உலகம்

“வலுவான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்” இரண்டாம் கட்டம் கொழும்பில்

“வலுவான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ‘புதிய கூட்டமைப்பு’ இனால் நடத்தப்படும் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் ‘புதிய கூட்டணி’ இன் கொழும்பு மாவட்டத் தலைவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோ, செயற்பாட்டுத் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, புதிய கூட்டணி ஸ்தாபகர் நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன, சுகீஸ்வர பண்டார ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இக்கூட்டத்தில், கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிரபலமான அரசியல்வாதிகள் இணையவுள்ளதாக புதிய கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Invitation_Colombo Meeting_Final_001

Hot Topics

Related Articles