உலகின் முதல் நிலை இன்சூரன்ஸ் வர்த்தகம் நாமம் அலியான்ஸ் தனது புதிய காப்புறுதித் தீர்வான திவிதாரன என்பதை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
காப்புறுதிதாரர்களுக்கு பரிபூரண ஆயுள் மற்றும் சுகாதார காப்புறுதிப் பாதுகாப்பை, கவர்ச்சிகரமான மற்றும் சகாயமான கட்டணத்தில் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிகம் கட்டண உணர்திறன் வாய்ந்த பாரிய சந்தைப் பிரிவுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் தயாரிப்பு, பெருமளவு அனுகூலங்கள் மற்றும் உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது.
வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களைப் பாதுகாப்பதுடன், பெறுமதியான விடயங்களை காக்கும் வகையில் பரிபூரண காப்புறுதித் தீர்வாக அமைந்துள்ளது.
விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் இதர அங்கத்தவர்களைக் கொண்ட பாரிய சந்தைக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திவிதாரன காப்புறுதியினால் நெகிழ்ச்சியான மற்றும் பொருளாதார ரீதியில் சகாயமான கட்டண நிலை அமைந்துள்ளதுடன், மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்த அடிப்படையில் தவணைக் கட்டணங்களை செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அத்துடன் காப்புறுதி காலப்பகுதியில், புதிய காப்புறுதித் திட்டமொன்றை பெற்றுக் கொள்ளாது, காப்புறுதி உள்ளம்சங்களை அதிகரித்துக் கொள்ளும் சௌகரியத்தையும் வழங்குகின்றது.
தற்போது தேசம் எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் இவை மிகவும் முக்கியமான உள்ளம்சங்களாக அமைந்துள்ளதுடன், அனைவருக்கும் வருமான மட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறை எதுவாக இருந்தாலும் பொருந்தக் கூடிய சிறந்த மற்றும் தங்கியிருக்கக்கூடிய காப்புறுதியை வழங்குவதாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு காப்புறுதிதாரரும் தனித்தனியான முதலீட்டுக் கணக்கை கொண்டிருக்கும் வசதியை திவிதாரன காப்புறுதியில் கொண்டிருப்பார்.
வருடாந்த பங்கிலாபம் பிரகடனம் செய்யப்பட்டு, காப்புறுதிதாரரின் கணக்கில் வைப்புச் செய்யப்படும். மேலும், காப்புறுதிதாரர்களுக்கு மேலதிக 20% Loyalty போனஸை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதுடன், தொடர்ச்சியான தவணைக்கட்டண செலுத்துகைகளின் போது முதிர்வுப் பெறுமதியில் சேர்க்கப்படும்.
திவிதாரனவினால் வழங்கப்படும் ஆயுள் காப்புறுதிக்கு மேலதிகமாக, அங்கவீன அனுகூலம், பாரதூரமான நோய் நிலை மற்றும் வைத்தியசாலை அனுமதி காப்பீடு போன்றனவும் காப்புறுதிதாரர்களுக்கு வழங்கப்படுவதுடன், தமது வாழ்க்கைத் துணை மற்றும் சிறுவர்களுக்கும் காப்புறுதிய நீடித்துக் கொள்ளும் வசதியையும் வழங்குகின்றது.
புதிய திவிதாரன காப்புறுதித் தீர்வு தொடர்பில் அலியான்ஸ் லைஃவ் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜயலால் ஹேவாவசம் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது வாடிக்கையாளர்களுக்கு தமது வாழ்க்கையில் பெறுமதியான விடயங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அவர்களின் கனவுகளை பின்தொடர்வதற்கு அவசியமான நம்பிக்கையை வழங்குவதற்கும் அலியான்ஸைச் சேர்ந்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
அந்த அர்ப்பணிப்பின் நீடிப்பாக திவிதாரன அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் முக்கிய அம்சங்களை இலகுவாகவும், சௌகரியமாகவும், சகாயமாகவும் மற்றும் அணுகக்கூடிய வகையிலும் பெற்றுக் கொள்ளும் வகையில் பரிபூரண தீர்வை நாம் வடிவமைத்துள்ளோம்.
எமது வாடிக்கையாளர் தெரிவுகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வைக் கொண்டுள்ளதுடன், இலங்கையின் காப்புறுதிப் பகுதியில் புரட்சிகரமான தீர்வாக திவிதாரனவை எம்மால் வடிவமைக்க முடிந்திருந்தது.
பெருமளவில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய, நெகிழ்ச்சியான திட்டம் எனும் வகையில், சந்தையில் காணப்படும் இலகுவில் அணுகக்கூடிய மற்றும் சகாயமான காப்புறுதித் திட்டமாக திவிதாரன அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், உள்நாட்டு சந்தையில் எமது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் கருதுகின்றோம்.” என்றார்.
உலகின் முன்னணி காப்புறுதி சேவை வழங்குநர்கள் மற்றும் சொத்துக்கள் முகாமையாளர் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அலியான்ஸ் குழுமம் திகழ்கின்றது.
70க்கும் அதிகமான நாடுகளில் 126 மில்லியன் தனியார் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களைத் தன்வசம் கொண்டுள்ளது.
அலியான்ஸ் வாடிக்கையாளர்கள் பரந்தளவு பிரத்தியேக மற்றும் கூட்டாண்மை காப்புறுதி சேவைகளினூடாகவும், பரந்தளவு சொத்து, ஆயுள் மற்றும் சுகாதாரத் திட்டங்களினூடாகவும் பயன் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், உதவிச் சேவைகள், கடன் காப்புறுதிகள் மற்றும் சர்வதேச வியாபார காப்புறுதிகளையும் வழங்குகின்றது.
தனது காப்புறுதி வாடிக்கையாளர்கள் சார்பாக 809 பில்லியன் யூரோக்களை நிர்வகிப்பதுடன், உலகின் மாபெரும் முதலீட்டாளர்களில் ஒன்றாக அலியான்ஸ் திகழ்கின்றது.
மேலும், நிறுவனத்தின் சொத்து முகாமையாளர்களாக PIMCO மற்றும் Allianz Global Investors (Allianz GI) ஆகியன திகழ்வதுடன், 1.9 ட்ரில்லியன் யூரோக்களுக்கு அதிக பெறுமதி வாய்ந்த மூன்றாம் தரப்பு சொத்துக்களை நிர்வகிக்கின்றது.
அலியான்ஸ் லங்கா என்ற ஒருங்கிணைந்த பெயரில் அழைக்கப்படுகின்ற Allianz Insurance Lanka மற்றும் Allianz Life Insurance Lanka ஆகிய நிறுவனங்கள், காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வர்த்தகத்தில் உலகளாவில் நிதிச்சேவைகளை வழங்கி வருகின்ற ஜேர்மனி Allianz SE நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமாகும்.
நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் ஆபத்து வாய்ப்புக்கள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் தனது உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கி அவர்களின் வணிக மூலோபாயத்திற்கு ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறது.