வெளிநாட்டு பண அனுப்புகை சேவைகளை நாடுமுழுவதிலும் மேம்படுத்தியுள்ள நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி

குடும்பத்தாரை தமது வெளிநாட்டிலுள்ள அன்புக்குரியவர்களுடன் இணைப்பதற்காக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தனது வெளிநாட்டு பண அனுப்புகை சேவைகளை நாடுமுழுவதிலும் மேம்படுத்தியுள்ளது.

இலங்கையின் நிதி உறுதித்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் அதிகளவு வெளிநாட்டு பண அனுப்புகைகளை ஊக்குவிப்பதற்காக தனது வெளிநாட்டு பண அனுப்புதல் சேவையை பிரச்சாரப்படுத்த புதிய திட்டமொன்றை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்புபவருக்கும், இலங்கையில் பணத்தைப் பெறுபவருக்கும் அனுகூலமளனிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை வங்கி வடிவமைத்துள்ளது.

“கொடுக்கல் வாங்கலுக்கு அப்பாற்பட்ட ஓர் உறவு” எனும் தொனிப் பொருளின் கீழ், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வெளிநாட்டு பண அனுப்புகை சேவைகள், இலங்கையர்களை வெளிநாடுகளிலுள்ள தமது அன்புக்குரியவர்களுடன் இணைக்கும் ஊடகமாக அமைந்துள்ளது.

இதற்கமைய, குடும்பத்தாருடனும், அன்புக்குரியவர்களுடனும் தொடர்புகளை வெளிநாட்டு பண அனுப்புகையினூடாக பேண எதிர்பார்ப்போருடன் உறுதியான உறவுகளை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வங்கி கொண்டுள்ளது.


நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் உத்தியோகபூர்வ நாளிகைகளினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு பணத்தை அனுப்புவோரையும், பெறுவோரையும் ஊக்குவிக்கும் வகையில்,

வங்கியினூடாக இந்தச் சேவையைப் பயன்படுத்துவோருக்கு சுப்பர் மார்கெட் வவுச்சர்களை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

ரூ. 50000 அல்லது அல்லது அதற்கு நிகரான வெளிநாட்டு நாணய பண அனுப்புகைக்கும் தலா ஒரு வெற்றி வாய்ப்புக்கான பிரவேசம் வழங்கப்படும்.

மேலும், 2023 ஜுன் மாதம் 18 ஆம் திகதி இந்த ஊக்குவிப்புத் திட்டம் நிறைவடைந்த பின்னர் இடம்பெறும் மாபெரும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் தெரிவில் வெற்றியீட்டுபவருக்கு வெளிநாட்டு விமான பயணச் சீட்டு வழங்கப்படும்.

அதனூடாக, வெளிநாட்டில் அல்லது இலங்கையில் வசிக்கும் தமது குடும்பத்தாரை சென்று பார்வையிட்டு வருவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.

இதன் காரணமாக சிங்கருடனான நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பங்காண்மை என்பதனூடாக, நாடு முழுவதிலும் 500க்கும் அதிகமான பகுதிகளில் பிரசன்னம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் பெருமளவு சௌகரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலில், வெளிநாடுகளில் பணியாற்றுவோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொறுப்பு வாய்ந்த நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியினால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையினூடாக, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான வெளிநாட்டு பண அனுப்புகையை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சியினால், வாடிக்கையாளர்களுக்கு நுகர்வோர், வணிக மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் பல்வேறு தெரிவுகள் வழங்கப்படுகின்றன. நாடளாவிய ரீதியில் காணப்படும் தனது 96 கிளைகளினூடாக இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

நவீன டிஜிட்டல் வங்கியியல் தொழில்நுட்பங்கள் மற்றும் இலங்கையின் முன்னணி டிஜிட்டல் வங்கியியல் அனுபவமான FriMi ஊடாக டிஜிட்டல் வலுவூட்டல்களில் வங்கி கவனம் செலுத்துகின்றது.

இலங்கையில் American Express அட்டைகளை விநியோகிப்பதில் அங்கீகாரம் பெற்ற ஏக வழங்குநராக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி திகழ்வதுடன், சந்தையில் முன்னோடி நிலை மற்றும் உயர்தர பிரிவுகளையும் கொண்டுள்ளது.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *