உலகம்

Rakuten Viber’s இன் கிரிக்கட் திருவிழா மீண்டும் வருகிறது

 

ஆசிய கோப்பை மற்றும் 2022 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக Rakuten Viber’s இன் கிரிக்கட் திருவிழா மீண்டும் வருகிறது
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இவ்வருட இறுதிவரை வேடிக்கையான செயற்பாடுகளுடன் ஒரு வகையான அனுபவத்தை Rakuten Viber தொடர்ந்தும் வழங்குகிறது.

குறுஞ்செய்தி செயலி என்ற ரீதியில் Cricket Vibes Channel ஊடாக இலங்கையில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டான கிரிக்கெட் உடன் அதன் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது.

கிரிகெட் சுப்பர்பொட் அங்குரார்ப்பணம் மற்றும் ஈடுபாடுகளைக் கொண்ட வினாவிடைப் போட்டிகள், மேலும் பல கிரிக்கெட் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் தேவை எனத் திட்டமிட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் கிரிகெட் போட்டிகள், நேரலை அறிவிப்பக்கள், போட்டி பற்றிய கணிப்புக்கள் போன்ற சுவாரஷ்யமான அம்சங்களை அனுபவிக்கக் கூடிய தானியங்கும் அம்சமாக புதிய சுப்பர்பொட் சனலில் சேர்க்கப்படும்.

இந்த உற்சாகத் தன்மையைத் தொடர்ந்து வழங்கி அவர்களில் கிரிக்கெட் ரசிகரைத் தீர்மானிக்க Viber நாளாந்தம் போட்டியை நடத்தும். இந்துக் கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்கி இரசிகர்கள் தமக்கான புள்ளிகளைச் சேர்த்துக்கொள்ள முடிவதுடன், அற்புதமான பரிசுகளையும் வெல்ல முடியும்.

இலவசமான தொடர்பாடல் செயலியானது இலங்கையில் கிரிக்கெட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க பல்வேறு போட்டிகளை அறிமுகப்படுத்துவது இது முதல் தடவையல்ல, ஒவ்வொரு தடவையும் இரசிகர்ளை இதன் மையத்தில் நிறுத்தியுள்ளது.

இந்த வருடத்தில் இதற்கு முன்னர் அதிஷ்ட வெற்றியாளர் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியை நேரடியாகப் பார்வையிட மைதானத்துக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.

“கிரிக்கெட் தொடர்பான எமது முந்தைய பிரசாரங்கள் வெற்றிகரமாக இருந்ததுடன், இதுபோன்ற ஒத்துழைப்புகள் மூலம் இரசிகர்களுக்கு உற்சாகமான செயல்பாடுகளையும் அம்சங்களையும் தொடர்ந்து வழங்க இது எங்களைத் தூண்டுகிறது.

அவர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் மற்றும் தங்கள் அணிகள் மற்றும் விருப்பமான வீரர்களை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது, அவர்கள் விளையாட்டில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் என்பதை இது நிரூபித்திருப்பது மாத்திரமன்றி, இலங்கை மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர்.


என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஸ்டிக்கர் பக்ஸ், லென்ஸ், விசேட சனல் பிரிவுகள் உள்ளிட்ட புத்தாக்கமான விடயங்களை அறிமுகப்படுத்த இவை எம்மை ஊக்குவிக்கின்றன.

இந்த ரசிகர் அதிகரித்துச் செல்வதைக் காண்பது மிகவும் அழகாக இருப்பதுடன், இதன் ஒரு பகுதியாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்” என Rakuten Viber இன் ஆசிய பசுபிக் கிராந்தியத்துக்கான சிரேஷ்ட பணிப்பாளர் டேவிட் சே தெரிவித்தார்.

ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக் கோப்பைக்காக எதிர்பார்ப்புக்கள் அதிகரித்திருக்கும் நிலையில் Cricwire மற்றும் Mirror Sports போன்ற இலங்கையின் உள்ளூர் வணிகங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் Viber கூடுதல் மைல்களை அடைந்துள்ளது.

உடனடியான குறுஞ்செய்தி செயலியைப் போன்று நுகர்வோருக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதில் தொடர்ந்தும் உயர்ந்துள்ளது.

ஆசியக் கோப்பையின் நெரிசல் நிறைந்த கொண்டாட்டத்தைக் காட்டிலும், விளையாட்டுக்கான அவர்களின் ஒருங்கிணைந்த உற்சாகத்தைக் காட்ட சிறந்த வழி எது? இதில் ஒன்று Cricket Vibes Channel ஐ நிபுணர்கள் எடுத்துக் கொண்டு கணிப்புக்கள் மற்றும் ஆட்டத்துக்குப் பிந்திய முடிவுகள் மற்றும் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர்.

2022 ஓகஸ்ட் 20ஆம் திகதி இரசிகர்களின் விருப்பத்துக்குரிய கிரிக்கெட் வீரரான பர்வேஸ் மஹரூப் மற்றும் பங்களாதேஷின் விளையாட்டு ஊடகவியலாளர் அரிபுல் ரொனி ஆகியோர் கிரிக்கெட் வீரர் தக்ஷின் அகமட் ஆகியோருடன் அமர்ந்து தனித்துவமான கிரிக்கெட் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இடதுகை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கிரிக்கெட்வீரர் லசித் மலிங்க ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்வு விரைவில் இடம்பெறவுள்ளது.

தனித்துவமான உள்ளடக்கங்களையும், புதுப்பிப்புக்களையும் பெற்றுக் கொள்ள Cricket Vibes Channel மற்றும் Cricket Vibes Channel ஆகியவற்றுடன் இணைந்திருங்கள்.

Hot Topics

Related Articles