உலகம்

இலங்கை ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களித்து வரும் Divolca

இலங்கையின் மின்சார உபகரண வர்த்தக நாமமான Divolca, தனது வர்த்தக நாமத்தை மேலும் தரநிலைப்படுத்தப்பட்ட முறையில் நவீனமயப்படுத்தப்பட்டு பல மேம்படுத்தப்பட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருகின்றது.

இந்த புத்தாக்கத்துடன் சர்வதேச தரம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான மின்சார உபகரணங்களை இலங்கை சமூகத்திற்கு மலிவு விலையில் வழங்குவதே Divolca நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.

அதன்படி, Micro Electric International (PVT) Ltd நிறுவனம் நவீனமயப்படுத்திய கட்டமைப்பு மாற்றத்துடன் The ME Group குழுமமாக நிறுவப்படும்.

இந்த தருணத்தில் இணைந்த The ME Group குழுமத்தின் தலைவர் தம்மிக்க சமரவிக்ரம ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

100% உள்ளூர் நிறுவனமான Divolca ஐ புதிய புத்தாக்கமான நவீனமயப்படுத்திய வேறுபாட்டுடன் ME குழுவாக நிறுவுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எமது தரமும் நம்பகத்தன்மையும் சர்வதேச அளவில் கூட எமது நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்று நான் நம்புகிறேன்.

இந்த பெருமையான தருணத்தில், எங்கள் நிறுவனத்துடன் கைகோர்த்த வாடிக்கையாளர்கள், ஒட்டுமொத்த பணியாளர்கள், அனைத்து மின்னியலாளர்கள் மற்றும் எங்கள் விநியோக முகவர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரையான எமது பயணத்தில் பல இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியமை எமது சாதனையாகும். அத்தியாவசிய மின் சாதனங்கள் மற்றும் கருவிகளை எமது நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஓர் உள்ளூர் நிறுவனம் என்ற வகையில் எமது பங்களிப்பையிட்டு நான் பணிவுடன் பெருமையடைகின்றேன்.

மேலும், அந்தச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், எமது விநியோக வலையமைப்பை வலுப்படுத்துவதற்கு புதிய முகவர்களை நியமித்து, நாட்டிற்குப் புதிய வேலைகளை உருவாக்குவதற்கு எமது நிறுவனம் தனது கரங்களை நீட்டத் தயாராக உள்ளது.

இலங்கையின் உற்பத்தி எனும் வகையில் உலகம் முழுவதும் பேசப்படும் Divolca மின்சாதனங்களை பரந்த அளவிலான நவீனமயப்படுத்தி முன்னோக்கிச் செல்லும் பயணம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

மும்பையில் அமைக்கப்பட்டுள்ள எமது தொழிற்சாலையை விரிவுபடுத்தி, சர்வதேச தேவைக்கேற்ப மின்சார உதிரிப்பாகங்களை வழங்க ஆரம்பித்திருப்பது இலங்கை நிறுவனமாகிய எமக்கு கிடைத்த மற்றுமொரு சாதனையாகும்.

இந்த அனைத்து நடவடிக்கைகளின் மூலம், வலுவான மற்றும் துடிப்பான இலங்கையுடன் உலகை ஒளிரச் செய்வதே எமது ஒரே நம்பிக்கையாகும்.

இத்தருணத்தில் அனைத்து இலங்கையர்களையும் இந்த இலங்கைத் தேசியப் பணியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன். நாம் கைகோர்த்து எமது பலத்துடன் இலங்கையை ஒளிமயப்படுத்தும் பயணத்தை இன்று முதல் ஆரம்பிப்போம்.

இந்த நவீனப்படுத்தல் நடவடிக்கையுடன் ME குழுமத்தின் புதிய பணிப்பாளர்கள் குழுவும் நியமிக்கப்பட்டது.

அதற்கமைய, குமாரி சமரவிக்ரம பிரதித் தலைவராக உள்ள நிறுவனத்தின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராக ஷெஹான் சமரவிக்ரமவும் புதிய செயற்பாட்டுப் பணிப்பாளராக உதார சமரவிக்ரமவும் நிதி மற்றும் திட்டமிடல் பணிப்பாளராக ஷெனால் சமரவிக்ரமவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Divolca வர்த்தக நாமத்தின் கீழ் சுமார் 50 மின்சார உபகரணங்களை கொண்ட நிறுவனமான ME வர்த்தக நாமம், SLS மற்றும் ISO தரநிலைகளுக்கு இணங்க உற்பத்தி செய்யும் நம்பகமான, தரநிலைப்படுத்தப்பட்ட, தரமான வர்த்தக நாமமாக மிகவும் வலுவாக வளர்ந்து வருகிறது.

Hot Topics

Related Articles