Trinity International உடன் உங்கள் சர்வதேச உயர்கல்வி கனவுகளைத் தொடருங்கள்

Trinity International உடன் உங்கள் சர்வதேச உயர்கல்வி கனவுகளைத் தொடருங்கள்

கல்வி துறையின் சமீபத்திய போக்குகளுடன் இணைந்திருப்பது தொடர்ந்து வளர்ந்து வரும் மற்றும் வேகமான இன்றைய உலகில் மிகவும் முக்கியமானது.
தற்போதைய காலப்பகுதியில் பல மாணவர்கள் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தவுடன் தங்களது உயர் கல்விக் கனவுகளைத் தொடர மிகவும் போட்டியான, விலைக்கட்டுப்படியான மற்றும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வாய்ப்புகளைத் தேடுகின்றனர். அத்துடன் கல்வி ஆலோசனை சேவைகளை வழங்கும் சந்தையானதும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக காணப்படுகின்றது. 


ஆகவே இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் மாணவர்களின் நன்னலங்களை கருத்திற்கொண்டு செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான கல்விச்சேவை அமைப்பைக் கண்டறிவது மிகவும் அவசியமானதாகும். 


கல்வி கற்பவர்களின் நன்னலத்தை முதன்மையாக கொண்டு செயற்பட்டு வரும் Trinity International  ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இவ்வாறான சேவைகளை முன்னணியில் உள்ளது. 


தனது 10வது வருடத்தை அடையும் பயணத்தில் உள்ள Trinity International ஆனது, தற்போது மாணவர்களிற்கு வெளிநாட்டுக் கல்வியில் பொருத்தமான இடங்களைக் கண்டறிய உதவும் அதனது அடுத்த கட்ட செயல்பாடுகள் மற்றும் கூட்டாண்மைகளுக்கு தயாராகி வருகிறது.


Trinity International நிறுவனத்தின் பொது முகாமையாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,


“Trinity International நிறுவனமானது வெளிநாடுகளில் உயர்கல்விக்கான தொழில்முறை ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறதுடன், பல ஆண்டுகளாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிக போட்டித்தன்மை கொண்ட தொழில்துறையில் கல்வி ஆலோசனைக்கான நம்பகமான ஆதாரமாக தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது. இலங்கையில் சர்வதேச உயர்கல்வி ஆலோசனை சேவைகள் துறையில் முன்னணி நிறுவனமாக குறிப்பிடத்தக்க சர்வதேச அங்கீகாரம் மற்றும் உறுதியான நற்பெயரைப் பெற்ற Trinity, உலகெங்கிலும் உள்ள சில மிகவும் புகழ்பெற்ற சர்வதேச கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டார்.


Trinity International நிறுவனமானது பல்கலைக்கழக விண்ணப்பங்களின் அடிப்படையில் மட்டுமே ஆலோசனை வழங்கும் பாரம்பரிய நடைமுறைக்கு அப்பால் சென்று, தங்களது எதிர்காலத்திற்கு வெற்றிகரமான பாதைகளை அமைக்க விரும்பும் மாணவர்களுக்கு முதன் முதல் இறுதி வரையிலான சேவைகளை வழங்குகிறது. அத்துடன் அதன் சேவைகளில் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களைக் கொண்ட ஒரு தொழில்முறை குழுவால் ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த கல்வி திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தனிப்பயனாக்கப்பட்ட உதவியும் இதில் அடங்குகின்றது. 


மாணவர்கள் அவர்களின் தனிப்பட்ட இலக்குகளுடன் சரியான திட்டத்தைக் கண்டறிய அவர்களின் கல்வி மற்றும் பணி பின்னணியை மதிப்பீடு செய்வதில் Trinity குழுவினர் உதவுகிறார்கள். குடிவரவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதிகளை ஏற்பாடு செய்வதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிதி வழிகாட்டுதலானது ஒவ்வொரு மாணவரும் தங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ற திட்டத்தைக் கண்டறிவதை உறுதிசெய்யும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமன்றி Trinity International நிறுவனமானது SOP பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் விசா விண்ணப்பங்கள் ஆகிய இரண்டிற்கும் நோக்கத்திற்கான அறிக்கை) உருவாக்குவதற்கான வழிகாட்டுதலையும் உதவியையும் வழங்குகிறது.


அதுமட்டுமன்றி, Trinity International நிறுவனமானது, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் அயர்லாந்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிற்கான சர்வதேச உயர்கல்விக்கான தொழில்முறை நிர்வாக சேவைகளையும் மேற்கொள்கின்றனர். 


அவ்வாறாக வெளிநாடுகளில் தங்கள் திட்டங்களை வெற்றிகரமாக முடித்த சமீபத்திய மாணவர்களில் இங்கிலாந்தில் உள்ள Queen’s University இல் கல்விப் படிப்பில் முதுகலைப் படிப்பை முடித்த கங்கா அமரவன்சா, லண்டன் Kingston University இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் எம்எஸ்சி முடித்த காஞ்சீபன் சிவசிதம்பரநாதன், செயற்றிட்ட மேலாண்மையில் வேல்ஸில் உள்ள Aberystwyth University இல் எம்பிஏ முடித்த நிரோஷா சன் மற்றும் லண்டனில் உள்ள Coventry University இல் கணக்கியல் மற்றும் நிதியில் BSc பட்டம் பெற்ற முஹம்மத் அசார்ட் ஆகியோர்களும் அடங்குவர். இந்த மாணவர்கள் உலகம் முழுவதும் வெற்றிகரமாக பொருத்தமான இடத்தை பெற்ற 1000க்கும் மேற்பட்ட மாணவர்களில் இவர்களும் அடங்குகின்றனர். 


இதுவரை அதன் விசா விண்ணப்பங்களில் 98 வீத வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ளதுடன் முந்தைய விசா மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் மீண்டும் விண்ணப்பிக்க Trinity International நிறுவனமானது உதவுகிறது. அவர்களின் சேவை போர்ட்ஃபோலியோவில் சுற்றுவா அல்லது வணிக விசா விண்ணப்பங்கள், சார்ந்திருக்கும் நபரிற்கான விசா விண்ணப்பங்கள், கல்வி அனுமதி நீட்டிப்புகள் விண்ணப்பங்கள் மற்றும்  குடியுரிமையை (PR) பெற்றுக்கொள்வதற்கான விசா விண்ணப்பங்கள் பற்றிய ஆலோசனை சேவைகளும் அடங்கும்.


Trinity International நிறுவனமானது கொழும்பு 3ல் தனது தலைமை காரியாலயத்தைக் கொண்டுள்ளதுடன் இலங்கையைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு தணது சேவைகளை வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாது நீர்கொழும்பு, கண்டி, காலி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கு தனது சார் அலுவலகங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.