செலான் வங்கியின் Signfluencer பிரச்சாரம் : இரத்மலானையிலுள்ள இலங்கை கட்புல மற்றும் செவிப்புலனற்றோருக்கான பாடசாலைக்கு ஆதரவு வழங்கவுள்ளது
செலான் வங்கியின் Signfluencer பிரச்சாரம் : இரத்மலானையிலுள்ள இலங்கை கட்புல மற்றும் செவிப்புலனற்றோருக்கான பாடசாலைக்கு ஆதரவு வழங்கவுள்ளது
கட்புல மற்றும் செவிப்புலனற்றோரை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செலான் வங்கியின் 'Signfluencer' பிரச்சாரம் செவிப்புலன் குறைவாக உள்ளவர்களை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தை வெளிக் கொணர்ந்ததன் மூலம் அதன் பயணத்தை ஆரமபித்தது.
வளர்ச்சிக்கான ஊக்குவிப்பாக, செலான் வங்கியின் அடுத்த கட்ட பிரச்சாரமானது இரத்மலானையில் உள்ள இலங்கை கட்புல மற்றும் செவிப்புலனற்றோரிற்கான பாடசாலைக்கான ஆதரவுடன் தொடருகிறது.
பாடசாலையில் பார்வையற்ற மாணவர்களின் கணினி அறிவாற்றலை மேம்படுத்துவதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்துவதே இலக்காகும். இதன் பொருட்டு, செலான் வங்கி, பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் இதனை நடைமுறைப்படுத்தும்.
அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்வாங்குதலை செலான் வங்கி மிக முக்கியமாக கருதுகின்றது. வங்கியானது தமது வாடிக்கையாளர்கள் அனைவரையும் மதிக்கும் அதேவேளை அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இது போன்ற முன்முயற்சிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது. கட்புல மற்றும் செவிப்புலனற்றோர் உட்பட அனைத்து சமூகத்தினரும் வாழ்வில் முன்னேறுவதற்கான ஆற்றலை கொண்டிருப்பதை இந்த முயற்சி முன் உதாரணமாக அமைகிறது.
'Signfluencer' பிரச்சாரம் நாட்டின் செவிப்புலன் குறைபாடுள்ள சமூகத்தை அங்கீகரிப்பதன் அவசியத்தின் மீது கவனத்தை திருப்பியது. இலங்கையின் தனித்துவமான சைகை மொழியானது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை
என்பதை செலான் வங்கி வெளிப்படுத்தியது. 2023இல் சைகை மொழி தினத்தை கொண்டாடும் வகையில்,
இப்பிரச்சாரம் சைகை மொழியை பயன்படுத்தும் சமூகம் மீது விழிப்புணர்வையும் அதற்கான ஆதரவையும் தெரிவித்தது.
செவிப்புலனற்றோர் இலங்கையின் பரந்த சமூகத்துடன் தொடர்பு கொள்ளும்போது சவால்களை எதிர்கொள்வதால் அவர்களின் தேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் தொடர்பு கொள்வதற்குமான ஒரு வழிமுறையாக சைகை மொழியை அங்கீகரிப்பதற்கு இது மக்களை ஊக்குவித்தது. 2021ஆம் ஆண்டு வரைவு செய்யப்பட்ட போதிலும்,
இலங்கையின் சைகை மொழியை உத்தியோகபூர்வ மொழியாக அடையாளப்படுத்துவதற்கான அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
செலான் வங்கியானது ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வெற்றியடைவதற்கான திறன் உள்ளது என்ற அடிப்படை நம்பிக்கையில் இயங்குகிறது.
எனவே, வங்கியானது சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது. இந்த புதிய பிரச்சாரம் நாடு முழுவதும் உள்ள கட்புலனற்ற பிரஜைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவர்களுக்கான சம வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டம், கட்புல மற்றும் செவிப்புலனற்றோரை மேலும் வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவி பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
''இலங்கையின் பிரஜைகளாக நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவது எமது பொறுப்பு ஆகும். இலங்கை பிரஜைகள் தமது முழுமையான திறனை அடையக்கூடிய வகையில் தற்போதைய நிலைமைகளை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். எங்கள் முயற்சிகள் பல்வேறு சமூகப் பொருளாதார பின்னணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திறன்களை வளர்க்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு வர்த்தக நாமமாக இலட்சியத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மாற்றுத்திறனாளி பிரஜைகளுக்கு அவர்களைச் சுற்றியுள்ள உலகத்திற்கு சிறந்த அணுகலை வழங்கும் உட்கட்டமைப்பை வடிவமைக்க, இதேபோன்ற எண்ணம்
கொண்ட நிறுவனங்களுடன் கூட்டுசேர்வதே எமது நீண்ட கால இலக்கு." எனத் தெரிவித்தார்.
செலான் வங்கி தொடர்பாக அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சிறந்த தரமான சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிசிறந்த வங்கி அனுபவத்தை வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தனிநபர் வங்கிச் சேவை மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்கள் உள்ளடங்கலாக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இவ்வங்கி, நாடு
முழுவதும் 540ற்கும் மேற்பட்ட அணுகல் புள்ளிகளைக் கொண்டுள்ளது.
செலான் வங்கியானது நிதிரீதியாக நிலையான மற்றும் சிறந்த செயற்திறன் மிக்க நிறுவனமாக Fitch Ratings நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A-’(lka)வாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவை செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் நிலையான சேவை வழங்கலை உறுதி செய்வதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.
editor