சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களை தலைமையாகக் கொண்ட சிறு நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு வலுவூட்டிய CDB

In line with the 2024 International Women’s Day theme “Accelerating Action,” Citizens Development Business Finance PLC (CDB) organized a special SMB Market at Independence Square, Colombo 7, empowering women-led small and medium businesses.

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களை தலைமையாகக் கொண்ட சிறு நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு வலுவூட்டிய CDB

இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளான Accelerating Action என்பதற்கமைய, சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), பெண்கள் தலைமைத்துவத்தில் இயங்கும் சிறு, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளின் பயணத்தை துரிதப்படுத்துவதற்காக, மகளிர் தின SMB சந்தையை கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்தில் முன்னெடுத்திருந்தது. 

SMB Friday கட்டமைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் Wings Ecosystem மற்றும் patpat.lk ஆகியன கைகோர்த்திருந்தன. பெண்கள் தலைமைத்துவத்தில் இயங்கும் சிறு, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் தமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தியிருந்ததுடன், தமது வியாபாரத்தை வெளியுலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் பெற்றனர்.

CDB இன் நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரல் என்பது உறுதியான சமூக அக்கறை கொண்ட அரணை கொண்டிருப்பதுடன், பெண்கள் மற்றும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில்முயற்சியாண்மைகளில் கவனம் செலுத்துகிறது. அதற்கமைய இந்த SMB சந்தை பெண் தொழில்முயற்சியாளர்களை முன்னேற்றத்துக்கு வழியேற்படுத்தி, உறுதியான
மற்றும் புத்தாக்கமான வியாபாரங்களை கட்டியெழுப்பிக் கொள்ளும் பயணத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்திருந்தது.

உணவு மற்றும் பானங்கள், கலை மற்றும் கலையம்சங்கள், ஆடைகள், அன்பளிப்புகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் கல்விசார் சேவை வழங்குனர்கள் போன்றன அடங்கலாக பரந்தளவு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை SMB சந்தை காட்சிப்படுத்தியிருந்தது.

CDB இன் விற்பனை மற்றும் வியாபார அபிவிருத்தி பணிப்பாளர் சசிந்திர முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், இந்த பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சிறு, நடுத்தரளவு வியாபாரங்கள் SMB Friday ஊடாக CDB உடன் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளன. அதனூடாக, தமது வியாபாரங்களை மேம்படுத்திக் கொள்வது மாத்திரமன்றி, தமது சந்தைப்படுத்தல் ஆற்றல்கள் மற்றும் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், நிதிசார் முகாமைத்துவத்தை விரிவாக்கிக் கொள்ளவும், இலங்கைக்கு உறுதியான பெண்-தலைமைத்துவ வியாபாரங்களுக்கான சூழல்கட்டமைப்பை கொண்டிருக்கவும் உதவியாக அமைந்திருக்கும். 

CDB சமூக ஊடக நாளிகைகள் மற்றும் patpat.lk ஆகியவற்றில் இந்த வியாபாரங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தமது பிரத்தியேகமான அம்சங்கள், தயாரிப்புகளின் USPகள் மற்றும் தொடர்பு கொள்ளும் தகவல்கள் போன்றன அடங்கலான வெளிப்பாட்டையும் அதிகரித்துள்ளன. சர்வதேச மகளிர் தினம் 2025 ‘Accelerate Action’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் நிலையில், உறுதியான மற்றும் நிலையான பெண்கள் தலைமைத்துவ வியாபாரங்களை கட்டியெழுப்புவதில் துரித செயற்பாட்டை மேற்கொள்ளும் எமது அர்ப்பணிப்பை நாம் உறுதி செய்வதுடன், சமூக உள்ளடக்கம் எனும் எமது பிரதான சமூக நிலைபேறாண்மை இலக்குடன் பொருந்துவதாக அமைந்துள்ளது.” என்றார்.