இலங்கையின் ஸ்மார்ட் வாழ்க்கை முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் TRI-ZEN

எதிர்காலத்துக்கு உகந்த வகையில் நிர்மாணிக்கப்படும் TRI-ZEN தொடர்மனைகள், யூனியன் பிளேஸ், கொழும்பு 2 எனும் கொழும்பின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இதுவரையில் இந்தத் தொடர்மனைகளின் 75% ஆனவை விற்பனையாகியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்தத் திட்டம் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் மற்றும் இந்திரா டிரேடர்ஸ் (பிரைவட்) லமிடெட் ஆகிய நிறுவனங்களிடையே இணை நிர்மாணத் திட்டமாக அமைந்துள்ள TRI-ZEN தொடர்மனை குடியிருப்புகளுக்கு இதன் மூலம் பெருமளவு கேள்வி மற்றும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றமை புலனாகியுள்ளது.

நிர்மாணத்தின் இறுதிக் கட்டத்தை எய்தியுள்ள TRI-ZEN, தொடர்ந்தும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த வண்ணமுள்ளதுடன், இதன் மத்திய அமைவிடம், தூர நோக்குடைய அலங்கார வடிவமைப்பு மற்றும் வாழ்க்கை முறைக்கு பொருத்தமான தோற்ற அமைப்பு, நவீன வசதிகள் மற்றும் உள்ளம்சங்கள் மற்றும் தொடர்மனை வாழ்க்கைக்கு பொருத்தமான அதன் தொழில்நுட்ப, நிலைபேறான வழிமுறை போன்றன காரணமாக இவ்வாறு அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்ததும், இலங்கையில் அதிகளவு நாடப்படும் வதிவிடத் தொகுதியாக TRI-ZEN அமைந்திருக்கும்.

இந்தத் திட்டத்தின் முன்னேற்ற நிலை தொடர்பில் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவருமான நதீம் ஷம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த சில வருடங்களில் பல சவால்களுக்கு நாம் முகங்கொடுத்த போதிலும், இதுவரையில் திட்டத்தின் 75% பகுதியை நாம் விற்பனை செய்துள்ளோம்.

எம் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த மைல்கல் அமைந்துள்ளது. சாதாரண வதிவிட கட்டடம் என்பதற்கு அப்பாலானதாக TRI-ZEN அமைந்துள்ளது.

சௌகரியத்தை நாம் ஏற்படுத்துவதுடன், TRI-ZEN சமூகத்தாருக்கு பிரத்தியேகமான வாழ்க்கை முறை அனுபவங்களை ஏற்படுத்தி, நகரின் மையப்பகுதியில் அவர்களின் வாழ்க்கையை முன்னெடுக்கும் முறையில் மாற்றத்தை தோற்றுவிக்கும்.

அத்துடன், வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்வதில் கவனம் செலுத்துவதற்கு அதிகளவு நேரத்தை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.

TRI-ZEN இனால் கவர்ச்சிகரமான விலையில் தொடர்மனைகள் வழங்கப்படுவதுடன், பரந்தளவு விலைத் தெரிவுகளில் அமைந்துள்ளது. ரூ. 44 மில்லியனிலிருந்து ஆரம்பிப்பதுடன், வீட்டு உரிமையாளர்களுக்கு ஸ்மார்ட் மற்றும் நவீன வசதிகளுடனான வாழ்க்கையை நகரின் மையத்தில் அனுபவிக்கும் வசதி கிடைப்பதுடன், சிறந்த பெறுமதியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

TRI-ZEN இனால் வீட்டு உரிமையாளர்களுக்கு சிறந்த நிதித் திட்டமிடல் மற்றும் சுதந்திரம் போன்றன நெகிழ்ச்சியான கொடுப்பனவுத் திட்டங்களுடன் வழங்கப்படுகின்றது.


இதனால், ஆரம்பத்தில் 40% பெறுமதியை மாத்திரம் செலுத்தி, எஞ்சிய 60% தொகையை வீட்டை கையளிக்கும் போது செலுத்த முடியும்.

பூர்த்தி செய்யப்பட்டதும் TRI-ZEN இல் மூன்று குடியிருப்பு தொகுதிகள் காணப்படும். மொத்தமாக 891 தொடர்மனைகள் அமைந்திருப்பதுடன், இவற்றில் 1, 2 மற்றும் 3 படுக்கையறை அலகுகள் அடங்கியிருக்கும். ஒவ்வொரு அலகும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கும் என்பதுடன், குடியிருப்பாளர்களுக்கு சௌகரியத்தையும், சொகுசான வாழ்க்கை முறையையும், கொழும்பு நகரின் மையத்தில் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். நகரிலிருந்து அப்பால் காணப்படக்கூடிய வசதிகளை TRI-ZEN கொண்டிருக்கும் என்பதுடன், இதில், பசுமையான பகுதிகள், ஜொகிங் திடல், நீச்சல் தடாகங்கள், சகல வசதிகளையும் கொண்ட உடற் பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய ஸ்ரூடியோக்கள் மற்றும் விளையாட்டு அறை போன்றன அடங்கியிருக்கும்.

வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த தொடர்மனைத் தொகுதி மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைந்திருப்பதற்கு, அதன் அமைவிடம் முக்கிய காரணியாக அமைந்திருக்கும். கொழும்பின் பிரதான பொது போக்குவரத்து வசதிகள், வியாபார மையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் இதர களிப்பூட்டும் பகுதிகள் போன்றவற்றை அண்மித்ததாக அமைந்துள்ளது.

TRI-ZEN பற்றி

consisting of 3 கொழும்பு 2 எனும் முகவரியில் அமைந்துள்ள ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ் நிறுவனத்தின் வதிவிடத்த தொகுதித் திட்டமாக TRI-ZEN அமைந்துள்ளது. இதில் 3 குடியிருப்புத் தொகுதிகள் காணப்படுவதுடன், அவற்றில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. பரந்தளவு நவீன வசதிகளுடன், உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் தொழில்நுட்ப மற்றும் அலங்கார வடிவமைப்புகளைக் கொண்டதாக இந்த குடியிருப்புகள் அமைந்திருக்கும். இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளரும், சொத்துக்கள் முகாமையாளருமான ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், நகரின் வானுயர்ந்த கட்டடங்கள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கின்றமைக்காக மிகவும் புகழ்பெற்றுள்ளது.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *