உலகம்

சிறப்பு அமர்வுடன் மீண்டும் ஜனவரியில் FACETS Sri Lanka கண்காட்சி

 

· அழகு ஆபரணங்களை அலங்கரிக்கும் மையப்புள்ளியாக இரத்தினக்கற்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்

· இலங்கையின் 2,500 வருடகால வணிக வரலாற்றை பிரதிபலிக்கும் காட்சியின் சிறப்பம்சமாக Ceylon Sapphire

· ஜனவரி 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை சினமன் கிரான்ட் ஹோட்டலில் கண்காட்சி

இரத்தினக்கற்களை வாங்கவும், விற்கவும் உலகெங்கிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் நாளேட்டில் மிகவும் முக்கியமானது, FACETS Sri Lanka கண்காட்சி.


இரு வருடகால இடைவெளிக்குப் பின்னர், இந்தக் காட்சியை மீண்டும் நடத்த ஏற்படாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை, Ceylon Sapphire இன் இல்லமாகக் கருதப்படும் இலங்கைத் தீவின் சிறப்பக்களை உள்ளடக்கியதாக, கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் மிகவும் கோலாகலாமான முறையில் FACETS Sri Lanka கண்காட்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சி பற்றி விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இரத்தினக்கல், தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் (NGJA) தவிசாளர் விராஜ் டி சில்வா, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையின் தவிசாளர் சுரேஷ் டி மெல், FACETS Sri Lanka வின் தவிசாளர் அல்தாவ் இக்பால், இலங்கை இரத்தினக்கல் ஆபரண சங்கத்தின் (SLGJA) தவிசாளர் அஜ்வாத் டீன் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.


இதன்போது. இலங்கைக்கு உரித்தான Ceylon Sapphire இரத்தினக் கற்களுக்கு கண்காட்சியில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுத்து, இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பாதையில் FACETS Sri Lanka வை செலுத்துவதற்காக உலகெங்கிலும் இலங்கையின் இரத்தினக்கற்களை பிரபல்யப்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்ட வழிவகுக்கும் விதத்தில் இலங்கையின் இரத்தினக்கற்கள் துறையை பிரகாசமான வெளிகளுக்கு கொண்டு சென்று, 2023ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஏற்படுத்தும் அளவிறகு நிலைப்படுத்தும் தொலைநோக்கைக் கொண்டுள்ளது.

சர்வதேச வர்ண இரத்தினக்கற்கள் சங்கத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றும் இக்பால் கருத்து வெளியிடுகையில், Ceylon Sapphire இன் பிரத்தியேமாக அழகும், மதிப்பும் 2,500 வருடகாலமாக நன்கறியப்பட்டுள்ளதுடன், இவை உலகின் மிகவும் முக்கியமான இரத்தினக்கற்களின் வரிசையில் தம்மை ஸ்திரமாக பொருத்திக் கொண்டுள்ளன என்றார்.


அவர் இலங்கையினது இரத்தினக்கற்களின் பிரத்தியேகத்தன்மையை விளக்கி, சகல செயற்கை ஆபரணங்களும் வர்ண மாணிக்கக் கற்களை நடுநாயமாகக் கொண்டு செதுக்கப்படும் சர்வதேச அளவிலான வடிவமைப்புப் போக்குகளை உருவாக்குவது பற்றி FACETS Sri Lanka இன் ஊடாக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

உலகம் முழுவதும் அரச குடும்பங்களில் அணியப்படும் மிகச் சிறப்பான ஆபரணங்களை உதாரணமாகக் கருதினால், இலங்கையின் மாணிக்கக்கல் நடுநாயமாக இருக்கிறது. இந்தப் போக்கை மிகவும் சிறப்பாகவும், வலுவாகவும் மீண்டும் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

SLGJA யின் தவிசாளர் டீன் கருத்து வெளியிடுகையில், FACETS Sri Lanka ஆனது எப்போதும் துறைசார்ந்த முக்கியமான விடயங்களை ஓரிடத்திற்குள் கொண்டு வந்த பிரத்தியேக கண்காட்சியாகுமெனக் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காட்சியின் சிறப்பு அமர்வானது இலங்கையின் இரத்தினக்கற்களையும், ஆபரணங்களையும் வெறும் கற்களுக்கு அப்பால் கொண்டு சென்று, இலங்கையை உலகின் சிறப்பான தேசமாக உலக வெளியில் கொண்டு செல்கிறது.

பண்டைய காலந்தொட்டு இரத்தினதுவீபம் என்றழைக்கப்படும் சிறுதீவில் உள்ள இரத்தினக்கற்கள் புதையல்களை நாம் காட்சிப்படுத்துகிறோம்.
இது உலகின் எப்பாகத்திலும், எந்த ஆபரணத்திற்கும் விருப்பத்துடன் நாடப்படும் தெரிவாக இலங்கையின் இரத்தினக்கற்கள் மாறுவதை உறுதி செய்யும் முயற்சியின் சிறு ஆரம்பமாகும்.

NGJA யின் தவிசாளர் விராஜ் டி சில்வா கருத்து வெளியிடுகையில், இலங்கையின் இரத்தினக்கல் ஆபரணத் துறையானது ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் நடத்தப்படும் கண்காட்சிகள் மூலம் உயிரோட்டத்துடன் திகழ்கிறது என்றார்.

இந்தக் கண்காட்சிகள் மூலம் எமக்கு கிடைக்கும் பலாபலன்கள் சிறப்பானவை. சிறந்த அங்கீகாரமும் கிடைக்கிறது. இந்த உத்வேகத்தைத் தொடர்ந்து பேணி, அதனைக் கட்டியெழுப்ப வேண்டும்.

ஏனெனில், எமது இரத்தினக்கற்களின் பெறுமதி, அழகு, தனித்தன்மை ஆகியவற்றை உலகம் அறிந்து வைத்திருக்கிறது. நாம் மேலும் அறியச் செய்ய வேண்டும்.

உலகில் நாமறிந்த இரத்தினக்கற்களில் இலங்கையின் மாணிக்கக்கற்கள் சிறப்பானவை என்று கருதும் நிலையை ஏற்படுத்த வேண்டும், என்று அவர் கூறனார்.

FACETS Sri Lanka கண்காட்சிக் கூடத்தில், இந்தத் துறையின் முதுகெலும்பாகத் திகழக்கூடிய சிறிய மற்றும் நடுத்தர ரக தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புக்களை காட்சிப்படுத்தக்கூடிய தனியான இடமொன்றும் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) என்பது சுரங்க அகழ்வு முதற்கொண்டு தயாரிப்பு ஈராக மொத்த மற்றும் சில்லறை விற்பனை வரையலான சகல உப-துறைகளினது நலன்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து பிரதிபலிக்கும் தனியார்த்துறை அமைப்பாகும்.

இந்த அமைப்பானது, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் கரம் கோர்த்து FACETS Sri Lanka கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது.

Hot Topics

Related Articles