இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் 51.3 சதவீதமானவர்கள் வறுமையில் !

நாட்டில் 0 முதல் 11 மாதங்கள் மற்றும் 4 வயதுடைய சிறுவர்களில் பாதி பேர் ஏழைகளாக உள்ளதாகவும் குறிப்பாக 0 முதல் 11 மாதங்கள் வயதுடையவர்கள் போஷாக்கு குறைபாட்டையும் 4 வயதுடையவர்கள் முன்பள்ளிகளில் அனுமதிக்கப்படாமலும் உள்ளதாக தேசிய மற்றும் சிறுவர் ஆய்வுகள் மூலம் வெளியாகியுள்ளது.

அத்துடன் மாவட்ட மட்டத்தில் வறுமைநிலை என்பது கொழும்பில் குறைந்த அளவான 3.5 சதவீதமாகவும் உயர்வாக நுவரெலியாவில் 44.2 சதவீதமாகவும் காணப்படுகின்றது என்றும் அந்த ஆய்வில்குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த ஆய்வு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன.

2021 ஆம் ஆண்டில், பல்வேறு இணைச் செயற்பாட்டாளர்களுடன் நெருக்கமான ஆலோசனையிலும் மற்றும் ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), ஒக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனித அபிவிருத்தியின் முன்முயற்சி (OPHI) எனும் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடனும் இலங்கையின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் (DCS) ஆனது இலங்கைக்கான முதல் அதிகாரபூர்வ தேசிய பல்பரிமாண வறுமைச் சுட்டெண்னை (தேசிய MPII) உருவாக்கியது.

இதற்காக குடித்தன வருமானம் மற்றும் செலவு பற்றிய அளவீடு – 2019 இன் தரவுகள் பயன்படுத்தப்பட்டது.

வறுமைக்கு பல அம்சங்கள் இருக்கும் போது, குறிப்பாக ஊட்டச்சத்து மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி போன்ற குழந்தை பருவத்திலுள்ள பற்றாக்குறைகள் பற்றிய அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். எனவே நிலைபேறான அபிவிருத்தி இலக்கு (SDG) 1, இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட “எல்லா இடங்களிலும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதல் “ என்ற சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்புக்கு இணங்க, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் உள்ள பற்றாக்குறைபாடுகள் உட்பட பணப் பற்றாக்குறைகளுக்கு அப்பால் தனிநபர்களுக்கான வறுமையை வெளிப்படுத்துகின்ற பல்வேறு வழிகளை இலங்கை அங்கீகரிக்கின்றது.

இலங்கையின் பல்பரிமாண வறுமைச் சுட்டெண் (MPI) ஆனது வறுமையின் ஒரு விரிவான முழுமையான காட்சியை உருவாக்குகிறது. ஏழை மக்கள் அனுபவிக்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட குறைபாடுகளின் ஒரு தொகுதியில் கவனம் செலுத்துவதன் மூலம் ஏழை மக்கள் யார் மற்றும் அவர்கள் எப்படி ஏழைகள் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

குழந்தைகளை மையமாகக் கொண்ட கொள்கைகளை மேலும் ஆராய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும், தேசிய பல்பரிமாண வறுமைச் சுட்டெண் MPI போன்ற அதே குறிகாட்டிகள், இலங்கையில் இரண்டு முக்கிய முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைக்கான பற்றாக்குறைகள்: ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தை பருவ வளர்ச்சி சேர்ந்து அடங்கும்.

0-4 வயதுடைய குழந்தைகளுக்கான தனிப்பட்ட குழந்தை MPI வடிவமைக்கப்பட்டது. தேசிய MPI உடன் நேரடியாகவும் துல்லியமாகவும் இணைக்கும் குழந்தை வறுமையின் முதல் உத்தியோகபூர்வ அளவீடாக இருப்பதில் இலங்கையின் குழந்தை MPI ஆனது முன்னோடியாக உள்ளது.

இலங்கை பல்பரிமாண வறுமைச் சுட்டெண் MPI என்பது நிலைபேறான அபிவிருத்தி இலக்கு SDG குறிகாட்டி 1.2.2 (“தேசிய வரையறைகளின்படி அதன் அனைத்து பரிமாணங்களிலும் வறுமையில் வாழும் அனைத்து வயதுடைய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் விகிதம்”) என அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும் பல பரிமாண வறுமையின் உத்தியோகபூர்வ நிரந்தர புள்ளிவிவரமாகும் மற்றும் பண வறுமை அளவை பூர்த்தி செய்யப் பயன்படுகிறது.

இன்னும், பல்பரிமாண வறுமைச் சுட்டெண் MPI என்பது வெறும் ஒரு புள்ளிவிவரம் அல்ல. இது ஒரு கொள்கைக்கான கருவியாகும். சமூக பிரிவுகளுக்கு, கவனம் செலுத்திய தலையீடுகள், கொள்கை வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குரிய அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பட்ஜெட் ஒதுக்கீடுகளை தெரிவிப்பதன் மூலம் – வரையறுக்கப்பட்ட வளங்களுடன் பல்வேறு பிரிவுகளில் வறுமைக் குறைப்பை விரைவுபடுத்துவதற்கு பொருத்தமான தகவல்களை வழங்குகிறது. வெவ்வேறு பரிமாணங்களில் ஒரே நேரத்தில் பற்றாக்குறையைப் படம்பிடிப்பதற்கு மேலதிகமாக, தேசிய மற்றும் குழந்தை MPIக்கள் வயது, பாலினம் அல்லது இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் பிரிக்கப்படலாம். கொள்கை தலையீடுகளை மையப்படுத்துவது எவ்வாறு என்பது பற்றிய விரிவான நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம், யாருக்காக மற்றும் எங்கு, வறுமைக்கு பல்வேறு குறைபாடுகள் எந்த அளவிற்கு பங்களிக்கின்றன என்பதைக் காட்ட இது பயன்படுத்தப்படலாம்.

இலங்கை தேசிய பல்பரிமாண வறுமைச் சுட்டெண் MPI மற்றும் குழந்தை பல்பரிமாண வறுமைச் சுட்டெண் MPI ஆகியவற்றில் இருந்து வெளிவரும் சில முக்கிய கண்டுபிடிப்புகள் உள்ளடக்குவது:

இலங்கையில் உள்ள மக்களில் ஆறில் ஒருவர் (16 சதவீதம்) பல்பரிமாணங்களில் ஏழைகளாக உள்ளனர்.

கொள்கை ரீதியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலையில் பெருந்தோட்டப் பகுதிகள் வறுமையின் தனிப்படுத்தப்பட்ட இடைக்குழிவுகள் ஆகும், இந்த பகுதிகளில் உள்ள அனைத்து மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் (51.3 சதவீதம்) வறுமையில் வாழ்கின்றனர்.

ஒவ்வொரு பத்தில் எட்டுக்கும் அதிகமான (80.9 சதவீதம்) ஏழை மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால் கிராமப்புறங்களும் முக்கிய கவனம் செலுத்தும் புள்ளியாக உள்ளது.

மாவட்ட மட்டத்தில் வறுமைநிலை என்பது கொழும்பில் குறைந்த அளவான 3.5 சதவீதத்திலிருந்து நுவரெலியாவில் 44.2 சதவீதமாக கணிசமாக வேறுபடுகின்றது.

ஒரே மாதிரியான MPI மதிப்புகளைக் கொண்ட மாவட்டங்களில் கூட, அதிக செலவு அற்ற செயற்பாட்டினைத் திட்டமிட, அதிக வினைத்திறனான கொள்கைகள் வறுமையின் குறிகாட்டிகளை கூட்டாக கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் மிகவும் ஏழ்மையான வயதின குழுவினராக 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் உள்ளனர். இவர்களின் அதிக தலைவிகிதாசார விகிதம் (17.9 சதவீதம்) MPI மற்றும் வறுமையின் தீவிரம் காணப்படுகிறது.

உடனடியான கொள்கை ரிதியிலான கவனம் தேவைப்படும் குறைபாடுகளாக போதுமான சுகாதார வசதிகளை அணுக முடியாதிருத்தல் மற்றும் அடிப்படை வசதிகள், தூய சமையல் எரிபொருள்கள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமை ஆகும்.

பற்றாக்குறை வடிவங்கள் – எனவே கொள்கை மற்றும் பாதிட்டு பிரதிஉபகாரங்கள் – மாவட்டம் மற்றும் வயதின் அடிப்படையில் மாறுபடும்.

5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில், சிறுவர் MPI ஐப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு 10 சிறுவர்களில் நான்கிற்கும் (42.2 சதவீதம்) அதிகமானோர் பல்பரிமாணங்களில் ஏழைகளாக உள்ளனர்.

தேசிய MPI மூலம் ஏழைகளாகக் கருதப்படும் அனைத்து சிறுவர்களும் தனிப்பட்ட நிலையில் சிறுவர் MPI மூலம் சமகாலத்தில் ஏழைகளாக உள்ளனர். மேலதிகமாக, நான்காவது பரிமாணத்தை சிறுவர் MPI ஆனது ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளை உள்ளடக்கியதாகவுள்ளது.

0-4 வயதுடைய சிறுவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (33.4 சதவீதம்) பல்பரிமாண ஏழ்மைநிலையிலும் எடை குறைவாகவோ அல்லது வளர்ச்சி குன்றியவர்கவோ உள்ளனர்.

0-4 வயதுடைய சிறுவர்களில் ஆறில் ஒரு பங்கினர் (16.4 சதவீதம்) பல்பரிமாண ஏழைகளாகவும் குழந்தைப் பருவ வளர்ச்சியில் பின்தங்கியவர்களாகவும் உள்ளனர்.

0-11 மாதங்கள் மற்றும் 4 வயதுடைய சிறுவர்களில் பாதி பேர் ஏழைகளாக உள்ளனர், குறிப்பாக 0 – 11 மாதங்கள் வயதுடையவர்கள் போஷாக்கு குறைபாட்டையும் 4 வயதுடையவர்கள் முன்பள்ளிகளில் அனுமதிக்கப்படாமலும் உள்ளனர்.

ஊக்கமளிக்கும் வகையில், இலங்கையில் ஆண்பிள்ளைகள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கு இடையில் வறுமை நிலைகளுக்கு புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *