BestWeb.lk 2024 விருது விழாவில் ECO SPINDLES மற்றும் BEIRA BRUSH இணையத்தளங்களுக்கு உயர் விருது
தூரிகைப் பொருட்கள் மற்றும் Monofilaments உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான BPPL Holdings இன் துணை நிறுவனங்களான Eco Spindles மற்றும் Beira Brush ஆகியவற்றின் இணையத்தளங்கள் அண்மையில் நடைபெற்ற BestWeb.lk 2024 விருது விழாவில் உற்பத்தி மற்றும் தொழில்துறை பிரிவில் 2 முக்கிய விருதுகளை சுவீகரித்துக் கொண்டது.
இதன்படி, Eco Spindles இணையத்தளத்துக்கு தங்க விருதும், Beira Brush இணையத்தளத்துக்கு வெள்ளி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இலங்கையில் உள்ள நிறுவனங்களின் இணையத்தளங்களை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு முதல் LK Domain Registry இனால் வருடாந்தம் BestWeb.lk விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
உள்ளூர் திறமையாளர்களை இணங்கண்டு கொண்டாடுவது மற்றும் பங்கேற்பாளர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் தொழில்நுட்ப திறன்களை இணையத்தளத்தில் விளம்பரப்படுத்துவதற்கும் முன்னிலைப்படுத்துவதற்கும் களத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விருது விழா நடைபெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அந்தவகையில் 14ஆவது தடவையாக இம்முறை நடைபெற்ற BestWeb.lk 2024 விருது விழாவில் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர். இணையத்தள மற்றும் தொழில்துறை நிபுணர்களைக் கொண்ட நடுவர் குழு, படைப்பாற்றல், வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இணையத்தளங்களை மதிப்பீடு செய்து விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்படி, மிகவும் போட்டித்தன்மை நிறைந்த உற்பத்தி மற்றும் தொழில்துறை பிரிவில் Eco Spindles மற்றும் Beira Brush ஆகிய இணையத்தளங்கள் பெற்றுக்கொண்ட தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளானது, அனைத்து தளங்களிலும் BPPL Holdings நிறுவனத்தின் புத்தாக்கம் மற்றும் சிறப்புக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், டிஜிட்டல் முன்னேற்றத்தையும், தொழில்துறையில் அதன் முன்னணி நிலையையும் உறுதிப்படுத்துகின்றன.
இந்த நிலையில், இம்முறை நடைபெற்ற BestWeb.lk 2024 விருது விழாவில் Eco Spindles மற்றும் Beira Brush ஆகிய இணையத்தளங்கள் பெற்றுக்கொண்ட விருதுகள் தொடர்பில் BPPL Holdings நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் திலுக்ஷன் ஜயசேகர கருத்து தெரிவிக்கையில்,
இந்த விருதுகள் டிஜிட்டல் புத்தாக்கத்தில் எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். சான்றாக உள்ளன. BPPL Holdings இல், நிலைத்தன்மை மற்றும் சிறப்பு ஆகிய எங்கள் மதிப்புகளுடன் இணைந்த வலுவான இணையத்தள இருப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். Integra Creatives இல் உள்ள எங்கள் படைப்பாற்றல் மிக்க பங்காளர்களுக்கும், 3CS இல் உள்ள எங்கள் வலை இணையத்தள மேம்பாட்டுக் குழுவிற்கும் அவர்களின் சிறந்த பணிக்காக நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,என்றார்.
BestWeb.LK 2024 விருதுகளில் இந்த வெற்றியானது, BPPL இன் நிலையை உற்பத்தி மற்றும் தொழில்துறை துறைகளில் முன்னணி நிறுவனமாக உறுதிப்படுத்துகிறது. இது தயாரிப்பு சிறப்பின் அடிப்படையில் மட்டுமல்ல, அதிநவீன டிஜிட்டல் தளங்கள் மூலம் பங்குதாரர்களுடன் இணைக்கும் மற்றும் ஈடுபடும் திறனின் அடிப்படையிலும் உள்ளது.
BPPL என்பது நிலைத்தன்மை மீது கூட்டு கவனம் செலுத்தும் ஆசியாவில் உள்ள தூய சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிறுவன ஆளுமை (ESG) தாக்கத்தை மையமாகக் கொண்ட சில நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் முழுமையான உரிமத்தைக் கொண்ட துணை நிறுவனங்களான Eco Spindles Ltd ன மற்றும் Beira Brush Ltd ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்தக் குழுமம் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியெஸ்டர் நூல், monofilaments மற்றும் தொழில்முறை மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் கருவிகளை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அத்துடன், இந்தக் குழுமம் Tip Top என்ற வணிக நாமத்தின் கீழ் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் வீட்டை சுத்தம் செய்யும் தூரிகைகளையும் உற்பத்தி செய்கிறது.