உலகம்

பஸ் கட்டணங்கள் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

பஸ் கட்டண திருத்தங்கள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைய பயணிகளுக்கு பஸ் கட்டணங்களில் நிவாரணம் வழங்கப்படுவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே, புதிய கட்டணங்கள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர திட்டம் மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என மீனவ சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

தமக்கும், இந்தத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Hot Topics

Related Articles