பாதுகாப்பான வான் – பயணத்துக்கான தனது அர்ப்பணிப்பை நிரூபிக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (IATA) செயற்பாட்டுப் பாதுகாப்புக் கணக்காய்வை (IOSA) அண்மையில் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ததன் மூலம் பாதுகாப்பிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அர்ப்பணிப்பு என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஐஓஎஸ்ஏ (IOSA) புதுப்பித்தல் கணக்காய்வு நிறைவுக் கூட்டத்தில் செயற்பாட்டுத்தரம் விமானச் செயற்பாடுகள் மற்றும் செயற்பாட்டுக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்களுடன் ஐஓஎஸ்ஏ (IOSA) கணக்காய்வாளர்கள்.

ஐஓஎஸ்ஏ (IOSA) திட்டமானது விமான இயக்க பாதுகாப்பிற்கான உலகளாவிய தொழில்துறை தரநிலையாகும். இதில் ஐஏடிஏ (IATA) வின் உறுப்பு விமான நிறுவனங்கள் ஒவ்வொரு இரண்டு வருடமும் கணக்காய்வு செய்யப்படுகின்றன.

ஐஓஎஸ்ஏ (IOSA) திட்டத்தின் கீழ்ரூபவ் நிறுவன மற்றும் முகாமைத்துவ முறைமை விமான செயற்பாடுகள் செயற்பாட்டுக் கட்டுப்பாடு மற்றும் விமானப் பயணம் விமானப் பொறியியல் மற்றும் பராமரிப்பு, கேபின் (Cabin) செயற்பாடுகள்; தரையைக் கையாளுதல் செயற்பாடுகள்; சரக்கு செயற்பாடுகள்; மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவம் போன்ற ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் எட்டு பகுதிகள் குறித்து கணக்காய்வு செய்யப்பட்டது.

கையேடுகள், பயிற்சி தொடர்பான பதிவுகள் மற்றும் நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் போன்றன தொடர்பாக முறையாக கணக்காய்வு செய்யப்பட்டதுடன் அவ்வாறே பௌதீக மதிப்பீடுகள் மற்றும் விமான ஆய்வுகள் ஆகியவை குறித்தும் முறையாக சரிபார்க்கப்பட்டது.

மிகக் கடுமையான நடைமுறையினைத் தொடர்ந்து குறித்த எட்டுப் பகுதிகளையும் ஸ்ரீலங்கன் வெற்றிகரமாகக் கடந்து வந்தது.

ஐஏடிஏ (IATA)இல் முழு உறுப்புரிமை பெறுவதற்கு ஐஓஎஸ்ஏ (IOSA) பதிவு அவசியமானது என்பதற்கும் அப்பால்ரூபவ் இப்பதிவு பல காரணங்களுக்காக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

அதன் பல அனுகூலங்களுக்கு மத்தியில், ஐஓஎஸ்ஏ (IOSA) தரநிலைகளுடன் இணங்கிச் செயலாற்றுவதானது, உலகளாவிய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பில் எப்போதும் மாறிவரும் சிறந்த நடைமுறைகளின் உச்சியில் ஸ்ரீலங்கனை தொடர்ந்தும் நிலைநிறுத்துவதற்கு உதவுகின்றது.

இது ஸ்ரீலங்கனை ஐஓஎஸ்ஏ (IOSA) பதிவேட்டில் பட்டியலில் தொடந்தும் வைத்திருப்பதற்கும் ஐஏடிஏ கிளியரிங் ஹவுஸ் (IATA Clearing House) மூலம் சௌகரிகமாக விலைப்பட்டியல்களைச் செலுத்துதல் போன்ற பலன்களைப் பெறுவதற்கும் உதவுகின்றது.

இந்தப் பதிவு ஸ்ரீலங்கன் மற்ற விமான நிறுவனங்களுடன் குறியீட்டு பகிர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு மேலும் வாயில்களைத் திறந்துவிடுகின்றது அத்துடன் புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் கூட்டணிகளை மூடிவிடுவதில் ஒரு துருப்புச் சீட்டாகவும் பயன்படுகின்றது.

மிக முக்கியமாக, இது விமானப் போக்குவரத்தில் மிகவுயர்ந்த சர்வதேச தரங்களுக்கு இணையான நிலையான செயற்பாட்டுப் பாதுகாப்புத் தரங்களுக்கு விமான நிறுவனம் கொண்டுள்ளது என்பது ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு விசுவாசமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அது வழங்கும் ஓர் உத்தரவாதமாகும்.

விமானத் துறையிலும் விமானத்தின் நாளாந்த செயற்பாட்டை நிர்வகிக்கும் பல கொள்கைகள் மற்றும் முறைமைகளிலும் பாதுகாப்பு என்பது ஒரு முக்கிய கருப்பொருளாக அமைந்துள்ளது.

இந்த ஐஓஎஸ்ஏ (IOSA) பதிவு என்பது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சிறந்த சாதனைப் பதிவு மற்றும் இந்த முக்கியமான அனைத்துப் பகுதிகளிலும் அது மேற்கொள்ளும் தீவிர முயற்சிகள் என்பனவற்றைச் சரிபார்ப்பதாகவும் அமைகின்றது.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *