உலகம்

குணசேகர அறக்கட்டளையை ஆரம்பித்துள்ள இளம் தொழில்முனைவாளர் சனுத் குணசேகர

அர்ப்பணிப்புள்ள இளம் தொழில்முனைவோர்களில் ஒருவரான சனுத் குணசேகர, ‘குணசேகர அறக்கட்டளை’ எனும் தனது திட்டத்தின் மூலம் தொண்டு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த அறக்கட்டளையின் மூலம், சமூகங்களுக்குள் முன்னோக்கிய மாற்றத்தை உருவாக்குவதற்கான உந்துசக்தி மற்றும் உறுதி ஆகியவற்றின் ஆற்றலை எடுத்துக்காட்டுவதே சனுத்தின் நோக்கமாகும்.

தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறனை அவர் இதன் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

அந்த வகையில், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவும் சனுத்தின் அர்ப்பணிப்பானது, உண்மையிலேயே ஊக்கமளிக்கும் ஒன்றாக அமைகிறது.

“உலகிற்கு அவசியமான சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிக தேவையுடையவர்களுக்கு உதவுவதற்கும் எனது வெற்றியை நான் பயன்படுத்த விரும்புகிறேன்” என அவர் இதனை சுருக்கமாகக் கூறுகின்றார்.

குணசேகர அறக்கட்டளையானது “இளைஞர் ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சி” என்பதை அடிப்படையாகக் கொண்ட, இலங்கையில் உள்ள இளம் தலைவர்களை ஒன்றிணைக்க முற்படும் அரசியல் அல்லாத தொண்டு சேவையாகும்.

இளைஞர்களிடையே ஒத்துழைப்பை வளர்த்தல், நாட்டிற்கு அவசியமான ஒளிமயமான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கு கூட்டாக பங்களிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதுமே, இந்த அறக்கட்டளையின் முதன்மையான குறிக்கோள்களாகும்.

இது பற்றி சனுத் குணசேகர விளக்கமளிக்கையில், “வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனிநபர்கள், தங்கள் சொந்தத் தொழிலை ஆரம்பிப்பதற்கு அல்லது நிலைபேறான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதே எமது நோக்கமாகும்.

எமது முயற்சிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் மூலமாக, இலங்கை தொடர்பில் ஒரு பிரதிபலிப்பை வடிவமைத்து, இப்பிராந்தியத்தில் முன்னோக்கிப் பயணிக்கச் செய்வதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

குணசேகர அறக்கட்டளையானது, “இளைஞர் ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சி” எனும் அடிநாதத்தின் கீழ், பல்வேறு திட்டங்கள் மற்றும் தொண்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

உணவு விநியோகம், கல்வித் திட்டங்கள், சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்ற இந்த அறக்கட்டளையின் தலைமையிலான தொண்டு நிகழ்வுகள் இதில் அடங்குகின்றன.

இந்த அறக்கட்டளையானது, அவசர நிலைமைகளின்போது, விரைவாக ஏற்பாடு செய்ய அவசியமான அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வழங்கு முயற்சி செய்வதோடு, இளம் தலைவர்களிடையே தொடர்பு வலையமைப்பை உருவாக்குதல் மற்றும் வழிகாட்டல்களை ஊக்குவிக்கிறது.

குணசேகர அறக்கட்டளையானது எதிர்வரும் வருடத்தில், எதிர்கால அரசியல் ஈடுபாட்டிற்கான தயார்படுத்தலில் இளம் தலைவர்களிடையே கூட்டு முயற்சிகளை வலியுறுத்தியவாறு, அதன் தொண்டு சேவை முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

சனுத் குணசேகர தனது தந்தையிடமிருந்து மட்டுமல்லாது, முன்னாள் பிரதி சுகாதார அமைச்சரான அவரது பாட்டனார் பிரேமரத்ன குணசேகரவிடமிருந்தும் உத்வேகத்தை பெற்றுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில்,

“எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தனிநபர்களுக்கு அவர் அளித்த தன்னலமற்ற உதவிகள், எனது பார்வையில் தலைமைத்துவத்தின் உண்மையான அம்சத்தை வெளிப்படுத்தியது.” என்றார். 1978 ஆம் ஆண்டு மஹரகம ஜனாதிபதி கல்லூரியை நிறுவியதன் மூலம் தனது பாட்டனார் முன்னெடுத்த நடவடிக்கைகளின் பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஆழமான பொறுப்பை சனுத் உணர்த்துகிறார்.

குடும்ப செல்வாக்கிற்கு அப்பால், தனது தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான துறைகள் ஆகிய இரண்டிலும், சாதகமான மாற்றத்தை வளர்ப்பதற்கும், மீளெழுச்சியைக் காண்பிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நபர்களால் சனுத் ஈர்க்கப்பட்டுள்ளார்.

 

குணசேகர அறக்கட்டளை பற்றி

குணசேகர அறக்கட்டளையானது இலங்கையில் “இளைஞர் ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சி” ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இளம் தலைவர்களை ஒன்றிணைக்கின்ற அரசியல் அல்லாத தொண்டு சேவையை அது ஊக்குவிக்கிறது. வணிகங்களை ஆரம்பிப்பதில் ஆர்வமாக உள்ள தனிநபர்களுக்கு ஆதரவளித்தல், நிலைபேறான வாழ்வாதாரங்களை உருவாக்குதல் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அவர்களின் நோக்கம் அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளையானது, தொண்டு நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒழுங்கு செய்கிறது. இது அவசரகால நிலைமையில் அவசியமாகின்ற அத்தியாவசிய பொருட்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், எதிர்கால அரசியல் ஈடுபாட்டிற்காக இளம் அரசியல்வாதிகள் மத்தியில் கூட்டு முயற்சிகளை வலியுறுத்தும் வகையில், தனது விரிவாக்கத்தை விரிவுபடுத்த இந்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

Hot Topics

Related Articles