உலகம்

எரிபொருள் விலை குறைகின்றது !

அடுத்த மாதம் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (21) உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் டிசெம்பர் மாதம் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

“கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மேலும் ரூபாயின் பெறுமதியும் வலுவடைந்து வருகின்றது.

எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாங்கள் அந்த சலுகைகளை வழங்குவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Hot Topics

Related Articles