இலங்கையில் சார்லி மோட்டோவின் இன்னிசை நிகழ்ச்சி

சார்லி மோட்டோ, இன்னிசை நிகழ்ச்சி, பிரெஞ்சு பாடகி, பிரெஞ்சு தூதரகம், charlie motto

இலங்கையில் சார்லி மோட்டோவின் இன்னிசை நிகழ்ச்சி

இலங்கையில் சார்லி மோட்டோவின் இன்னிசை நிகழ்ச்சி 3 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் மூன்று நாள் இசைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சு பாடகியான சார்லி மோட்டோ கொழும்பு, மாத்தறை, கண்டி ஆகிய பகுதிகளில் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரெஞ்சு தூதரகமும், இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரெஞ்சு கலாசார நிறுவனமும் இணைந்து 2024 பிரெஞ்சு பண்பாட்டு பருவகால நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக பிரெஞ்சு பாடகியான சார்லி மோட்டோவுடன் மூன்று நாள் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

இளம் பிரெஞ்சு எலக்ட்ரோபொப் கலைஞரான சார்லி மோட்டோ, தனது இசைக்கலவையில் இலங்கையின் ரசிகர்களை நடனமாட வைக்கவும் கனவில் கூட அவரின் இசைய ரசிக்க வைக்கப் போகின்றார்.

இலங்கையில் அவரது மூன்று நாள் இசை நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு வெயா ஹவுசில் மாலை 7 மணிக்கும்,  நவம்பர் மாதம் முதலாம் திகதி அஹங்கம Traxல் மாலை 8:30 மணிக்கும் நவம்பர் 3ஆம் திகதி கண்டி Atelierல் மாலை 6 மணிக்கும் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம்

மேலதிக தகவல்களுக்கு: https://lk.ambafrance.org/

பிரெஞ்சு பாடகியான சார்லி மோட்டோவின் சுற்றுப்பயணத்தின் போது கண்டி, கொழும்பு மற்றும் மாத்தறை பிரெஞ்சு கலாசார நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு செயலமர்வுகளையும் நடத்தவுள்ளார்.

சார்லியின் தனித்துவமான இசை பிரெஞ்சு பாடல்கள் மற்றும் நவீன ஹைப்பர்பொப்பை பாரம்பரிய இசையின் தாக்கத்துடன் இணைக்கிறது. பெப்ரவரி 2024 இல் வெளியான அவரது சமீபத்திய அறிமுகமான EP, Citadelle, ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது, சர்வதேச எலக்ட்ரோபொப் துறையில் மிகவும் நம்பிக்கைக்குரிய புதிய குரல்களில் ஒருவராக அவரை உறுதிப்படுத்தியது.

பிரான்சின் தென் பிராந்தியத்திலிருந்து வரும் சார்லி மோட்டோ, துடிப்பேற்றும் அவரது மேடைக்கச்சேரிகள் மற்றும் தெளிவான குரல்களுக்காக அங்கீகாரம் பெற்றுள்ளார். 

சாஸ்திரிய பயிற்சி பெற்ற பியானோ வாத்தியக் கலைஞர் மற்றும் பாடகி, அவர் பிரெஞ்சு பல்குரல் எலக்ட்ரோபாப் மற்றும் உள்ளத்தை தொடுகின்ற பாடல்கள் எழுதுதல் ஆகியவற்றிலிருந்து உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை எதிரொலிக்கும் இசையாக தனது இசையின் தாக்கங்களை தடையின்றி இணைத்துள்ளார். அவரது இசை ஆழமான உணர்ச்சிகள், சினிமா ஒலிக்காட்சிகள் மற்றும் பாரம்பரிய பொப்பில் நவீன திருப்பம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

சார்லி மோட்டோவின் இன்னிசையை கேட்கவும் நடனமாடவும் புதிய இசையின் அனுபவத்தினை பெற்றுக்கொள்வதற்கும் இலங்கையின் ரசிகர்கள் அழைக்கப்படுகின்றனர்.