அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான், லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் 52 வயதில் தாய்லாந்தில் உள்ள அவரது வில்லாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
அவர் சந்தேகத்திற்குரிய மாரடைப்பால் தாய்லாந்தில் காலமானதாக வார்னின் நிர்வாகம் சனிக்கிழமை அதிகாலையில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் பிளேபாய் லாரிகின் தனது புகழ்பெற்ற 15 ஆண்டுகால கிரிகெட் வாழ்க்கையில் 708 விக்கெட்டுகளை எடுத்தார்.
1993 ஆம் ஆண்டு ஆஷஸ் சுற்றுப்பயணத்தின் போது அவர் வீசிய முதல் பந்து நூற்றாண்டின் சிறந்த பந்தாக பதிவாகி அவருக்கு பெருமை சேர்த்தது.