உலகம்

வீட்டுப் பணிப் பெண்களுக்காக பீபல்ஸ் இன்‘ஷுவரன்ஸின் புதிய காப்புறுதி திட்டம்

வெளிநாட்டில் தொழில்புரியும் வீட்டுப் பணிப் பெண்களுக்காக, பீபல்ஸ் இன்‘ஷுவரன்ஸ் புதிய காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

பீபல்ஸ் இன்ஷுவரன்ஸ் நிறுவனம், இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்ற நிதி நிறுவனங்களின் முதன்மையாளரான மக்கள் வங்கி குழுமத்தின் உறுப்பினராகும்.

வறுமை காரணமாக வெளிநாட்டிற்குச் செல்லும் வீட்டு பணிப் பெண்களுக்கான புதிய காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வை கடந்த ஆகஸ்ட் 09 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட்டில் ஏற்பாடு செய்திருந்தது.


எமது நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றும் வெளிநாட்டில் தொழில்புரியும் வீட்டு பணிப்பெண்கள் எதிர்நோக்கும் திடீர் சம்பவங்களின் போது,
அவர்களை பொருளாதார ரீதியாக வலுவடையச் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட இக்காப்புறுதி திட்டம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார, பீபல்ஸ்
இன்ஷுவரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் இசுறு பாலபடபெந்தி ஆகியோரின் தலைமையில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பீபல்ஸ் இன்ஷுவரன்ஸ் நிறுவனத்தின் பிரதான
நிறைவேற்று அதிகாரி ஜீவனி காரியவசம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ விமலவீர, இலங்கை வெளிநாட்டு சேவைகள் பணியகத்தின் தலைவர் மகேந்திர
குமரசிங்க, அதன் உப தலைவர் ஹில்மி அஸீஸ், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் சுராஜ் தன்தெனிய, உத்தரவாதம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்
நிறுவன சங்கத்தின் (ALFEA) தலைவர் பாரூஸ் மரிக்கார், செயலாளர் எம்.எப்.எம் அர்ஸாட் மற்றும் பொருளாளர் சமன் நாக உட்பட ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

இந்த விஷேட காப்புறுதி திட்டத்தின் கீழ் பணியாளர்கள் இடைவிலகல் (Run Away), பணியாளர்கள் பணியினை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்தல் (Refusal to work), மருத்துவ பரிசோதனையில் தகுதயின்மையினால் பணியாளர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் (Repatriation due to medically
unfit), திடீர் விபத்து காரணமாக பணியாளர் மரணித்தல் (Accidented death), திடீர் விபத்து காரணமாக பணியாளர்கள் நிரந்தரமாக செயலற்று போதல் (Permanent total disablement due to accident), என்பன
காப்புறுத்தப்படுகின்றன.

இதுதொடர்பாக பீபல்ஸ் இன்ஷுவரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் இசுறு பாலபடபெந்தி பின்வருமாறு கருத்துரைத்தார். “அரச நிறுவனம் என்ற ரீதியில் எமது நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக நாங்கள் பாரிய
வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

எங்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெருமளவில்
ஈட்டித் தரும் வீட்டுப் பணிப் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்களை குறைத்து கொள்ள நடவடிக்கை எடுப்பது எமது கடமையும் பொறுப்புமாகும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

ஆகவே, இப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும், பிரச்சினைகளையும் இனங்கண்டு அவர்களுக்கு தேவையான
சலுகைகளை பெற்றுதருவதுதான் எமது நோக்கமாகும். இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வர்த்தக தொடர்பினை புதிய காப்புறுதி திட்டங்களை அறிமுகப்படுத்தி, சக்திவாய்ந்த ஒன்றாக முன்னெடுக்க
வேண்டும் எனபதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.”

மேலும் இத்திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைபடுத்த
உதவிய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார மற்றும் ALFEA சங்கத்தின் அதிகாரிகள் என்போருக்கு விசேடமாக நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

Hot Topics

Related Articles