● 2023 ஆம் ஆண்டின் இறுதியில் TRI-ZEN நிர்மாணப் பணிகள் பூர்த்தியாக்கத் திட்டம்
● திட்டத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளன
● TRI-ZEN 74% விற்பனையாகியுள்ளன
● மூன்று டவர்களினதும் கட்டமைப்பு நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன
ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் நிர்மாணிக்கும் ஸ்மார்ட் வதிவிடத் தொகுதியான TRI-ZEN, கொழும்பு 2, யூனியன் பிளேஸ் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ளது.
தற்போதைய பொருளாதாரச் சவால்கள் நிறைந்த சூழலிலும், இந்த மூன்று டவர்களினதும் MEP மற்றும் பூர்த்தியாக்கும் பணிகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
நிர்மாணத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்திரா டிரேடர்ஸ் (பிரைவட்) லிமிடெட் மற்றும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆகிய இணை நிறுவனங்களின் அணிகள், மற்றும் TRI-ZEN இன் ஒப்பந்தக்காரரான நிர்மாணத்துறையில் சர்வதேச முன்னோடியாக அமைந்துள்ள – China State Construction Engineering Corporation Ltd (CSCEC) ஆகியன நிர்மாணத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டின் இறுதியில் பூர்த்தி செய்யும் குறிக்கோளுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றன.
ஜோன் கீல்ஸ் புரொப்பர்டி குரூப் பொறியியல் பிரிவு தலைமை அதிகாரி லும்பினி பத்திரகே கருத்துத் தெரிவிக்கையில், “3ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
அடுத்த ஆண்டில் (2023) பல உரிமையாளர்களுக்கு தொடர்மனைகளை எம்மால் கையளிக்கக்கூடியதாக இருக்கும். TRI-ZEN இன் செயற்திட்ட அணிகளின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் பலனாக இந்த நிலையை எம்மால் எய்தக்கூடியதாக இருப்பதுடன், சவால்கள் நிறைந்த காலத்திலும் எம்மால் தொடர்ந்து இயங்கக்கூடியதாக அமைந்துள்ளது.” என்றார்.
TRI-ZEN நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்ததும், மூன்று குடியிருப்பு டவர்கள் காணப்படும். இவற்றில் மொத்தமாக 891 தொடர்மனைகள் அடங்கியிருக்கும். இவை 1, 2 மற்றும் 3 படுக்கையறை அலகுகளாக காணப்படும். ஒவ்வொரு அலகிலும் உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதனூடாக, குடியிருப்பாளர்களுக்கு சௌகரியமான மற்றும் ஒப்பற்ற வாழ்க்கை முறையை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.
திட்டத்தின் முன்னேற்ற நிலை தொடர்பில், China State Construction Engineering Corporation Ltd – செயற்திட்ட முகாமையாளர், ஜோர்டன் லி கருத்துத் தெரிவிக்கையில், “TRI-ZEN இன் பிரதான ஒப்பந்தக்காரர் எனும் வகையில்,
சவால்கள் நிறைந்த சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலைகளிலும், குறைந்தளவு தாமதங்களுக்கு முகங்கொடுத்து, தொடர்ச்சியாக நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பது இலக்காக அமைந்துள்ளது.
நிர்மாணத்தில், தொழில்நுட்ப ரீதியில், ஸ்மார்ட் திட்டங்களுக்காக, நிபுணத்துவம் மற்றும் புத்தாக்கத்துக்காக CSCEC சர்வதேச ரீதியில் அறியப்படுகின்றது.
கொழும்பின் வானுயர்ந்த கட்டடங்கள் மத்தியில் மாத்திரமன்றி, எமது மொத்த நிர்மாணங்களிலும் ஜொலிக்கும் நிர்மாணத் திட்டமாக TRI-ZEN அமைந்திருக்கும் என்பதுடன், இதில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.
TRI-ZEN இல், வதிவிடப் பகுதிகள், சூழலுக்கு நட்பான பசுமையான பகுதிகள், ஜொகிங் திடல், நீச்சல் தடாகங்கள், உடற் தகைமை மற்றும் ஆரோக்கிய ஸ்ரூடியோக்கள் மற்றும் கேம்ஸ் அறை மற்றும் பல இதர அம்சங்கள் அடங்கியிருக்கும்.
இந்த தொடர்மனைத் தொகுதியின் அமைவிடம் காரணமாக மிகவும் கவர்ச்சிகரமான தெரிவாக அமைந்துள்ளது. குறிப்பாக, கொழும்பின் பொதுப் போக்குவரத்துப் பகுதிகள், வியாபார மையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொழுதுபோக்குப் பகுதிகள் போன்றவற்றை இலகுவாக சென்றடையக்கூடிய தூரத்தில் இது அமைந்துள்ளது.
TRI-ZEN – ஜோன் கீல்ஸ் புரொப்பர்டியின் வதிவிட செயற்திட்டமாக அமைந்திருப்பதுடன், கொழும்பு 2, யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்படுகின்றது.
இதில் 3 வதிவிட தொகுதிகள் காணப்படுவதுடன், இவற்றில் 1, 2 மற்றும் 3 படுக்கையறை அலகுகள் காணப்படுகின்றன. உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் அலங்கார உள்ளம்சங்களைக் கொண்டு இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்படுகின்றது.
இலங்கையின் முன்னணி சொத்துக்கள் வடிவமைப்பு மற்றும் நிர்வகிப்பு நிறுவனமான ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ், நகரின் மாற்றமடைந்து வரும் நிர்மாணத் துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது.