உலகம்

இலங்கைக்கே உரிய உணவு வகைகளுடன் இன்பமான பயணத்தை தொடரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ‘ஸ்ரீலங்கன் ஃப்ளேவர்ஸ்’ (Srilankan Flavours) எனும் தொனிப்பொருளின் கீழ், இலங்கைக்கே உரிய உணவு வகைகளில் சுவையான புதியரக உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.

அதன் இலங்கைக்கே உரிய உணவு விருப்பத்தேர்வுக்கான புதிய அறிமுகங்கள், ஸ்ரீலங்கன் விமான சேவையின் நீண்ட தூர மற்றும் நடுத்தர தூர விமானங்களிலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரத்தியேக வணிக வகுப்பு ஓய்வறைகளிலும் கிடைக்கப்பெறக் கூடியதாக இருக்கும்.

 

தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சமையல் பாரம்பரியத்தின் அடிப்படையில் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் பொருட்களின் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவப் பயன்களை வலியுறுத்துவதன் ஊடாக சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையின் உணவு வகைகளைக் காட்சிப்படுத்துவதே மறுவடிவமைக்கப்பட்ட உணவுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

புதிய கவர்ச்சிகரமான உணவுகளின் வரிசையில் முட்டை ரொட்டி மற்றும் பராவ் (Paraw) மீன் கறி மற்றும் வறுத்த இறால் பாரம்பரிய கறிகளுடன் துந்தேள் (Dhunthel) அரிசிச் சோறு கோழி இறைச்சி மிளகு கறி மற்றும் உள்ளூர் காய்கறிகளுடன் பரிமாறப்படும் குருளுதுடா (Kuruluthuda) பரம்பரை அரிசிச் சோறு பால்கறி, கொண்டைக்கடலை கறி, மற்றும் லுணுமிரிஸ் (lunumiris) ஆகியவற்றுடன் பிட்டு மற்றும் லாம்ப்ரைஸ் (Lavariya) போன்ற முக்கிய உணவு வகைகள் அடங்குகின்றன.

இந்த தனித்துவம் வாய்ந்த இலங்கைக்கே உரிய பிரதான உணவு வகைகளை லாவரியா (Lavariya) மற்றும் தயிர் உடன் வரக்கா (waraka) போன்ற அதற்குச் சமமான சுவையுடைய இனிப்புப் பண்டங்கள் பூரணப்படுத்துகின்றன.

தேங்காய் கூழுடன் செவ்விளநீர் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்கள் உள்@ர் வெள்ளரி மற்றும் தேன் மற்றும் அன்னாசி மற்றும் கற்றாளை (aloe vera) ஆகியவையும் இவ்வுணவுப் பட்டியலில் அடங்குகின்றன.

இப்புதிய உணவு விருப்பத்தேர்வுகள் நார்ச்சத்து, தாதுக்கள், மற்றும் குரக்கன், இஞ்சி, கருவா கறிவேப்பிலை, கிராம்பு, மற்றும் குருளுதுடா (Kuruluthuda) இலங்கையின் பரம்பரை அரிசி வகை போன்ற உள்நாட்டில் கிடைக்கும் முதன்மையான மூலப்பொருட்களிலிருந்து கிடைக்கப்பெறும் ஆரோக்கிய பண்புகளால் நிரம்பியுள்ளன.

நம்பகமானதும் பல நூற்றாண்டுகள் பழமையான பூர்வீக சமையல் செய்முறைகள் மற்றும் சமையல் முறைமைகளைப் பயன்படுத்தி இலங்கையின் சமையல் அனுபத்தை வரையறுக்கும் உள்ளார்ந்த சுவைகள், அமைப்புக்கள் மற்றும் ஆரோக்கிய அம்சங்களை மேம்படுத்துவதற்காக சேர்வைப்பொருட்கள் சமையலில் கலக்கப்படுகின்றன.

ஆதலால், ஒவ்வொரு உணவு வகையும் ருசியாக இருத்தல் மட்டும் இல்லாமல், ஊட்டச்சத்து நிரம்பியதாகக் காணப்படுவதுடன், ஆரேக்கிய உணர்வுள்ள, சமகால சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதாகவும் உள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் (Richard Nuttall)

, “இலங்கைப் பாரம்பரியத்தின் வெளிப்பாடாக, ஐம்புலன்களையும் தூண்டக்கூடிய இந்த புதிய உணவு வகைகளை எங்கள் விமான உணவு வகைகளில் அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இதற்கும் மேலாக, இலங்கைத் தீவின் பாரம்பரிய சுவையான உணவு வகைகளை சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதன் மூலம் இலங்கையின் சமையல் கலாச்சாரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நாம் உதவுகின்றோம்” எனக் கூறினார்.

ஸ்ரீலங்கன் ஃப்ளேவர்ஸ் (Srilankan Flavours) பிரச்சாரமானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு மேலான மற்றும் மிகச்சிறந்த இலங்கை விமான அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட விமான நிறுவனத்தின் பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

குறிப்பாக இலங்கை உணவு வகைகள் ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானத் தயாரிப்பின் ஒரு பகுதியாக இருந்து வருவதுடன், அடிக்கடி பயணம் செய்பவர்கள் பலர் தாம் பயணம் மேற்கொள்ளும் போது விமான நிறுவனத்தினால் வழங்கப்படும் இலங்கைக்கே உரிய உணவு வகைககளை எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணிக்கும் போதெல்லாம், பயணிகள் தங்களுடைய விமானப் பயண மெனுவில் (Menu) இலங்கையின் உணவு விருப்பத்தேர்வை பார்வையிட்டு பரந்த மனப்பான்மையுடன் இலங்கைக்கே உரிய உணவை அனுபவிப்பதற்கு எப்போதும் எதிர்பார்க்க முடியும்.

ஸ்ரீலங்கன் அதன் உள்ளார்ந்த சேவையில் பல்வேறுபட்ட மேம்பாட்டு அம்சங்களைத் தொடர்ந்தும் அறிமுகப்படுத்துகின்ற அதே வேளையில், இலங்கைக்கே உரிய உணவு விருப்பத்தேர்வுகளின் வீச்சையும் காலப்போக்கில் விரிவு படுத்துவதற்குத் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக, இவ்விமான சேவையின் நம்பிக்கை யாதெனில், இலங்கையில் இருந்து வெளிக்கொணரப்படும் அனுபவத்தை வழங்குவதன் மூலம் தனது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதும், அதனால் சர்வதேச ரீதியில் சிறந்த அனுபவத்தை வழங்குவதுமாகும்.

வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக ஸ்ரீலங்கன் மேற்கொள்ளும் முயற்சிகள் கவனிக்கப்படாமல் விட்டுவிடப்படாது என்பதுடன், விமானத்தின் உள்ளார்ந்த சேவை சிறந்த முறையிலேயே வழங்கப்பட்டு வருகின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்குரிய மத்திய – தெற்கு ஆசியாவில் மிகச்சிறந்த உணவு மற்றும் பானங்கள் மற்றும் மிகச்சிறந்த இருக்கை வசதிக்கான எபெக்ஸ் பெஸென்ஜர் சொய்ஸ் எவோர்ட்ஸ்® (2023 APEX Passenger Choice Awards®) ஐ அண்மையில் வெற்றிகொண்டதன் மூலம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் வாடிக்கையாளர்களாலேயே சரிபார்க்கப்படுகின்றது.

 

 

Srilankan Flavours

 

 

Hot Topics

Related Articles