உலகம்

கொழும்பு 07 இல் ‘Swastha by Link Natural’ புதிய விற்பனை நிலையம் திறப்பு

CIC Holdings இன் உபநிறுவனமான Link Natural நிறுவனம் தமது வர்த்தக நாமம் குறித்து வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில் ‘Swastha by Link Natural’ எனும் பெயரில் புதிய தனித்துவமான விற்பனை நிலையத்தை இல 06, மெயிட்லன்ட் கிரசன்ட், கொழும்பு 07 என்ற முகவரியில் 24.03.2023 இல் திறந்து வைத்துள்ளது.


நமது Link Natural காட்சியறைக்கு விஜயம் செய்யும் ஒருவருக்கும் நமது நிறுவனத்தின் செயற்பாடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன, என்ன வழிமுறையில் செய்யப்படுகின்றன மற்றும் நமது நிறுவனத்தின் நோக்கம் என்பன மிகவும் கருத்து ரீதியாகக் காண்பிக்கப்படுகின்றன.

நவீன வசதிகளுடன் அமைதியான சூழலில் அமைந்திருக்கும் இந்த Swastha by Link Natural நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக வழி வகுப்பதுடன், புது வித அனுபவத்தையும் பெற்றுத் தரும்.

Link Natural நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் முழு அளவிலான 430ற்கும் அதிகமான தயாரிப்புக்கள் பற்றி அறிந்து கொள்ளவும், தங்களுக்கு விருப்பமான பொருட்களை சௌகரியமான முறையில் கொள்வனவு செய்யவும் முடியும்.

மேலும் Swastha by Link Natural இன் அமைதியான சூழலானது சந்திப்பதற்கு, அல்லது பொழுதுபோக்குவதற்கான ஒரு சிறந்த இடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

நமது வாடிக்கையாளர்களின் சுகாதார மற்றும் ஆரோக்கிய ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக நமது Link Natural நிறுவனத்தினால் தயாரித்து அறிமுகப்படுத்தும் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் தரமான மூலிகை உற்பத்திகள் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளன.

ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் அவர்களின் நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆயுர்வேத மூலிகை தயாரிப்புக்கள் மற்றும், தனிப்பட்ட மூலிகை சுகாதாரத் தயாரிப்புக்கள் வாடிக்கையாளர்களுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை தங்களைத் தாங்களே மகிழ்விப்பதற்கு வழியை ஏற்படுத்துகின்றன.

ஆராய்ச்சிகள், தயாரிப்புக்கள், உருவாக்கங்கள் மற்றும் FDA கணக்காய்வின் கோரிக்கையாகவுள்ள வணிக உற்பத்திகளுக்கான உயர்ந்த தரத்தை நிர்ணயிப்பதில் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் குறித்து நிறுவனம் பெருமை கொள்கிறது.


உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சந்தையை அடைய நமது அனைத்துத் தயாரிப்புகளின் தரநிலைகளைப் பராமரிக்கத் துல்லியமான ஒழுங்குமுறை மற்றும் தீவிரமான கண்காணிப்பு என்பன மேற்கொள்ளப்படுகின்றன.

ஜப்பானின் Costco வலையமைப்பில் சமஹன் அங்கீகரிக்கப்பட்டு விற்பதற்கு அனுமதி கிடைக்கப்பட்டமை, உலகப் புகழ்பெற்ற பிரித்தானியாவின் சிறந்த மொடலின் பரிந்துரை மற்றும் றியலிட்டி நிகழ்ச்சியொன்றில் சிரேஷ்ட பொலிவூட் நடிகர் சமஹனைப் பரிந்துரைத்தமை என்பன சமஹானின் உயர் தரம் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் Link Natural மூலம் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் பிற தயாரிப்புகளின் தரத்தை உலகிற்குக் காட்டும் சிறந்த சான்றுகளாக அமைகின்றன.

பல வருடங்களாக நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் விளைவாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் நம்பிக்கை வென்ற தயாரிப்புகளான சமஹன், சுதந்த, சுவஸ்தா அமுர்தா, சுவஸ்தா த்ரிபலா, மசில்கார்ட், எஸ்.பி பாம், கேஷா போன்ற பல்வேறு தயாரிப்புகளின் தாயகமாக Link Natural நிறுவனம் உள்ளது. நமது இந்த தயாரிப்புகள் பல தலைமுறையாக முழுமையான சிகிச்சைமுறையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு பங்களித்துள்ளது என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

Earth Essence, சமீபத்தில் அறிமுகப்படுத்திய நமது புதிய தயாரிப்பாகும்.
நமது புதிய விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Link Natural தயாரிப்புகளை பார்வையிட்டு தெளிவு பெற முடியும் என்று மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Swastha by Link Natural இன் நிறுவனம் தினமும் மு.ப 10.00 மணி முதல் பி.ப 07.00 மணிவரை வாடிக்கையாளர்களுக்காகத் திறந்திருக்கும். சிறந்த வாகனத் தரிப்பிட வசதியும் உள்ளது

Hot Topics

Related Articles