யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழையமாணவர் சங்க கொழும்பு கிளையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வருடாந்த நத்தார் ஒன்றுகூடல் எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த நத்தார் ஒன்றுகூடல் நிகழ்வு கொழும்பு – 6 டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கிறீன் பலஸ் விருந்தினர் விடுதியில் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
கிறிஸ்மஸ் கரோல் பாடல்களுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்ச்சிக்கு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழையமாணவர் சங்க கொழும்பு கிளையின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் தலைமை தாங்குகிறார்.
நத்தார் ஒன்றுடலில் பங்கேற்க விரும்புவோர் செயலாளர் 0773405628 , பொருளாளர் 0777788127 ஆகிய தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.