உலகம்

ரசிகர்களை கலங்கவைத்த சிம்ரனின் புகைப்படம்!

சினிமா பிரபலங்கள் எத்தனை வயதானலும் தன்னை இளமையாக காட்டவே விரும்புவார்கள், அதிலும் நடிகைகள், என்றும் 16 தோற்றத்தில் இருக்கவே முயற்சிப்பார்கள்.

 

இவர்களுக்கு மத்தியில் சால்ட் அன் பெப்பர் லுக் எனப்படும் நரைமுடி தோற்றத்தில் படத்தில் நடித்தவர் அஜித்.

அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அத்துடன் இப்போது பல பிரபலங்கள் தைரியமாக சால்ட் அன் பெப்பர் லுக்கில் நடிக்கிறார்கள்.

இந் நிலையில் நடிகை சிம்ரனும் தனது சால்ட் அன் பெப்பர் லுக் புகைப்படத்தை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனால் அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இது, வயது ஆகிவிட்டது, மீண்டும் பழைய லுக்கிற்கு வாருங்கள் என சிலர் புலம்பி வருகிறார்கள்.

பெண்களின் அழகை மட்டுமே அவர்களின் அடையாளமாக பார்க்கும் பலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hot Topics

Related Articles