உலகம்

Architect 2023 கண்காட்சியில் வண்ணமயமான ஈடுபாட்டை பேணிய டியுலக்ஸ்

Architect 2023 கண்காட்சியில், இலங்கையின் முன்னணி பெயின்ட் மற்றும் மேற்பூச்சு உற்பத்தியாளரான டியுலக்ஸ் பங்கேற்றிருந்ததுடன், புத்தாக்கமான வர்ணப் பயன்பாட்டுடனான சிறந்த விற்பனைக் காட்சி கூடம் எனும் விருதையும் சுவீகரித்திருந்தது.


இலங்கை கட்டடக்கலை நிபுணர்கள் (SLIA) நிறுவகத்தினால் 41 ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Architect 2023 வருடாந்த விற்பனை சந்தைக் கண்காட்சி BMICH இல் பெப்ரவரி 24 – 26 ஆம் திகதி வரை இடம்பெற்றது. முன்னணி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு நிர்மாணங்கள் மற்றும்
கட்டடக்கலைத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்கள் இந்த கண்காட்சி நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் உறுதியான பிரசன்னத்தை டியுலக்ஸ் கொண்டிருந்ததுடன், Colour Futures ’23இல் தனது ஆண்டின் வர்ணமான Wild Wonder ஐக் கொண்டு காட்சிகூடத்தை அலங்கரித்திருந்தது.

இந்த காட்சிகூடத்துக்கு விஜயம் செய்திருந்த பார்வையாளர்களுக்கு
நான்கு வர்ணத் தெரிவுகளைப் பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.


Lush, Buzz, Raw மற்றும் Flow ஆகிய இயற்கையுடன் நெருங்கிய வகையில்
தயாரிக்கப்பட்ட இந்த வர்ணங்கள் பற்றி, டியுலக்ஸ் வர்ண நிபுணர்களினால் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

பார்வையாளர்களின் சொந்தப் பணி மற்றும் வாழிடப்பகுதிகளில்
சிறந்த வகையில் இந்த வர்ணங்களைப் பயன்படுத்துவதைப் பற்றியும் விளக்கியிருந்தனர்.

Architect 2023 நிகழ்வில் உள்ளக, வெளியக பகுதிகளுக்கான வர்ணத் தெரிவுகளுடன் பார்வையாளர்கள் மத்தியில் புகழ்பெற்ற காட்சிகூடமாக அமைந்திருந்தது.

“Architect 2023 என்பது டியுலக்ஸ் அணிக்கு துறைசார்ந்த நிபுணர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், சர்வதேச பெயின்ட்கள் மற்றும் மேற்பூச்சு வகைகள் பற்றி பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து அவற்றை விளக்கமளிப்பதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்திந்தது.

SLIA உடன் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் உறவை நாம் பேணியுள்ளதுடன், அடுத்தாண்டும் பங்கேற்பதற்கான திட்டத்தைக் கொண்டுள்ளோம்.” என AkzoNobel பெயின்ட்ஸ் ஸ்ரீ லங்கா சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி உபேந்திர குணவர்தன தெரிவித்தார்.

Hot Topics

Related Articles