்றும் நம்பியிருக்கக்கூடியதாகவும் மாற்றுகின்றோம். இரண்டு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ, எதுவாக இருப்பினும், சவாரி செல்கின்றவர்களுக்கும், சாரதிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிக்கின்ற வகையில் தொழில்நுட்பத்தின் பக்கபலத்துடன் ஒவ்வொரு சவாரியையும் மேற்கொள்ள முடியும். இலங்கை எங்கிலும் பாதுகாப்பான, நம்பிக்கையான போக்குவரத்தை நாம் தொடர்ந்தும் விஸ்தரித்து வருகின்ற நிலையில், இந்த சேவையின் ஆரம்பம் மிகவும் பெருமைப்படத்தக்க ஒரு முன்னோக்கிய படியாகும்,” என்று குறிப்பிட்டார்.
அண்மைய மாதங்களில் இலங்கை எங்கிலும் Uber தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்திலும் தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனுராதபுரம், மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ, மற்றும் மாத்தளை ஆகிய இடங்களுக்கு Uber Eats சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ள அதேசமயம், மேல் மாகாணத்தில் பல்வேறு நகரங்கள் மற்றும் தற்போது வட மாகாணத்திற்கு Uber Rides சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், நாடெங்கிலும் இன்னும் கூடுதலான அளவில் சமூகங்களுக்கு தனது சேவைகளை மிக அருகில் கொண்டு வருகின்றது.
editor