உலகம்

உலக எழுத்தறிவு தினத்தைக் கொண்டாடிய சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ்

சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி, கல்வியின் மீது தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ், கல்வி தொடர்பான தனது முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையில் உலக எழுத்தறிவு தினத்தைக் கொண்டாடியுள்ளது.

உலக எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டெம்பர் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டு  வருவதுடன், இந்த ஆண்டு “எழுத்தறிவைக் கற்பிக்கும் இடங்களை உருமாற்றுதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது. தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர உலக எழுத்தறிவு தினம் நல்லதொரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.


அதனூடாக எழுத்தறிவே பண்பு, சமத்துவம் அனைத்தும் உள்ளடங்கிய கல்வி என்பவற்றுக்கு மூலாதாரமாக உள்ளது.

கடந்த காலங்களில் சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. நிலாந்த ஜயநெட்டி அவர்கள், “சமூக செயற்பாடுகள் மற்றும் தேசத்தின் கல்வியின் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் எமது நிறுவனமானது மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

நிதியியல் சேவைகள் மூலம் இலங்கையின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகங்களை வலுவூட்டும் அதன் முதன்மை நோக்கத்திற்கு மேலதிகமாக இச்செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வோதய சுவசெத சங்கத்தின் (Sarvodaya Suwasetha Society) கீழ் உள்ள சர்வோதய உயர்கல்வி நிறுவனம் (Sarvodaya Institute of Higher Learning), ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்திப் பிரிவு (Early Childhood Development Unit) மற்றும் பாலர் பாடசாலைகளின் வலையமைப்பு போன்ற முயற்சிகள் மூலம் இலங்கையில் சிறந்த கல்வியறிவு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் கற்பதற்கான இடங்களை உருவாக்குவதே எமது இலக்காகும்.

குறிப்பாக எமது பாலர் பாடசாலைகள், சர்வோதய கோட்பாட்டின் அடிப்படையில், சிறுவர்களுக்கு சிறப்பான கல்வி அத்திவாரத்தைப் பெறுவதை உறுதி செய்வதால், அவை எமது இதயங்களுக்கு மிகவும் நெருக்கமானவை. தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த செயல் திட்டங்களுக்கு மேலதிகமாக, கிராமப்புற மாணவர்களுக்கான கல்வியை மேம்படுத்தும் திட்டத்துடன், கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப அறிவை ஊக்குவிக்க கணினி கற்கை மையத்தையும் இந்த ஆண்டு ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன், ஒவ்வொரு இலங்கையரும் சிறந்த கல்வியையும், கல்வியறிவின் மூலம் கிடைக்கும் நன்மைகளை, குறிப்பாக ஒரு தேசமாக நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் அவற்றை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

Sarvodaya Institute of Higher Learning ஆனது வலையமைப்புக்களை உருவாக்கவும், கிராமப்புறங்களுக்கு சிறந்த கல்வி மற்றும் கல்வியறிவைக் கற்கும்  இடங்களை ஏற்படுத்தவும் உதவுகின்ற அதே நேரத்தில், மேலும் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்க நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது.

பெற்றோர்கள், சிறுவர்கள் மற்றும் சமூகத்திற்கு கல்வி கற்பதற்காக கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு மையங்களுக்கு Early Childhood Development Unit உதவி வருகிறது.

Sarvodaya Suwasetha Society ஆனது பாலர் பாடசாலைகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்கள், குழந்தைப் பருவ வளர்ச்சியில் பயிற்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்களின் பராமரிப்பின் கீழ் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றன.

தற்போது, இந்த வலையமைப்பானது 1,427 பாலர் பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களை இயக்கி வருகிறது. இங்கு சிறுவர்கள் மத்தியில் ஈடுபாடுகள் முன்னெடுக்கப்பட்டு, பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க கல்வியறிவைக் கற்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டில், கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப கல்வியறிவை மேம்படுத்த கணினி கற்றல் மையத்தையும் சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனம் நிறுவியுள்ளது. இது சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் மற்றும் இலங்கையின் முன்னணி மென்பொருள் உருவாக்குநர் நிறுவனமான Mithra Innovation ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு புதிய முயற்சியின் விளைவாகும். இம்முயற்சியின் மூலம், கிராமப்புற மாணவர்கள் மென்பொருள் நிரலாக்கத்தைக் கற்றுக் கொள்ளவும், அவர்களின் அறிவு எல்லைகளை விரிவுபடுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆரம்ப முன்னோடித் திட்டத்தின் முதல் 6 மாதங்களுக்குள், 25 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் உத்தரவாதத்துடனான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் தற்போது இந்தத் திட்டத்தின் அளவை விரிவுபடுத்தி ஒரு தொகுதிக்கு 100 மாணவர்களைச் சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. விரிவாக்கம் மற்றும் மேம்பாடு நடவடிக்கைகள் உரிய நேரத்தில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான மற்றொரு முயற்சியாக, சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் ஆனது கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து, பாடசாலை மட்டப் பரீட்சையில் கணிதத்தில் 40 க்குக் குறைவான புள்ளிகளைப் பெற்ற கிராமப்புறங்களில் உள்ள க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடாத்தியது.

ஆரம்ப கருத்தரங்கில், அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை உஹண மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற 2 நாள் நிகழ்ச்சிகளில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கெப்பித்திக்கொல்லாவ கல்வி வலயத்தைச் சேர்ந்த 17 பாடசாலைகளின் பங்குபற்றுதலுடன் சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் ஆனது அண்மையில் கெப்பித்திக்கொல்லாவ மத்திய கல்லூரியில் மற்றுமொரு கருத்தரங்கை நடத்தியது.

இக்கருத்தரங்குகள், மாணவர்கள் இலகுவில் விளங்கிக் கொண்டு அதில் ஆர்வத்தை தமக்குள் ஏற்படுத்தக்கூடிய வகையில் அவர்களுக்கு கற்பிக்கக்கூடிய, திறமையான மற்றும் தகுதிவாய்ந்த, கணிதத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.

பங்கேற்பாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 வேளை உணவு, காகிதாதிகள் மற்றும் மாதிரி தேர்வுத் தாள்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.

க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைவதற்கு அவர்களை வலுவூட்டுவது, சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் இலக்காக இருந்தது.

பங்கேற்ற மாணவர்களிடையே நடத்தப்பட்ட மதிப்பீட்டில், 80% பேர் கணிதத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதுடன், இதனால் அவர்கள் தமது உயர் கல்வியைத் தொடரவும் முடிந்துள்ளது.

சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் இலங்கையின் அபிவிருத்தி கடன் வழங்கலில் முன்னணியில் உள்ளது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு உட்பட விவசாயத் துறையில் நாடளாவிய ரீதியில் பிரசன்னமாக உள்ளது.

Hot Topics

Related Articles