உலகம்

ரஷ்யாவின் தாக்குதலால் தீ பற்றி எரியும் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம்!

ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் தீப்பிடித்து எரிந்துவருவதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலின் போது ஆலையில் உள்ள ஒரு மின் உற்பத்தி அலகு பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையத்தின் ஒரு பகுதி தீப்பிடித்துள்ளது என்று RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளாது.

உக்ரைனின் மிகப்பெரிய அணுமின்நிலையமாக சபோரிஷியா அணுமின்நிலையம் உள்ளது. இந்த அணுமின்நிலையத்தில் நாட்டின் 15 உலைகளில் ஆறு உலைகள் உள்ளன.

1986-ம் ஆண்டு உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு நடந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையிலேயே, சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தகவல் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலில் அணுமின் நிலையம் தீப்பிடித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை நான்கு புறமும் சுற்றி வளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

சபோரிஷியா அணுமின் நிலையம் வெடித்தால், அது செர்னோபில் அணு உலை பாதிப்பை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் குலேபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கெய்வில் இருந்து தென்கிழக்கே சுமார் 550 கிலோமீட்டர்கள் (342 மைல்கள்) பகுதியில் கடுமையான சண்டை நடந்து வருகிறது என்று அருகிலுள்ள நகரமான எனர்கோடரின் மேயர் ஒரு பதிவில் தெரிவித்தார்.

உக்ரைனின் தலைநகரான கியேவில் இருந்து வடக்கே சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள செயலிழந்த செர்னோபில் ஆலையை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

Hot Topics

Related Articles