உலகம்

காதலைத் தொடர மறுத்த சிறுமியைக் கோடரியால் வெட்டி படுகொலை செய்த நபர்!

ஹாலி-எல பகுதியில் இளம்பெண் ஒருவரைக் கோடரியால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளி இன்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.
33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு சரணடைந்துள்ளதாக ஹாலி-எல பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேக நபருக்கும் சிறுமிக்கும் இடையே, முன்பு காதல் ஏற்பட்டிருந்ததாகவும் எனினும் தற்போது குறித்த நபர் தம்முடனான உறவை மீண்டும் ஆரம்பிக்கும்படி வற்புறுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கு குறித்த சிறுமி மறுப்பு வெளியிட்டதையடுத்து, நேற்று (மார்ச் 08) பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியை சந்தேக நபர் கோடரியால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த குறித்த 18 வயது சிறுமி, அவர் ஹாலி-எல உடுவரவத்த பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles