உலகம்

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் மக்கள் பாவனைக்காக…..

தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரைக் கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளக்கப்படவுள்ளது.

இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரைக் கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்.


அதற்கமைய கட்டணங்களை செலுத்தி சகலருக்கும் தாமரை கோபுரத்திற்குள் பிரவேசித்து அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எம்.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கட்டணங்களை செலுத்தி பெற்றுக் கொள்ளும் நுழைவுச் சீட்டு மூலம் சகல பகுதிகளுக்கும் சென்று பார்வையிட முடியும். பிரவேச அட்டைக்கான கட்டணங்கள் 500 மற்றும் 2000 ரூபாவாகும்.

500 ரூபாய் செலுத்துபவர்கள் குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.

2000 ரூபாய் செலுத்துபவர்கள் தனியாக செல்ல அனுமதிக்கப்படுவர்கள்.

இவர்கள் வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டி ஏற்படாது.

பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க டொலர்களாகும்.  அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக கியூ.ஆர். தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார்  113 மில்லியன் டொலர் செலவில் தாமரைக்  கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது.

சீனாவிடம் பெறப்பட்ட கடன் தவணை 2024 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி முடிக்கப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே கடனாகப் பெறப்பட்ட சுமார் 66 மில்லியன் டொலர்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளன.

தாமரைக் கோபுரத்தில் 38 பல்வேறு  பொழுதுபோக்கு அம்சங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles