உலகம்

மிகப் பெரிய ஆடையகத்தை வத்தளையில் திறந்து வைத்த GFlock

இலங்கையின் மிகப் பெரிய தைத்த ஆடையகமான GFlock, ஒரே வர்த்தக நாமத்தின் கீழ் அதன் மாபெரும் காட்சியறையை வத்தளையில் இன்று (20) திறந்து வைத்துள்ளது. அதன் தலைவர் ரணில் வில்லத்தரகே தலைமையில் இத்திறப்பு விழா இடம்பெற்றது.

 

வாடிக்கையாளர்களுக்கு தைத்த ஆடைத் துறையில் புத்தாக்கமான அனுபவத்தை வழங்குவதற்காக நவீன வசதிகள் மற்றும் நவீன நாகரீக ஆடைகளையுடன், இலங்கையில் ஒரே வர்த்தக நாமத்தின் கீழ் அதன் மிகப் பெரிய காட்சியறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நுகர்வோர் மத்தியில் புகழ்பெற்ற, முதலிடத்தில் உள்ள தைத்த ஆடைகளின் உள்ளூர் வர்த்தக நாமமான GFlock, தனது கிளை வலையமைப்பை விரிவுபடுத்தி, ஆறு மாதம் எனும் சிறிய காலப்பகுதிக்குள் தனது இரண்டாவது கிளையை திறந்துள்ளது.

பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட சமீபத்திய நாகரீகத்தில் அமைந்த, பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்த தெரிவுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தமது தெரிவுகளை கொள்வனவு செய்ய இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

நவீன வடிவமைப்புகளுடன் உயர்தர மூலப்பொருட்கள் மூலம் இத்தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது நவீன காட்சி வர்த்தக தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளதோடு, மிகவும் ஆக்கபூர்வமான, தௌிவான வித்தியாசத்தில் அமைந்த உற்பத்திகளைத் தெரிவு செய்து கொள்வனவு செய்வதற்கும், தமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு நட்பு ரீதியான பணியாளர்களின் விரிவான சேவையை வழங்குவதற்கும் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பத்து வருடங்களுக்கும் மேலான நுகர்வோரின் இதயங்களை வென்றுள்ள GFlock வர்த்தகநாமம், வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருந்து வருகின்றது.

தற்போது, GFlock உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஒரு முன்னணி வர்த்தகநாமமாக மாறியுள்ளது. ஆக்கபூர்வமான திறமை கொண்ட இளைஞர்களின் அனுபவங்களைப் பயன்படுத்தி, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் ஒரு உள்ளூர் வர்த்தகநாமமாக நிறுவனம் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

ஒழுக்கம், உறுதிப்பாடு, பரோபகாரம், முயற்சி மற்றும் நேர்மை ஆகியவற்றை மனதில் கொண்டு, வாடிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை மதித்து, GFlock குழுமமானது தனது செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. GFlock கிளை வலையமைப்பானது கொள்ளுப்பிட்டி, பெலவத்தை, நீர்கொழும்பு, தெல்கந்த, வத்தளை ஆகிய இடங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles