உலகம்

SLIM Brand Excellence Awards 2022க்கான புதிய விருது மதிப்பீடு வெளியிடப்பட்டது

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM), சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் தமது செயற்திறனைப் பெற்ற நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக 21வது SLIM Brand Excellence Awards 2022 ஐ 2022 ஆகஸ்ட் 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இந்த ஆண்டு Mettle of Resilience எனும் இலச்சினை அடிப்படையில் புத்தம் புதிய மதிப்பீட்டு செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. செப்டம்பர் 5ஆம் திகதி ஜேக் ஹில்டனில் நடைபெற்ற நிகழ்வில் இதுதொடர்பான மேலதிக விளக்கம் அளிக்கப்பட்டது.

மூலோபாயம், படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் மூலோபாய பயன்பாட்டினூடாக உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் வெற்றிகரமாக வாடிக்கையாளர் தடம்பதித்துள்ள வர்த்தக நாமங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக ஐந்து வர்த்தக நாம விருதுகள் மற்றும் பத்து சிறப்பு விருதுகளை வழங்குவதை SLIM வாடிக்கையாளர் நோக்கமாக கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் நுவன் கமகே, இந்த அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டவர்களை வரவேற்றதுடன், தற்போதைய பிரச்சினைகளுக்கு நேரடித் தீர்வாக இலங்கையின் வர்த்தக நாமத்தை முன்னெடுத்துச் செல்ல சந்தை முகவர்கள் முன்வர வேண்டுமென வலியுறுத்தினார்.

நடுவர் குழுவின் தலைவர் இமால் பொன்சேகா மற்றும் திட்டத் தலைவர் கவி ராஜபக்ஷ ஆகியோர், முன்னோக்கிச் செல்வதற்கான செயல்முறை மற்றும் இரண்டாவது சுற்று சமர்ப்பிப்புகளை ஆதரிக்கும் சமீபத்திய மதிப்பீட்டு அளவுகோல்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது, ​​சமீபத்திய செயல்முறை மற்றும் நடுவர் மன்றத்தின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன, மேலும் அதில் பங்குபற்றியவர்கள் மற்றும் டிஜிட்டல் பார்வையாளர்களின் பங்கேற்புடன் ஒரு முக்கிய கேள்விப் பதில் சுற்று ஒன்றும் இடம்பெற்றது.

அதிகாரப்பூர்வ கிரியேட்டிவ் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ”உங்கள் கதையை எப்படி சரியாக எழுதுவது; என்ற கருப்பொருளைக் கொண்ட உத்தியோகப்பூர்வ டிஜிட்டல் பங்குதாரர் Loops உங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெறுதல்”; என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இரண்டு அமர்வுகளால் இந்த நிகழ்வு அலங்கரிக்கப்பட்டது.

விற்பனையாளர்களுக்கு அவர்களின் வர்த்தக நாமக் கதையை சிறப்பாக வடிவமைக்க உதவுவதையும், சலுகையில் விரும்பப்படும் விருதுகளை வெல்வதற்கு என்ன டிஜிட்டல் மதிப்பீடுகளை கண்காணிக்க வேண்டும் மற்றும் வழங்க வேண்டும் என்பதையும் அவர்கள் மேலும் நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஐந்து முக்கிய விருது வகைகளில் ஆண்டின் தயாரிப்பு வர்த்தக நாமம், ஆண்டின் சேவை வர்த்தக நாமம், ஆண்டின் உலகளாவிய வர்த்தக நாமம், ஆண்டின் உள்நாட்டு வர்த்தக நாமம் மற்றும் ஆண்டின் ஏற்றுமதிவர்த்தக நாமம் ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட பத்து சிறப்பு விருதுகளில், ஆண்டின் புத்தாக்கமான வர்த்தக நாமம், ஆண்டின் சிறந்த புதிய வர்த்தக நாமம், ஆண்டின் சிறந்த புதிய நுழைவாளர், ஆண்டின் B2B வர்த்தக நாமம், ஆண்டின் CSR பிராண்ட், ஆண்டின் ஆன்லைன் வர்த்தக நாமம், SME உள்ளூர் வர்த்தக நாமம் ஆண்டுக்கான SME ஏற்றுமதி வர்த்தக நாமம் மற்றும் இரண்டு புதிய பிரிவுகளான ஆண்டுக்கான சுறுசுறுப்பான வர்த்தக நாமம் மற்றும் கிரீன் வர்த்தக நாமம் அகியன உள்ளடங்கும்.

அனைத்து உள்ளீடுகளும் நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய, அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அவர்கள் மிகவும் பொருத்தமான பிராண்டுகள், பிராண்ட் பாதுகாவலர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு நுட்பமான மற்றும் துல்லியமான மதிப்பீட்டு நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

உள்ளூர் வர்த்தக நாமங்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் நோக்கில், SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகளுக்காக புதிய Brand Book அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே நேரத்தில் தங்கள் பிராண்டின் விவரங்களை வழங்கலாம், பின்னர் தங்கள் வர்த்தக நாமம் ஒவ்வொரு விருதுகளுக்கும் தொடர்புடைய வகையின் கீழ் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடலாம்.

இன்றைய சிக்கலான வணிகச் சூழலில் இலங்கையில் சந்தைப்படுத்தல் நிபுணர்களின் சிறந்த பங்கை மதிப்பிடும் ஒரே தேசிய அளவிலான திட்டமாகும். எனவே, இந்த விருதுகள் தயாரிப்பு மற்றும் சேவை பிராண்டுகளை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கான சந்தைப்படுத்துபவர்களின் ஊக்கம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பிரதிபலிக்கின்றன.

21 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட Brand Excellence Awards, சிறந்த பிராண்டுகள் மற்றும் பிராண்ட் உரிமையாளர்களை அங்கீகரிக்கும் முதல் விருது வழங்கும் நிகழ்வாகும்.

வெறும் 26 விண்ணப்பதாரர்களுடன் தொடங்கிய இந்த விருதுத் திட்டம், இப்போது ஒவ்வொரு ஆண்டும் சாதனை முறியடிக்கும் விண்ணப்பதாரர்களின் பதிவு எண்ணிக்கையை வெளிப்படுத்துகிறது.

இது SLIM Brand Excellence Awards, வர்த்தகநாமங்கள், வர்த்தகநாம முகாமையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கான அபிவிருத்தி தளமாக, நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றமை பிரதிபலிக்கிறது.

Hot Topics

Related Articles