எச்.எஸ்.பி.சி. வங்கியின் சில்லறை வங்கி பிரிவை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கையப்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி : 2026 முதல் காலாண்டில் ஒப்பந்தம் நிறைவு
Nations Trust Bank PLC (NTB) has received approval from the Central Bank of Sri Lanka to acquire HSBC Sri Lanka’s Retail Banking business, strengthening NTB’s retail banking portfolio and expanding its customer base.
இலங்கையின் எச்.எஸ்.பி.சி. வங்கியின் (HSBC Sri Lanka) சில்லறை வங்கி சேவை பிரிவை கையகப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி (CBSL) வழங்கிய அதிகாரப்பூர்வ அனுமதியைப் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி (NTB) பெற்றுள்ளது.
இரு வங்கிகளும் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பிணைக்கப்பட்ட விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், இந்த பரிவர்த்தனை 2026 முதல் காலாண்டில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 2 இலட்சம் வாடிக்கையாளர் கணக்குகள், பிரீமியம் வங்கிப் பயனாளர்கள், கிரெடிட் கார்டுகள், சாதாரண கடன்கள் ஆகியவை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்குக் கையளிக்கப்படவுள்ளன.
இதன் மூலம் NTB, இலங்கையின் உயர்தர சில்லறை வங்கி சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒரு மூலோபாய முன்னேற்றத்தைச் சாதிக்கிறது.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பணிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹேமந்த குணதிலக்க இது குறித்து தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் அனுமதி கிடைத்ததன் மூலம் கையகப்படுத்தும் செயல்முறை தடையின்றி இடம்பெறவுள்ளது. திட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு நம்பிக்கையுடன் நகர முடிகிறது. எனத் தெரிவித்தார்.
HSBC வங்கியின் இலங்கையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் செர்ஜனோர் கூறுகையில்,
“இந்த மாற்றக் காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரமான சேவையை வழங்குவது எங்கள் முன்னுரிமை. எங்கள் ஊழியர்களும் NTB வங்கிக்கும் இடையிலான சுமுகமான மாற்றத்தை உறுதி செய்ய இரு தரப்பும் நெருக்கமாக இணைந்து பணிபுரிகின்றோம்.”இந்தக் கையகப்படுத்தல், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரீமியம் சில்லறை வங்கி சேவைகளில் முன்னணி நிலையை மேலும் வலுப்படுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த மதிப்பை வழங்கும் வங்கியின் நீண்டகால நோக்கத்துக்கும் இணக்கமானதாகும்.
editor