உலகம்

GOODLIFE X மற்றும் SLTC ஆகியன உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் முன்னணி புத்தாக்க மற்றும் அபிவிருத்தி வழிகாட்டியாகத் திகழும் Good Life X (GLX) இனால், இலங்கை தொழில்நுட்பவியல் கம்பஸ் (SLTC) உடன் பங்காண்மை உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

SLTC, திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள் பணிப்பாளர் – ஹெமிந்த ஜயவீர, SLTC – ஸ்தாபகர், தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி – ரஞ்ஜித் ஜீ. ரூபசிங்க, Good Life X, ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி – ரந்துலா டி சில்வா ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றனர்.

 

அதனூடாக, நாட்டில் தொழில்முனைவோர் சூழல்கட்டமைப்பை வலிமைப்படுத்தவும் அடுத்த தலைமுறை புத்தாக்க சிந்தனையாளர்களை கட்டியெழுப்பவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு புதிய புத்தாக்க சிந்தனை அடிப்படையிலான மீள்செயற்படுத்தக்கூடிய மற்றும் நிலைபேறான வியாபார செயன்முறைகளில் கவனம் செலுத்தும் வளர்ச்சி தேவைப்படும் காலகட்டத்தில் இந்த பங்காண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் தொழில்முயற்சியாண்மை என்பது பல கற்கைகளில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், நிஜ வாழ்க்கையில் நிலவும் வெற்றி மற்றும் தோல்வி நிறைந்த சூழ்நிலைகளை புரிந்து கொள்வதற்கு பிரயோகசார் அனுபவங்களை தேவையாகக் கொண்டுள்ளது.

மாணவர்கள் தொழில்முயற்சியாண்மை மற்றும் புத்தாக்கம் தொடர்பான வகுப்புகளை பின்பற்றும் போதிலும், பிரயோக அனுபவம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்துள்ளது.

GLX மற்றும் SLTC இடையிலான பங்காண்மையினூடாக இந்த இடைவெளியை சீர்செய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், கம்பஸ் மாணவர்கள் மத்தியில் பிரயோக திறன்களை கட்டியெழுப்புவதுடன், நிஜ உலகில் சவால்களுக்கு முகங்கொடுக்க உதவுவதாக அமைந்துள்ளது.

வழமைக்கு அப்பாலான சிந்தனை, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மாறுபட்ட வழிமுறைகளை பின்பற்றுவது மற்றும் முக்கியமாக, தம் சக ஊழியர்களிடையே இணைந்து செயலாற்றி, சிந்தனைகளை வெளிப்படுத்துவது போன்றவற்றை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தப் பங்காண்மையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தப் பங்காண்மையினூடாக, கொழும்பு ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியிலுள்ள SLTC இன் சிட்டி கம்பசுக்கு பிரத்தியேகமான மற்றும் புத்தாக்கமான வழிமுறைகளை ஏற்படுத்தி அளவிடக்கூடிய தாக்கம், துரிதப்படுத்தப்பட்ட சிறந்த வளர்ச்சி வியாபார மாதிரிகள் போன்றன GLX இனால் வழங்கப்படுவதுடன், பழைய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க புதிய வழிமுறைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பங்காண்மையினூடாக, இரு தரப்பினருக்கும் தமது வலிமைகளை ஒன்றிணைத்து, உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் காணப்படும் சமூக, பொருளாதார மற்றும் சூழல் சவால்களுக்கு முகங்கொடுப்பது, வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

குறிப்பாக, நிலைபேறாண்மை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். GLX இனால் SLTC இன் பிரச்சனைகளை தீர்த்தல், புத்தாக்கம் மற்றும் SLTC இன் தொழில்முயற்சியாண்மை நிபுணத்துவம் போன்றவற்றை கட்டியெழுப்புவதில் பங்களிப்பு வழங்கி, வினைத்திறனானதாகவும், தற்காலப் பகுதிக்கு பொருத்தமான வகையிலும் அமையச் செய்யப்படும். SLTC இன் தொழிற்துறைசார் கல்விக் கட்டமைப்புகள், புத்தாக்கம் மற்றும் ஆய்வுகள் போன்றவற்றுக்கு GLX இனால் பங்களிப்பு வழங்கப்படுவதற்கு மேலதிகமாக, SLTC இன் கல்விக் கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்கு நிகழ்ச்சித்திட்டங்களுடன் ஈடுபடவும், செயற்பாடுகளில் பங்குபற்றக்கூடிய வகையில் GLX இனால் ஒழுங்குபடுத்தல்கள் செய்யப்பட்டிருந்தன.

கொழும்பு ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியிலுள்ள SLTC சிட்டி கம்பசினுள் வளாக புத்தாக்க நிலைபேறாண்மை பங்காளராக Good Life X அமைந்திருக்கும். GLX இன் புத்தாக்கமான சமூக கட்டியெழுப்பல் முறைகளுடன் SLTC மற்றும் ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டி ஆகியவற்றின் சமூகங்களை இணைத்து பிரயோக அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தெற்காசியாவில் புதிய வாழ்க்கைமுறை மேம்படுத்தல் நிறுவனங்களை கட்டியெழுப்புவதில் பங்களிப்பு வழங்கும் புத்தாக்க மற்றும் அபிவிருத்தி வழிகோலியாக Good Life X (GLX) திகழ்கின்றது. GLX இனால் ஆரம்பநிலை நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தமது தீர்வுகளினூடாக அவசியமான அறிவு மற்றும் நிபுணத்துவம் போன்றன வழங்கப்படும்.

இலங்கையில் காணப்படும் முதலாவது துறைசார் புத்தாக்க கட்டமைப்பாக GLX அமைந்துள்ளதுடன், நெகிழ்ச்சியான, புதுப்பிக்கத்தக்க மற்றும் பரந்தளவு வழிமுறைகளினூடாக, பழைமை மற்றும் புதியன இடையே இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன், உணவு மற்றும் விவசாயம், சுற்றறிக்கை வடிவமைப்பு, ஆரோக்கியம் மற்றும் சுற்றுலா போன்ற பகுதிகளில் 2019 ஆம் ஆண்டு முதல் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட வண்ணமுள்ளன.

இலங்கையின் ஒரே அரச சாரா ஆய்வு பல்கலைக்கழகமாக SLTC திகழ்வதுடன், தற்போது பரந்தளவு பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு கற்கைகளை, பொறியியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல் மற்றும் கணனியியல், வியாபாரம், விஞ்ஞானம் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் வழங்குகின்றது.

பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதியளிக்கப்பட்ட பட்டப்படிப்பு கற்கைகளுக்கு மேலதிகமாக, SLTC இனால் பல்வேறு பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு கற்கைகளும் முன்னணி ஐக்கிய இராஜ்ஜிய, நியுசிலாந்து, அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா, சிங்கப்பூர், இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வழங்கப்படுகின்றன.

2015 ஆம் ஆண்டு, இலங்கையின் முதலாவத அரச சார்பற்ற கூட்டாண்மை பின்னூட்டலுடன் இயங்கும் பொறியியல் பல்கலைக்கழகமாக தாபிக்கப்பட்ட SLTC, நாட்டின் அரச சாரா உயர்கல்வித் துறையின் புறத்தோற்றத்தை ஆய்வு மற்றும் புத்தாக்கங்களினூடாக மாற்றியமைத்துள்ளது. பாதுக்க மற்றும் கொழும்பு எக்ஸ்பேர்ட் ட்ரேஸ் சிட்டியில் அமைந்துள்ள இரு பல்கலைக்கழகங்களினூடாக, மாணவர்களுக்கு இணைந்த பயிலல் அனுபவச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

 

GLX பற்றி

இலங்கையிலுள்ள ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் முதிர்ச்சியடைந்த நிறுவனங்களுக்கு தமது தயாரிப்புகளை மேம்படுத்திக் கொள்வது, உள்ளக மற்றும் வெளியக செயன்முறைகளை மேம்படுத்திக் கொள்வது, பிராந்தியங்கள் மற்றும் ஏனைய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்கு தமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விஸ்தரித்துக் கொள்வதற்கு அவசியமான ஆதரவுகளை GLX வழங்குகின்றது. 2019 ஆம் ஆண்டு முதல் GLX தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், உணவு, அலங்கார வடிவமைப்பு, பிரயாணம் மற்றும் ஆரோக்கியம் போன்ற துறைகளில் வியாபாரங்கள் மற்றும் வர்த்தக நாமங்களைக் கட்டியெழுப்புவதில் பணியாற்றுகின்றது. மாதிரித் திட்டமாக 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட GLX, உணவு, விவசாயம், அலங்கார வடிவமைப்பு, ஆரோக்கியம் மற்றும் சுற்றுலாப் பிரிவுகளில் நிலைபேறான உள்நாட்டு ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு வியாபாரங்களை மேம்படுத்துவதில் கொண்டுள்ள தனது ஆழமான அனுபவம் மற்றும் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு செயலாற்றுகின்றது. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் (100) அதிகமான நிறுவனங்களுடன் GLX பணியாற்றுகின்றது.

Hot Topics

Related Articles