உலகம்

குறைந்த டிஜிட்டல் கட்டண தீர்வுகளை ஆரம்பிக்க WEBXPAY உடன் கைகோர்க்கும் HNB

Visa’s Acceptance Fast Track Program திட்டத்தின் கீழ் SMB களுக்கான குறைந்த டிஜிட்டல் கட்டண தீர்வுகளை ஆரம்பிக்க WEBXPAY உடன் கைகோர்க்கும் HNB

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கட்டண அணுகுமுறைத் தீர்வு வழங்குநரான WEBXPAY, நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB உடன் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMB) டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் மலிவு விலையில் POS தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கு கூட்டிணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

WEBXPAY அண்மையில் பிரவேசித்த தற்போதைய Visa Acceptance Fast Track திட்டத்தின் ஒரு பகுதியாக, SMB களுக்கு விற்பனை புள்ளி (POS) பிரவேசங்களின் புழக்கத்தை அதிகரிக்க இந்த கூட்டாண்மை WEBXPAY ஐ செயல்படுத்தும். தற்போது 96,000 POS பிரவேசங்கள் புழக்கத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

WEBXPAY தனது தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் POS சாதனங்களின் புழக்கத்தை வேகமாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,

Soft POS பிரவேசங்களான Tab to Phone மற்றும் பிற Android POS மெஷின்கள் SMB களுக்கு பணமில்லா கட்டண ஏற்புகளை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"WEBXPAY இலங்கை SMB களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில் சமீபத்திய தலைமுறை தொடுகையற்ற கொடுப்பனவுகளுக்கான அணுகலை விரைவாக விரிவுபடுத்துவதற்காக, தொழில்நுட்பம் சார்ந்த வங்கிச் சேவையில் – HNB இல் உண்மையான முன்னோடியுடன் பங்காளியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறது.

உலகளாவிய அனுபவங்களின் அடிப்படையில், தொடுகையற்ற கொடுப்பனவு முறைகள் அவற்றின் பரிவர்த்தனைகளை 4 மடங்கு அதிகரிக்கலாம், SMB துறைக்கு மிக முக்கியமான நேரத்தில் புதிய வணிகத்தை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இது அவர்களுக்கு உதவும்,” என WEBXPAY இன் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி உமர் சாஹிப் கூறினார்.

குறைந்த விலை POS மெஷின்களுக்கு கூடுதலாக, Tap to Phone கட்டணம் செலுத்துதல் போன்ற புதிய தீர்வுகள் SMB களுக்கான Game Changer நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் விற்பனையாளர்கள் எந்த Smartphone யும் உடனடியாக பணம் செலுத்தும் சாதனமாக மாற்ற முடியும்.


“இலங்கையின் SMB துறையானது நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது, இது இலங்கையில் பெரும்பாலான வேலைவாய்ப்பைக் கொண்டுள்ளது, ஆனால் டிஜிட்டல் கட்டணத் தீர்வுகளில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள், கருவிகள் மற்றும் நிபுணத்துவம் அவர்களிடம் பெரும்பாலும் இல்லை.

HNB, WEBXPAY மற்றும் Visa அனைத்தும் SMB களின் போட்டித்தன்மையை தீவிரமாக மேம்படுத்த தொழில்நுட்பம் மற்றும் கூட்டாண்மைகளின் சக்தியை மேம்படுத்துவதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் ஒன்றிணைந்துள்ளன.

மேலும் எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள SMB களுக்கு, தொடுகை இல்லாத கட்டண முறைககள் மற்றும் Tab to Phone (Soft POS) போன்ற தீர்வுகளை வெளியிடுவதற்கு நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்ற நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். என HNB PLCஇன் கார்ட் பிரிவுகளின் பிரதானி பௌதமி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles