உலகம்

25 ஆவது வெற்றி வருடத்தைக் கொண்டாடும் கெழும்பு உலக வர்த்தக மையம் (WTC)

இலங்கையின் சிறந்த வணிகத்துக்கான முகவரியாக விளங்கும் கெழும்பு உலக வர்த்தக மையம் ((WTC)) 25வது வெற்றி வருடத்தைக் கொண்டாடுகிறது.

மத்திய வணிக மாவட்டத்தின் இதயப் பகுதியில், ஈடுஇணையின்றி அமைந்துள்ள கொழும்பு உலக வர்த்தக மையம் (World Trade Center Colombo) நகரத்தின் மிகச்சிறந்த வணிக அடையாளமாகவும் வணிகத்துக்கான சிறந்த முகவரியாகவும் தொடர்ந்து விளங்கிவரும் நிலையில் வெற்றிகரமான தனது 25 வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது.

சிங்கப்பூர் Shing Kwan Group நிறுவனத்தின் நிறுவுனரும் நிறுவுனத் தலைவருமான எஸ்.பி.டாவோ அவர்களின் தொழில்முனைவு மனப்பான்மை மற்றும் தொலைநோக்கு சிந்தனையின் ஊடாக எதிர்காலத்துக்கான இந்த வணிகக் கட்டடத்தொகுதியை அமைக்கும் பணிகள் 1991ஆம் ஆண்டு ஆரம்பமாகின.

தனது இலக்கை அடையும் நோக்கில் டாவோ அவர்கள்ரூபவ் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமும் Echelon Square இன் காணிக்கான உரிமையைக் கொண்டிருந்ததுமான Overseas Realty (Ceylon) Ltd நிறுவனத்தைக் கையகப்படுத்தினார்.

இலங்கையின் முதலாவதும் முக்கியமானதுமான வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒருவர் என்ற ரீதியில் டாவோ தனது நோக்கத்தை நிறைவேற்ற மிகவும் பொருத்தமான வடிவமைப்பு உலகின் முன்னணியான கட்டுமானக் கம்பனி மற்றும் வங்கிகளில் கடன்களைப் பெறுவதில்லை ஆகிய மூன்று முக்கியமான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்.

இலங்கை மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சி தொடர்பில் டாவோ கொண்டிருந்த ஆர்வமே 39 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கோபுரங்கள் அமையப்பெற்றன. நாட்டின் துரித வளர்ச்சியின் ஆரம்பமாக இத்தீவின் உயரமான கட்டுமானத்துக்கான அடிக்கல் 1992ஆம் ஆண்டு 130 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் நாட்டிவைக்கப்பட்டது.

இது அந்நேரத்தில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக அமைந்ததுடன் வணிகத்தை பல வருடங்கள் முன்னோக்கிக் கொண்டு சென்றிருப்பதாகவும் கூறப்பட்டது.
1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 12ஆம் திகதி WTC Colombo உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

டாவோ அவர்கள் தனது துணிச்சலான தலைமைத்துவத்தினால் கடந்த வருடம் இறக்கும்வரை தலைவராகப் பணியாற்றி இந்தக் கம்பனியை கடந்த மூன்று தசாப்தங்களாக வழிநடித்தினார்.

கொழும்பில் வானுயர்ந்த கட்டடங்களில் அதிகமான வணிக வலையமைப்புக்களை ஒரே கூரையின் கீழ் கொண்ட கவர்ச்சிகரமான அலுவலக மையமாக இந்த இரட்டைப் கோபுரங்கள் விளங்குகின்றன.
இது பெருநிறுவனக் கட்டமைப்புக்களுக்கு உலகத் தரம்வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளை வழங்கி வருகிறது.

WTC Colomboஇன் சிறப்பான வசதிகள் மற்றும் சேவைகளுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமாக 100 நாடுகளில் 325 உலக வர்த்தக மைய வலையமைப்புக்களால் சர்வதேச வர்த்தகத்துக்கு வசதிகளை வழங்கிவரும் World Trade Center மற்றும் WTC வர்த்தக நாமத்துக்குச் சொந்தமான உலக வர்த்தக மைய சம்மேளனத்தின் (World Trade Centers Association) இன் தனித்துவமான அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ளது.

இங்குள்ள நிறுவனங்கள் மற்றும் வருகைதரும் விருந்தினர்களுக்குத் தொடர்ந்தும் சிறந்த வசதிகளையும் சேவைகளையும் வழங்கும் நோக்கில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் World Trade Center, Colombo தனது புனரமைப்புப் பணிகளை நிறைவேற்றியிருந்தது.

வர்த்தக மையத்தில் உள்ள நிறுவனங்களின் பணிச் சூழல் மற்றும் வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் அனைத்து வகையிலான உள்ளகக் கட்டமைப்புக்களும் மறுசீரமைக்கப்பட்டன.

Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ப்ரவிர் சமரசிங்ஹ குறிப்பிடுகையில்
“உலகத் தரம்வாய்ந்த மற்றும் உள்நாட்டில் விஸ்தீரணம் பெற்ற பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு கொழும்பின் இதயப் பகுதியில் சிறந்ததொரு பணியிடத்தை வழங்கும் இடமாக WTC அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


25வது வருடாந்த நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில் எம்முடன் இணைந்துள்ள நிறுவனங்கள் எமது பங்குதாரர்கள் பணியாளர்கள் மற்றும் எம்முடன் சேர்ந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் நாம் தொடர்ந்தும் சிறந்த வணிகத்துக்கான முகவரியாகச் செயற்படுவோம்.
WTC வர்த்தக நாமத்துடன் இணைந்ததாக தரமான அலுவலகப் பணியிடத்தை வழங்குவதில் நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு நாம் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம்” என்றார்.

தரமான வடிவமைப்பு சிறந்த வசதிகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் கொண்டுள்ள நற்பெயர் காரணமாக WTC Colombo இனால் புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் பல்தேசியக் கம்பனிகளை ஈர்க்க முடிந்துள்ளது.

இந்தக் கட்டடத்தில் இயங்கும் நிறுவனங்களில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு முதலீட்டுச் சபை Huawei Technologies, Glaxo SmithKline, Earnest & Young Global Deliver Services, Lanka IOC, Mitsubishi Corporation, Deloitte Consulting, Valible One, Bharti Airtel, China Harbour Engineering Company, Asia Broadcasting Corporationஉள்ளிட்டவை குறிப்பிட்டுக் கூறக்கூடியவையாகும்.

பெயர்பெற்ற அடையாளமாக விளங்கும் World Trade Center Colombo இன் உரிமையாளர், முகாமையாளர் மற்றும் உருவாக்கியவர் என்ற ரீதியில் Overseas Realty (Ceylon) PLC ஆனது ஆதனத்துறையின் அபிவிருத்தியில் நிபுணர்த்துவ அனுபவம் மற்றும் திறமையை வழங்குவதன் ஊடாக அலுவலக சந்தையில் தொடர்ந்தும் முன்னணியாளராகத் திகழ்கிறது.

கொழும்பு நகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடத் தொகுதிகளைக் கொண்ட பல்நோக்குத் திட்டமான Havelock City ஐ உருவாக்கியதும் இந்;நிறுவனமாகும்.

Hot Topics

Related Articles