புளொக்செயின் தொழில்நுட்பத்தின் நிலைபேறான வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சிகளில் நிறுவனத்தின் ஒரு முக்கிய படி பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி (cryptocurrency) பரிமாற்றத்திற்கு உரித்துடைய நிறுவனமான Binance, அதன் புதிய உலகளாவிய ஆலோசனை சபையை (Global Advisory Board – GAB) நிறுவியுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.
இச்சபையானது, பொதுக் கொள்கை, அரசாங்கம், நிதி, பொருளாதாரம், பெருநிறுவனங்கள் ஆகியவற்றில் புகழ்பெற்ற நிபுணர்களைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் செனட்டரும், சீனாவுக்கான தூதுவருமான Max Baucus தலைமையிலான இந்த உலகளாவிய ஆலோசனை சபையானது, சமீபத்தில் பிரான்சின் பரிஸில் கூடியது.
வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ தொழில்துறை எதிர்கொள்ளும் பெரும்பாலான சிக்கலான ஒழுங்குபடுத்தல்கள், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஆகியன தொடர்பில் Binance நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்குவதே இச்சபையின் பொறுப்பாகும்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட Binance நிறுவுனரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Changpeng Zhao, “கடந்த ஐந்து வருடங்களாக, crypto, blockchain, Web3 ஆகியவற்றுக்கான ஒரு அற்புதமான புதிய உலகத்திற்கு முன்னோடியாக இருப்பதில் Binance முன்னணியில் உள்ளது.
அவ்வேளையில், இவ்வாறான பிரச்சினைகள் உள்ளதா என யாரும் அறிந்திராத மிகப் பாரிய சிக்கல்களை நாம் சமாளித்தோம். கிரிப்டோ பயனர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலான இணக்கமான தீர்வுகளை வழங்குவதில் நாம் கவனம் செலுத்தினோம்.
அதே நேரத்தில் சமூக-பயனுள்ள புத்தாக்க கண்டுபிடிப்புகளின் வேகத்தையும் கடைப்பிடித்தோம். உலகளாவிய ஆலோசனை சபையானது, நவீன நிதி மற்றும் புளொக்செயினின் நன்மைகளை முழு உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான எமது பயணத்தின் அடுத்த பெரிய படியை பிரதிநிதித்துவம் செய்கிறது.” என்றார்.
கொரியாவைச் சேர்ந்த HyungRin Bang தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் cryptocurrency மற்றும் blockchain தொழில்துறைகள் புதிய கட்டங்களுக்குள் நுழைவதால், Binance நிறுவனத்தின் உலகளாவிய ஆலோசனை சபையின் ஒரு உறுப்பினராக இருப்பது எனக்கு ஊக்கமளிக்கிறது.
இங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மதிப்பிற்குரிய வல்லுநர்கள் தொழில்துறையின் நிலைபேறான தன்மையைப் பற்றி விவாதிக்கின்றனர்.
தகவல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தது எனும் வகையில், கொரியா அதன் உள்நாட்டு கிரிப்டோகரன்சி மற்றும் புளொக்செயின் துறையை கணிசமான அளவில் வளர்த்துள்ளது.
எனது வாழ்க்கை முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கண்டு நான் கற்றுக்கொண்ட நுண்ணறிவுகளுடன் இந்த ஆலோசனை சபைக்கு எனது பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்.” என்றார்.
கிரிப்டோ, புளொக்செயின், Web3 ஆகியன எதிர்கொள்ளும் கடினமான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட ஒழுங்குபடுத்தல் மற்றும் இணக்கம் கொண்ட சிக்கல்களை எடைபோடுவதன் மூலம், ஒட்டுமொத்த தொழில்துறையின் நிலைபேறான வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையில், இந்த ஆலோசனை சபையின் நிகரற்ற கூட்டு அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை Binance பயன்படுத்தும்.
Changpeng Zhao மேலும் தெரிவிக்கையில், “நாம் எப்பொழுதும் எமது பயனர்களுக்கு முதலிடம் கொடுக்கிறோம். இது கடந்த 5 வருடங்களில் அளவிட முடியாத, அற்புதமான வளர்ச்சிக்கு எமக்கு மிகவும் பயனுள்ள விடயமாக அமைந்தது.
இந்த ஆலோசனை சபை மூலம், உலகில் எங்கும் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த நிபுணத்துவத்தை பெறுவதன் மூலம் ஒழுங்குபடுத்தல் சிக்கலை நிர்வகிப்பதற்கான எமது திறனை நாம் உயர்வடையச் செய்கிறோம்.
Binance மற்றும் உலகளாவிய ஆலோசனை சபையின் முன்னணி நிபுணர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பானது, இணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் அவர்கள் உலகளாவிய ரீதியில் விவேகமான ஒழுங்குபடுத்தல்களை உருவாக்கும்போது, உலகளாவிய ஒழுங்குபடுத்தல் அமைப்புகளுடன் ஒரு கூட்டு உறவை உறுதி செய்தல் ஆகியவற்றில் நாம் கொண்டுள்ள கவனத்திற்கு ஒரு சான்றாகும்.
உலகாளவிய ஆலோசனை சபையில் (GAB) பின்வரும் நிபுணர்கள் அடங்குகின்றனர்: அமெரிக்காவின் மொன்டானா முன்னாள் செனட்டர் Max Baucus (USA), நைஜீரியாவின் முதல் வங்கியின் முதல் பெண் தலைவர் Ibukun Awosika (நைஜீரியா), கொரிய ஜனாதிபதி குழுவின் ஆலோசகர் HyungRin Bang (கொரியா), பிரான்ஸ் பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் Bruno Bezard (பிரான்ஸ்), Goldman Sachs நிறுவனத்தின் முன்னாள் சர்வதேச ஆலோசகர் Leslie Maasdorp (தென்னாபிரிக்கா), பிரேசில் மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் Henrique de Campos Meirelles (பிரேசில்), Citibank Mexico வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் Adalberto Palma (மெக்சிகோ), வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் பிரசார முகாமையாளருமான David Plouffe (USA), Deutsche Bank யின் Quantitative Solutions முன்னாள் உலகளாவிய தலைவர் Christin Schäfer (ஜேர்மனி), ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் House of Lords உறுப்பினருமான Lord Vaizey (UK), ஐரோப்பிய ஆணைக்குழு நிதிச் சந்தைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான David Wright (ஐரோப்பா)
Binance பற்றி
Binance என்பது உலகின் முன்னணி blockchain தொகுதி கட்டமைப்பு என்பதுடன், கிரிப்டோகரன்சி உட்கட்டமைப்பு சேவை வழங்குநருமாகும்.
நிதித் தயாரிப்பு தொகுப்பைக் கொண்டுள்ள இது, பரிமாற்ற அளவின் அடிப்படையில் மிகப்பெரிய டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்தை கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோரால் நம்பப்படும் Binance இயங்குதளமானது, பயனர்களின் பணச் சுதந்திரத்தை அதிகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வர்த்தகம் மற்றும் நிதி, கல்வி, தரவு மற்றும் ஆராய்ச்சி, சமூக நன்மை, முதலீடு மற்றும் அடைகாத்துப் பேணல், பரவலாக்கம், உட்கட்டமைப்புத் தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோ தொடர்பான சேவைகள் மற்றும் சலுகைகளின் இணையற்ற தயாரிப்புகளை இது கொண்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவலுக்கு : https://www.binance.com