பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 45 பேர் பலியானதோடு, 65 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மசூதிக்குள் நுழைய முயன்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்ட தோடு மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 45 பேர் உடல் சிதறி பலியாகினர். 65 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.