உலகம்

DFCC வங்கியினால் இலங்கையின் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டல்

2022 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைவருக்குமான வங்கியான DFCC வங்கியினால், தொழில்முயற்சியாண்மை விருத்தி தொடர்பில் விசேட பயிற்சிப்பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குருநாகல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த சிறிய, நடுத்தரளவு பெண் தொழில்முயற்சியாளர்களுக்கும் பெண் தொழில் உரிமையாளர்களுக்கும் உதவும் வகையில் இந்த பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டது.

குருநாகல், ஹோட்டல் இந்தூராவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் 75 க்கும் அதிகமான பெண் தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

பெண் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பெண் உரிமையாண்மையில் இயங்கும் நுண், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சிகள் தொடர்பில் DFCC வங்கியின் கடன் வழங்கல் செயற்பாடுகள் அதிகம் கவனம் செலுத்துவதுடன், இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ள அந்தத் துறையின் வளர்ச்சிக்கு கைகொடுத்து ஆதரவளிப்பதிலும் தனது பங்களிப்பை வழங்குகின்றது.

பயிற்சிப்பட்டறை மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் இதர முயற்சிகள் பற்றி கலந்துரையாடுகையில், DFCC வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் SME பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட கருத்துத் தெரிவிக்கையில்,

“அனைவரைப் பற்றியும் தூர நோக்க அடிப்படையில் சிந்தித்து நிலைபேறான சேவைகளை வழங்கும் வங்கி எனும் வகையில், பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பெண் உரிமையாண்மையில் இயங்கும் வியாபாரங்களில் நாம் விசேட கவனம் செலுத்துகின்றோம்.

அதனூடாக, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குருநாகலைச் சேர்ந்த எமது பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு அதிகளவு பயனளிக்கக்கூடிய பயிற்சிப் பட்டறையை முன்னெடுப்பதற்கு நாம் முன்வந்திருந்தோம்.

இந்த நிகழ்வு சாதாரண ஒரு நாள் நிகழ்வாக அமைந்திராமல், பெண் தொழில் முயற்சியாளர்களுடன் ஈடுபாடுகளைப் பேணுவது பற்றி நாம் தொடர்ச்சியாக பேணி வரும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாகவும் அமைந்திருப்பதுடன், அதனூடாக அவர்களுக்கு அவசியமான வழிகாட்டல் மற்றும் ஆதரவுகளையும் வழங்குகின்றோம்.

இலங்கையில் பெண் தொழில் முயற்சியாண்மைக்கான எமது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், DFCC வங்கி அண்மையில் USAID உடன் கைகோர்த்து, கடன் பெறும் வாய்ப்பை மேம்படுத்துவது மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தலைமைத்துவத்தை வழங்குவதில் முன்னிலை வகிப்பதில் கவனம் செலுத்தியிருந்தது.

எமது பங்காளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன், அனைவருக்கும் பயனளிக்கும் இலங்கையை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிற்சிப்பட்டறையில் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு முக்கியமான பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டிருந்தன.

இதில் பதிவுகளைப் பேணல், நிதி முகாமைத்துவம் மற்றும் தொழில் முயற்சியாண்மை விருத்தி ஆகியவற்றுடன், வலையமைப்புத் தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவம், டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் கவனம் செலுத்தல் மற்றும் குறைந்த செலவில் சிறிய வியாபாரங்களுக்கு சமூக வலையமைப்பு சாதனங்கள் பற்றிய விளக்கங்கள் அடங்கியிருந்தன.

உணவு பதப்படுத்துகையில் பெறுமதி சேர்ப்பு முறைகளின் முக்கியத்துவம் தொடர்பான அமர்வினூடாக, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு பெறுமதி சேர்ப்பின் முக்கியத்துவம் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், அதனூடாக வருமானமீட்டுவது மற்றும் வாழ்க்கைக்கு நேர்த்தியான முறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

DFCC வங்கியின் நுண் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை பிரிவு (வட மேல் மாகாண அணி) மற்றும் குருநாகல் DFCC வங்கிக் கிளையின் அணியினர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்முயற்சியாண்மை பிரிவின் தொழில்முயற்சியாண்மை நிலையத்தின் தவிசாளர் கலாநிதி. ருக்மல் வீரசிங்க மற்றும் சன்ஷைன் ஃபுட் அன்ட் கிரியேஷன்ஸ் ஸ்தாபகரும் பெண் தொழில் முயற்சியாளருமான நிர்மலா விஜேரத்ன ஆகியோரின் ஆதரவுடன் இந்த பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் DFCC வங்கியின் நுண் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை உதவி உப தலைவர் சந்தன வனிகசேன மற்றும் DFCC வங்கியின் உப தலைவரும், பின்னகல் பிரீமியர் வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரியுமான ஷெரா ஹசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

DFCC வங்கி பற்றி

DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது.

வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2030, பசுமை பேணும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது.

புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது.

Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது.

DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable தரப்படுத்தல் மற்றும் Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable தரப்படுத்தல் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.

பெண் தொழில்முயற்சியாளர் ஒருவர் மங்கல விளக்கேற்றுவதையும் (இடது படம்), பயிற்சிப்பட்டறையில் பங்கேற்ற ஏனையவர்களையும் (வலது படம்) காணலாம்.

 

Hot Topics

Related Articles