உலகம்

ஈழத்தமிழனின் தயாரிப்பு, நடிப்பில் ‘இருளில் ராவணன்’ : இயக்குநர் A.V.S.சேதுபதி – “வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும்”

‘இருளில் ராவணன்’ எனும் படத்தை DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இது ஈழத்தமிழர் ஒருவர் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படமாகும்.

அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஈழத்தமிழர் துஷாந்.


‘பத்து என்றதுக்குள்ள’, ‘ரங்கூன்’ போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அதேசமயம் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியூபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மெமரீஸ்’, ‘க்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

‘ஆற்றல்’, ‘சிக்லேட்ஸ்’ படங்களின் ஒளிப்பதிவாளர் R.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

‘அப்பா’, ‘போராளி’, ‘நாடோடிகள்’, ‘ஈசன்’ போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த A.L.ரமேஷ் இந்த படத்துக்கும் எடிட்டிங் செய்கிறார்.

விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குநராக இருந்த தினேஷ் மாஸ்டர் இந்த படத்துக்கும் நடனம் அமைத்து வருகிறார்.

மேலும், கலை இயக்கம் – மதன், தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி, மக்கள் தொடர்பு – மணவை புவன் ஆகியோரும் படத்துக்காக பணியாற்றுகின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் A.V.S.சேதுபதி.

இந்தப் படத்தை பற்றி இயக்குநர் A.V.S.சேதுபதி பகிர்ந்தவை,

“முழுக்க முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் அக்சன் கலந்த க்ரைம், த்ரில்லர் படமாக உருவாக்கியுள்ளோம். வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது” என இயக்குநர் A.V.S.சேதுபதி தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles