உலகம்

“ இன்னல்களை அனுபவிக்கும் சக இலங்கை நுகர்வோர் மற்றும் பங்குதாரர்கள் தொடர்பில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்”

“எங்கள் தேசத்தின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் கொந்தளிப்பான இந்த காலகட்டத்தில், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக உத்வேகமளிக்கும் நலச்செழுமையுடன் தளைத்தோங்கிய ஒரு பாரம்பரியமான இலங்கை நிறுவனமாக, தேசத்தின் மோசமான பொருளாதார நிலைமைகள் காரணமாக கடும் இன்னல்களை அனுபவிக்கும் சக இலங்கை நுகர்வோர் மற்றும் பங்குதாரர்கள் தொடர்பில் நாம் எப்போதும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதுடன், அனைவரும் இந்த நிலைமையிலிருந்து விடுபட வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.

எத்தகைய துன்பங்கள் வந்தாலும், அதிலிருந்து மீண்டெழும் ஆற்றல் படைத்த எமது இலங்கைப் பொதுமக்களின் உத்வேகம் மற்றும் ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைவாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும், அதிலும் குறிப்பாக எமது ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளையும் போற்றும் நாம், அவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வருகிறோம்.
அனைத்து தரப்பினரிடையேயும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் சிறந்த வெளிப்படையான கொள்கைகள், நல்லாட்சி மற்றும் அரசியல் இலாப நோக்கற்ற அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவாறு, இழந்து போன எமது மகிமையையும், பெருமையையும் இலங்கை மீளப் பெறுவதற்கு வழிகாட்ட வேண்டும் என்ற அவர்களின் உன்னதமான அபிலாஷைகளுக்கு எமது ஆதரவைக் காண்பிக்கும் வகையில் நாமும் கைகோர்க்கின்றோம்.

கடந்த காலங்களில் பல சோதனைகள் மற்றும் இன்னல்களை வெற்றிகரமாக முறியடித்த ஒரு தேசம் என்ற வகையில், பொருளாதார நிச்சயமின்மை நிலவும் காலகட்டத்தை வெற்றிகொள்வதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, நமது தேசத்திற்கு உத்வேகம் அளிக்கவும், நமது வளர்ச்சி வேகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் பெற்றுக்கொள்ள நேர்மை மற்றும் திறமை அடிப்படையிலான அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பை வலியுறுத்தவும் இடம்பெற்று வருகின்ற அமைதியான மற்றும் கௌரவமான சமூக போராட்டத்திற்கு மலிபன் தனது பூரண ஆதரவை வழங்குகிறது.”

Hot Topics

Related Articles