உலகம்

பழங்குடி இனப் பெண் இந்திய ஜனாதிபதியாகிறார்

இந்தியாவின் 15 ஆவது புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவாகியுள்ளார்.

மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் அவர் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் இந்தியா தனது இரண்டாவது பெண் மற்றும் முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதியை தெரிவுசெய்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு ஜூலை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரவுபதி முர்மு போட்டியிட்டார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.

Hot Topics

Related Articles