உலகம்

உலகில் முதல் தடவையாக இதயம் மற்றும் தைமஸ் சுரப்பி அறுவை சிகிச்சை!

உலகில் முதல் தடவையாக இதயம் மற்றும் தைமஸ் சுரப்பியை அறுவை சிகிச்சை ஒரு குழந்தைக்கு வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

இது பல நோயாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பலவீனமான இதயம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புடன் பிறந்த ஈஸ்டன் சின்னமன் என்ற குறித்த குழந்தை தனது முதல் ஏழு மாதங்களை மருத்துவமனையில் கழித்தார்.

அவருக்குப் பல இதய அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன, அதே போல் மீண்டும் மீண்டும் வரும் நோய்த்தொற்றுகளுக்கான சிகிச்சையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவரது மருத்துவர்கள், இதற்கு முன்பு இதயம் மற்றும் தைமஸ் சுரப்பியை இணைந்து பொருத்தும் பரிசோதனை மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கோரினர்.

அனுமதி கிடைத்தமைக்கு அமையக் குழந்தைக்கு இதயம் மற்றும் தைமஸ் சுரப்பி அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

தைமஸ் சுரப்பி செல்கள் எனப்படும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குகிறது. நமது உடலில் நோய் தொற்றை ஏற்படுத்தும் உயிர் அங்கிகளுக்கு எதிராக வெள்ளை இரத்த அணுக்கள் செயற்படுகின்றன.

Hot Topics

Related Articles