உலகம்

யாழ்ப்பாணக் கல்லூரி அணியை வீழ்த்தியது யாழ்.சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

105 ஆவது பொன் அணிகளின் போர் நேற்று காலை 9.30 மணியளவில் யாழ்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

ஏ.எப்.டெஸ்வின் தலைமையில் சென் பற்றிக்ஸ் கல்லூரியும், என்.விஸ்னுகாந் தலைமையில் யாழ்பாண கல்லூரியும் போட்டியிட்டன.


நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென் பற்றிக்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்திருந்தது.

முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி 56 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 49.3 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி 32 ஓவர்களில் 84 ஓட்டங்களுக்குள் அனைத்துவிக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில், சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு 27 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


27 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி 4.2 ஓவர்களில் எதுவித விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

போட்டியின் ஆட்டநாயனாக சென். பற்றிக்ஸ் கல்லூரியின் அணித்தலைவர் டெஸ்வின் தெரிவானார்.

 

Hot Topics

Related Articles